• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Advertisement
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

FIR எஃப். ஐ. ஆர் திரைப்பட வெற்றிவிழா சந்திப்பு !

by Tamil2daynews
February 21, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், ரெட் ஜெயன்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் வெளியீட்டில் பிப்ரவரி 11 உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் “எஃப் ஐ ஆர் (FIR)”, ராட்சசன் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு, நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில், இப்படமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி அடைந்துள்ளது. இப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் என அனைவரிடத்திலும் பாராட்டுக்களை குவித்து வருகிறது,  இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

இந்நிகழ்வினில்

ரெட் ஜெயன்ட் மூவிஸ் M.செண்பகமூர்த்தி  அவர்கள் தயாரிப்பாளர், நடிகர் விஷ்ணு விஷாலுக்கு வாழ்த்து தெரிவித்து பரிசளித்தார்.

அமான் பேசியதாவது…
இந்த படத்தில் வாய்ப்பு தந்ததற்கு மனுவுக்கு, விஷ்ணு விஷால் ஆகியோருக்கு நன்றி. மக்கள் அனைவருக்கும் படம் பிடித்துள்ளது, அவர்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி.

நடிகர் பிரவீன் குமர் பேசியதாவது…
இந்த திறந்த மனதோடு ரசிகர்கள் கொண்டாடியது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சி தந்துள்ளது. இந்த படத்தில் வாய்ப்பு தந்ததற்கு மனுவுக்கு, விஷ்ணு விஷால் ஆகியோருக்கு நன்றி. இந்தப் படத்தை பார்த்த ஆடியன்ஸ்க்கும், ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.

நடிகர் அபிஷேக் பேசியதாவது…
வெற்றி மேடையில் நான் பேசுவது இது தான் முதல் முறை. இந்த வாய்ப்பு கிடைப்பது அரிது. விஷ்ணு இதில் உயிரை கொடுத்து உழைத்திருக்கிறார். ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.

நடிகர் ராம் பேசியதாவது…
இந்த வெற்றிப் படத்தில் பங்கு கொண்டது ரொம்ப சந்தோஷமாக, பெருமையாக இருக்கிறது. யாருக்கு வேண்டுமானாலும் இந்த வாய்ப்பு தந்திருக்கலாம், ஆனால் என் திறமையை நம்பி எனக்கு இந்த வாய்ப்பு தந்ததற்கு மனுவுக்கு நன்றி. சினிமாவை நேசித்து உழைக்கும் விஷ்ணுவிற்கு வாழ்த்துக்கள் அது தான் அவருக்கு வெற்றியை தந்துள்ளது. இவர்களது அடுத்தடுத்த படங்களிலும் நான் நடிப்பேன் என நம்புகிறேன் நன்றி.

இட்ஸ் பிரசாந்த் பேசியதாவது….
இங்கு தான் கீழே அமர்ந்து படம் பார்ப்பேன், இன்று இங்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது வாழ்க்கை. 10 வருடமாக விஷ்ணு பிரதரை தெரியும். அன்றிலிருந்து இப்போது வரை ஒரே மாதிரி பழகுகிறார். இந்த படத்தில் மிக ஜாலியாக வேலை பார்த்தேன். எல்லோரும் மிக நட்பாக உழைத்தோம்.  நான் என்னை நம்பியதை விட, மனு என்னை அதிகமாக நம்பினார். நிறைய இடங்களில் இருந்து பாராட்டுக்கள் வந்து கொண்டிருக்கிறது. ரைசா நடிக்கும் போது என்னை கிண்டல் செய்து கொண்டே இருப்பார். இது மனு மற்றும் விஷ்ணு விஷாலின் 8 வருட உழைப்பு,  இந்த வெற்றியில் நானும் இருப்பது மகிழ்ச்சி.

ஒளிப்பதிவாளர் அருள் வின்சென்ட் பேசியதாவது…
ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்திற்கு நன்றி. வெற்றிப்படத்தில் இருக்க வேண்டுமென்கிற எனது 8 வருட கனவை இப்படம் நிறைவேற்றியுள்ளது. விஷ்ணு ஒரு நல்ல மனிதனாக என்னை கவர்ந்துள்ளார். இந்த கோவிட் காலத்தில் எல்லோரும் கஷ்டப்பட்டோம், அதை மறந்து நம்மை மகிழ்ச்சிபடுத்த இந்த படம் வந்துள்ளது. மனு ஒரு பிரில்லியண்ட் ரைட்டர். இந்தப்படம் முதல் பிரதி பார்த்த போதே மிகப்பெரிய வெற்றிபெறும் என நம்பிக்கை வந்தது.  ரைசாவை படத்தில் அசத்திவிட்டார். அனைத்து நடிகர்களும் அட்டகாசமாக நடித்துள்ளனர். சில்வா  மாஸ்டர் அருமையாக சண்டைக்காட்சிகளை அமைத்துள்ளார். படத்தின் குழு அனைவருக்கும் நன்றி. மற்றும் வெற்றிப் படமாக்கிய ரசிகர்களுக்கும் மீடியா நண்பர்களுக்கும் நன்றி.

