• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

வெங்கடேஷ் பாபு இயக்கத்தில்  “வதம்” ட்ரெய்லரை வெளியிட்டது MX Player  ! 

by Tamil2daynews
February 10, 2021
in சினிமா செய்திகள்
0
வெங்கடேஷ் பாபு இயக்கத்தில்  “வதம்” ட்ரெய்லரை வெளியிட்டது MX Player  ! 
0
SHARES
35
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
ஷ்ருதி ஹரிஹரன் நடிப்பில், பெண் காவல் அதிகாரியை மையமாக கொண்ட முதல் ஆக்சன், டிரமா தொடராக உருவாகியுள்ள “வதம்” இணையதொடர்  12 பிப்ரவரி முதல் MX Player தளத்தில் இலவசமாக வெளியாகிறது.சென்னை 9 பிப்ரவரி 2021 : சக்தி பாண்டியன் தெளிவும், துணிவும் கொண்ட நேர்மையான IPS அதிகாரி. என்னவாயினும் உரிய நீதி வழங்கப்படவேண்டுமென்பதில் பெரும் நம்பிக்கை கொண்டிருப்பவர். ஒரு பெண் காவல் அதிகாரியை மையமாக கொண்ட முதல் ஆக்சன், டிரமாவாக  ஷ்ருதி ஹரிஹரன் நடிப்பில் உருவாகியுள்ள “வதம்” MX Original Series இணயதொடரை  MX Player தனது வாடிக்கையாளர்களுக்காக இவ்வாரம் வழங்குகிறது.
ஷ்ருதி ஹரிஹரன் முன்னணி கதாப்பாத்திரத்தில்,  சக்தி பாண்டியன் எனும் காவல் அதிகாரியாக நடிக்கும் இத்தொடரில், பெண் காவல்துறை குழுவுடன் இணைந்து, பிரபல தொழிலதிபர் ஒருவரின் கொலையை விசாரிக்கின்றார். கொலை வழக்கில் வெளியாகும் உண்மைகள் அவர் நினைத்தே பார்த்திராத பெரும் மர்ம முடிச்சுக்களை அவிழ்க்கின்றது. ஒரு பெண்ணாக அவரது துறையிலிருந்தும், அரசியல்வாதிகளிடமிருந்தும் பெரும் அச்சுறுத்தல்களை அவர் சந்திக்கின்றார். ஆனால் அவரது துணிவும், நேர்மையும் நீதிக்கான போரட்டமும் இணைந்து உண்மையை வெளிக்கொண்டுவருகிறது. 10 பகுதிகள் கொண்ட இந்த தொடரினை Applause Entertainment உடன் இணைந்து Tasa Media நிறுவனத்தினர் தயாரித்துள்ளனர். இத்தொடரினை வெங்கடேஷ் பாபு இயக்கியுள்ளார். இத்தொடர்  12 பிப்ரவரி முதல் MX Player தளத்தில் இலவசமாக வெளியாகிறது.
இயக்குநர் வெங்கடேஷ் பாபு இத்தொடர் குறித்து கூறியதாவது…
மிக அழுத்தமான கதைக்களம் கொண்ட இத்தொடர், துணிவும் நேர்மையும் கொண்ட  ஒரு பெண் காவல் அதிகாரியின் கதையை, ஒரே கட்டமாக பார்க்கும் ஆவலை, பரபரப்பை பார்வையாளர்களிடத்தில் ஏற்படுத்தும். கொலை குற்ற வழக்கை, விசாரிக்கும் கதைகளை, ரசிக்கும் ரசிகர்களுக்கு இத்தொடர் பெருவிருந்தாக அமையும். இத்தொடரின் கதை இளமையான, பயமற்ற, துணிவு மிகுந்த சக்தி பாண்டியன் எனும் காவல் அதிகாரி, நீதிக்காக சட்டத்தையும் வளைக்கும்  கதையினை கூறுவதாகும். ஷ்ருதி ஹரிஹரன் மிகுந்த அர்ப்பணிப்புடன் சக்தி பாண்டியன் பாத்திரத்திற்கு உயிர் தந்துள்ளார். மேலும் இத்தொடரில் பங்கு கொண்ட அனைவரும் பரப்பரப்பான தொடராக, இத்தொடர் உருவாக பாடுபட்டுள்ளனர்.
ஷ்ருதி ஹரிஹரன் தனது கதாபாத்திரம் பற்றி கூறியதாவது…..
