தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் கோலாகலமாக நடந்து முடிந்தது. இதில் தளபதி விஜய் படு குஷியாக காணப்பட்டார்.
அனிருத் இசையமைத்திருந்த மாஸ்டர் படத்தின் பாடல்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் வழக்கத்திற்கு மாறாக தளபதி விஜய் கோட்சூட் அணிந்து வந்திருந்தார். ஏன் என கேட்டதற்கு நண்பர் அஜித் மாதிரி போட்டு வரலாம் என்று ஆசைப்பட்டேன் என அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார்.
மாஸ்டர் படத்தில் தொண்ணூறுகளில் விஜய்யுடன் நடித்த நண்பர்கள் மீண்டும் இணைந்துள்ளனர். அதில் முக்கியமாக பல படங்களில் தளபதி விஜய்யுடன் இணைந்து நடித்தவர் நடிகர் ஸ்ரீமன். இவர் விஜய்யின் நெருங்கிய நண்பரும் கூட.
மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய்யின் ஹேர் ஸ்டைல் வித்தியாசமாக இருந்தது அனைவரும் அறிந்ததே. அதற்கு ரசிகர் ஒருவர் விஜய் விக் வைத்திருந்தாரா? என கேட்டார்.
அதற்கு பதிலளித்த நடிகர் ஸ்ரீமன், விக் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம் எனவும், அவர் எது செய்தாலும் படத்திற்காகவும் படக்குழுவினருக்கு மட்டுமே இருக்கும். படம் வெளியான பிறகு தங்களது கருத்துக்களை கூறலாம், தற்போது முதலில் கொரானாவுக்காக வேண்டிக்கொள்ளலாம் என்று பதிலளித்துள்ளார்.