ஜீ.கே.பிரச்சன்னா பேசியதாவது…
பல இடங்களிலிருந்து படத்திற்கு பாராட்டுக்கள் வந்து கொண்டே இருக்கிறது. இந்த படத்தில் வேலை செய்வது சவாலாக இருந்தது. படத்திற்காக நிறைய உழைத்திருக்கிறோம். படம் வெற்றி பெற்றிருப்பது பெரும் மகிழ்ச்சி.

இசையமைப்பாளர் அஷ்வத் பேசியதாவது…
இது எனது முதல் சக்ஸஸ் மீட், நிறைய பாராட்டுகள் குவிந்து வருகிறது. படத்தை பற்றி அனைவரும் நல்லபடியாக எழுதியிருந்தார்கள் இந்த வெற்றி இயக்குநரை தான் சாரும், மனுவுக்கு நன்றி. இந்தப்படத்திற்கு ஒவ்வொரு பாடலுக்கும் லிரிகல் வீடியோ செய்து, என் பெயர் போட்டு என்னை விளம்பரபடுத்தினார்கள் அதற்கு தயாரிப்பு நிறுவனத்திற்கு மிகப்பெரிய நன்றி. ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டதால் இப்படம் பெரிய வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியை எனக்கு தந்த விஷ்ணு பிரதருக்கு நன்றி

டிசைனர் பூர்த்தி பேசியதாவது…
ஒரு வெற்றிப் படத்தில் வேலை செய்தது மிகுந்த மகிழச்சி. என்னை ஆதரித்த படத்தின் குழு அனைவருக்கும் நன்றி. வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.

நடிகர் பிரவீன் கே பேசியதாவது….
எனது நண்பர் மனு, விஷ்ணு சார், மற்றும் படக்குழு அனைவருக்கும் நன்றி. எங்கள் குழுவில் எல்லோரும் எல்லோரது வேலையையும், மதித்து நடந்தார்கள் அது தான் வெற்றிக்கு காரணம் என நினைக்கிறேன் நன்றி.

நடிகர் வினோத் பேசியதாவது…
எங்களை மாதிரி புது ஆக்டருக்கு இந்த தருணம் மிகப்பெரிது. எங்களை மேடையேற்ற வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் எங்களை மதித்த விஷ்ணு விஷால் சாருக்கு நன்றி. நடிகராக ஆக வேண்டுமென்பது 15 வருட ஆசை. யாரிடம் கேட்பது என தெரியவில்லை, என்னை நம்பி எனக்கு இந்த ரோலை தந்த மனு சாருக்கு மிகப்பெரும் நன்றி. இந்த குழு என்னுடைய இரண்டாவது குடும்பம். கோவிட் முடிந்து கஷ்டத்தில் இரண்டாவது ஷெட்யூல் தொடங்கிய முதல் நாளில் எங்களுக்கு சம்பளம் வந்ததா என கேட்டு, அதை அங்கேயே செக் போட்டு  தரச்சொன்னார் விஷ்ணு சார். சிக்கலான காலங்களில் ஒரு தயாரிப்பாளராக இப்படி நடந்து கொள்வது அவ்வளவு எளிதானதல்ல, அவரின் நல்ல மனதிற்கு அவருக்கு நன்றி.

நடிகர் ராகேஷ்  பேசியதாவது…
நடிகராக இது எனது முதல் படம். என் மீது நம்பிக்கை வைத்து, என்னை நடிக்க வைத்தார் மனு, இந்த குழுவினருக்கும், விஷ்ணு சாருக்கும் நன்றி.

போஸ்டர் டிசைனர் பிரதுள் பேசியதாவது….
மனு எப்படி டிசைன் செய்ய வேண்டுமென்பதில் தெளிவாக இருந்தார். என்னுடைய வேலை இதில் பெரிதாக எதுவும் இல்லை. நான் முதலில் டைட்டில் ரெடி செய்தது குள்ள நரிக்கூட்டம் திரைப்படம்  அதற்கு பிறகு மீண்டும்  இந்த வெற்றிப்படத்தில் இருப்பது மகிழ்ச்சி.

தங்கதுரை பேசியதாவது…
இந்தப்படத்தின் கதை கேட்ட போதிலிருந்தே இதன் மீது நம்பிக்கை இருந்தது. நீங்களும் ஆதரவு தந்துள்ளீர்கள்,  மக்களும் ரசித்தார்கள். படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது எல்லோருக்கும் நன்றி.

நடிகை ரைசா வில்சன் பேசியதாவது…
இந்த கேரக்டரை நான் செய்வேனா என எல்லோரையும் போல எனக்கும் டவுட் இருந்தது, ஆனால் மனு மட்டும் மிக நம்பிக்கையுடன் இருந்தார். விஷ்ணு விஷாலின் நம்பிக்கையும், அவரது தேர்வும் எனது மிகச்சிறந்த உழைப்பைத் தர, உந்தித் தள்ளியது. விஷ்ணு விஷால் இப்படத்தை செய்தே தீருவேன் என உறுதியாக இருந்தார். இந்த படத்தில் இரண்டு பேர் மட்டும் அந்தளவு நம்பிக்கையாக, உறுதியாக இருந்தார்கள். அப்படிப்பட்ட  படம் கண்டிப்பாக தோற்காது. படத்தை பாராட்டிய அனைவருக்கும் நன்றி.