ஒரு நடிகராக, எப்பொழுதும் எனக்கு சவாலான கதாபாத்திரங்களையே தேர்வு செய்வேன். தனிபட்ட முறையில் எனக்கு சக்தி பாண்டியன் கதாபாத்திரம் மிகவும் நெருக்கமானது. பயமில்லாமல் சரியானவைக்காக போராடும் கதாபாத்திரம் மற்றும் ஒரு தொழிலதிபரின் கொலையை தீர்க்கவேண்டும் என்ற தீர்மானத்துடன் இருக்கும் கதாபாத்திரம். நடிக்கும் போது, இந்த கதாபாத்திரம் தீவிரமான ஆக்‌ஷன் காட்சிகளையும் உள்ளடக்கி இருந்தது.  படபிடிப்பில் மிகவும் உற்சாகமாகவும், அதே நேரத்தில் மிகவும் கடினமாகவும் இருந்தது. இயக்குனர் வெங்கடேஷ் பாபு அளித்த ஆதரவு,  இந்த கதாபாத்திரத்தை திறம்பட செய்ய உதவியாக இருந்தது. எங்களுடைய கடின உழைப்பிலும், அர்பணிப்பிலும் உருவாகியுள்ள “வதம்” தொடர் பார்வையாளர்களுக்கு சிலிர்ப்பையும், மிகுந்த மகிழ்ச்சியையும் தரும் என நம்புகிறேன்.
மேலும் இத்தொடரில் அஷ்வதி வாரியர், செம்மலூர் அன்னம், ப்ரீத்திஷா ப்ரேம்குமரன் , விவேக் ராஜகோபால்  ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இத்தொடரின் 10 பகுதிகளும் முழுக்கவே இலவசாமாக 12 பிப்ரவரி முதல் MX Player தளத்தில் ப்ரத்யேகமாக ஒளிப்பரப்பாகிறது.
ட்ரெய்லரை இங்கு காணலாம்:
Download the App Now
Web: https://www.mxplayer.in/
MX Player குறித்து
MX Player  ஒரு பொழுதுபோக்கு இணைய ஆப் ஆகும். ஒவ்வொரு மாதமும்  200 மில்லியன் சந்தாதார்கள் பயன்படுத்தும் இந்த ஆப் அனைத்து விதமான இணைய பொழுதுபோக்கு அம்சங்களையும் வழங்குகிறது. வீடியோ ப்ளேபேக், வீடியோ ஸ்ட்ரீமிங், மியூசிக், கேமிங் என அனைத்தும் இதில் உள்ளது. பார்வையாளர்களின் மனவோட்டத்திற்கேற்ற அனைத்து பொழுதுபோக்கையும் ஓரிடத்தில் வழங்குகிறது. தற்போது விளம்பரங்களின் உதவியுடன் இயங்கும் இந்த ஆப் பத்து மொழிகளில் 2 00 000 மணி நேரம் ஓடும்  ப்ரீமியம் கதைகளை தன்னகத்தே கொண்டிருக்கிறது. விமர்சகர்கள் பாராட்டும் MX ஒரிஜினல்ஸ், ப்ரத்யேகமான எக்ஸ்க்ளூசிவ் கதைகள், திரைப்படங்கள், இணைய தொடர்கள் தொலைக்காட்சி தொடர்கள், செய்திகள் மற்றும் ஆடியோ மியூசிக் ஆகியவை இதில் அடங்கும். இந்த ஆப்  Android, iOS, Web, Amazon Fire TV Stick, Android TV மற்றும் OnePlus TV உட்பட பல இடங்களில் கிடைக்கிறது.
இந்த ஆப்பில் கேமிங் வசதியை பிப்ரவரி 2020 ல் அறிமுகப்படுத்த தற்போது MX Player ல் கேம் விளையாடும் சந்தாதாரர்களின்  எண்ணிக்கை 25 மில்லியன் அளவில் உயர்ந்திருக்கிறது. மற்ற சந்தாதாரர்களுடன் இணைந்து போட்டியில் கலந்து கொள்ளும் வகையிலான hyper casual மொபைல் கேம் தற்போது Android மற்றும் iOS ஆப்களில் கிடைக்கிறது.டைம்ஸ் இண்டர்நெட் Times Internet தளத்தில் இருந்து ( இந்தியாவின் மிகப்பெரும் பொழுதுபோக்கு மீடியா நிறுவனமான டைம்ஸ் ஆப் இந்தியா  Times of India உடைய டிஜிட்டல் துறை ) உருவான MX Player ஆப் உலகளவில் 12 நாடுகளில் UAE, US, Canada, UK, Australia, New Zealand, Bangladesh, Nepal, Afghanistan, Srilanka, Maldives, மற்றும் Bhutan நாடுகளில் பரவி வெற்றிகரமாக இயங்கிவருகிறது. MX தனது வாணிபத்தில் அடுத்ததாக குறுகிய கால  வீடியோக்களை ஒளிபரப்பும் MX TakaTak ஆப்பை அறிமுகம் செய்துள்ளது. குறு வீடியோவை தாங்களாகவே உருவாக்கி கொள்ளும் வசதி கொண்ட   இந்த ஆப் 15Mn+ இணைய பயன்பாட்டாளர்களுடன் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. மேலும் MX ShareKaro ஆப் ஃபைல்களை மின்னல் வேகத்தில் பரிமாறிக்கொள்ளும் வசதியை வழங்கி வருகிறது.
http://bit.ly/Vadham_Trailer
Previous Post

நடனம் ஆடும் ‘ஹன்சிகா மோத்வானி’

Next Post

இது விபத்து பகுதி படம் 12ந்தேதி ரிலீஸ்..!

Next Post
இது விபத்து பகுதி படம் 12ந்தேதி ரிலீஸ்..!

இது விபத்து பகுதி படம் 12ந்தேதி ரிலீஸ்..!

Popular News

  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • கல்விக்காக ஒரு பெண் மேற்கொள்ளும் பயணத்தை சொல்லும் படம்  “கமலி From நடுக்காவேரி” !

    0 shares
    Share 0 Tweet 0
  • ஐஆர்எஸ் அதிகாரி தோ.சமய முரளி இயக்கத்தில், சுங்கத்துறை விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜே.பி சினிமாஸ் தயாரிப்பில் முனீஸ்காந்த் மற்றும் பாலாஜி சக்திவேல் இணைந்து நடிக்கும் காமெடி பேண்டஸி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

    0 shares
    Share 0 Tweet 0
  • அன்பே டயானா – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஐஆர்எஸ் அதிகாரி தோ.சமய முரளி இயக்கத்தில், சுங்கத்துறை விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’

July 16, 2026

ஜே.பி சினிமாஸ் தயாரிப்பில் முனீஸ்காந்த் மற்றும் பாலாஜி சக்திவேல் இணைந்து நடிக்கும் காமெடி பேண்டஸி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

July 16, 2026

அன்பே டயானா – விமர்சனம்

July 16, 2026

ரெபெல் ஸ்டார்’ பிரபாஸ் நடிக்கும் ‘ஃபௌசி – Fauzi டிசம்பர் 3 ஆம் தேதி வெளியாகிறது

July 16, 2026

நடிகர் வைபவ் நடிப்பில் இருக்கை நுனியில் அமர வைக்கும் பரபர மர்டர் மிஸ்ட்ரி கதையாக உருவாகியுள்ள ‘மாறுவேஷம்’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது!

July 16, 2026

‘அன்பே டயானா’ டிரெய்லர் வெளியீட்டு விழா!!

July 15, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.