இயக்குநர் மனு ஆனந்த் பேசியதாவது…
இந்த படம் என்னால் பண்ண முடியும் என நம்பி வாய்ப்பு தந்த விஷ்ணு விஷால்,  தங்கதுரை சார் இருவருக்கும் நன்றி. இந்த கதையை என்னால் எடுக்க முடியாது என நான் நினைத்த போது, இவர்கள் என் மீது நிறைய நம்பிக்கை வைத்தார்கள். படக்குழு அனைவருக்கும் எனது கஷ்டங்கள் தெரியும், என்னை நம்பிய விஷ்ணு விஷால் மற்றும் என் குழுவினர் அனைவருக்கும் நன்றி. ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இப்படத்தை நம்பி பெரிய அளவில் எடுத்து சென்றுள்ளனர். இந்தப் படத்தை ஆதரவு தந்து தூக்கிவிட்டது பத்திரிக்கை நண்பர்களாகிய நீங்கள் தான் உங்களுக்கு நன்றி. அனைவருக்கும் நன்றி.

நடிகர், தயாரிப்பாளர் விஷ்ணு விஷால் பேசியதாவது…
ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. மீடியா தரும் ஆதரவை நான் என்றும் மறக்கவே மாட்டேன். விஷ்ணு விஷால் அடுத்த லெவலுக்கு போய்விட்டார் என எல்லோரும் பாராட்டியிருந்தார்கள், அதற்கு காரணம் மனு தான். உங்களுக்கும், மனுவுக்கும் நன்றி. நான் மனுவிடம் கதை கேட்ட போது ஃபேமிலிமேன், மாநாடு வந்திருக்கவில்லை. அது வந்த போது மனுவை அழைத்து பேசினேன், என்னிடம் அப்போது இரண்டு சாய்ஸ் இருந்தது, ஆனால் நான் துணிந்து தயாரித்தேன். ஏற்கனவே இப்படத்தை ஒரு தயாரிப்பாளர் மறுத்து விட்டபோது, மீண்டும் இப்படத்தை நிறுத்தினால் ஒரு டைரக்டருக்கு என்ன நடக்குமென எனக்கு தெரியும். அதனால் நான் இதை தயாரித்தே தீருவது என முடிவு செய்தேன். ராட்சசசனுக்கு பிறகு நடிகராக இது எனக்கு இராண்டாவது வாய்ப்பு, ஆனால்  அதை வெற்றியாக சாதித்து காட்டிய மனுவுக்கு நன்றி. மைனா படத்தின் வெற்றி விழாவிற்கு போனபோது ரெட் ஜெயன்ட் மூவிஸ் எனது படம் பண்ணுவார்களா? என்ற ஆசை இருந்தது. நீர்ப்பறவை முதல் இப்போது வரை பெரிய ஆதரவு தந்துள்ளார்கள். ஷ்ரவந்தி ‘லைஃப் ஆஃப் பை’ ஹாலிவுட் பட நடிகை, என் படத்தில் எக்ஸிக்யூட்டிவ் புரடியூசராக பணியாற்றியுள்ளார். அவருக்கு நன்றி. தங்கதுரை சாருக்கு நன்றி. என் படத்தில் மூன்று நாயகிகள் நடித்துள்ளார்கள் ஆனால் ஒரு நிகழ்ச்சிக்கு கூட மூன்று பேரையும் என்னால் ஒன்றாக இணைக்க முடியவில்லை, அது ஒரு சின்ன கவலை. அப்புறம் உதய் அண்ணா, அவருக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது. குள்ள நரிக்கூட்டம் முதல் இப்போது வரை அவர் அளித்து வரும் ஆதரவிற்கு நன்றி. எல்லோரும் நான் சரியாக செக் எழுதிக்கொடுத்தேன் என்றார்கள், ஆனால் அதன் பின்னால் உள்ள கஷ்டம் எனக்கு மட்டும் தான் தெரியும், இந்தப்படம் ஒரு கட்டத்தில் பெரிய பட்ஜெட்டாக வந்து நின்ற நேரத்தில், கடுமையான சிக்கல் உண்டானது,  அப்பா வந்து கடன் வாங்காதே என்று அவரது பென்சன் பணத்தை தந்து உதவினார் அவருக்கு நன்றி.

Previous Post

தந்தையின் இசையில் மகன் பாடிய “நினைவெல்லாம் நீயடா”..!

Next Post

திரையுலகினரின் பாராட்டுகளைப் பெற்ற குறும்படம் ‘முதல் நீ முடிவும் நீ’

Next Post
பாலாவின் தயாரிப்பில்  ஜோசப் ன்  மறு உருவாக்கம் “விசித்திரன்”..!

திரையுலகினரின் பாராட்டுகளைப் பெற்ற குறும்படம் 'முதல் நீ முடிவும் நீ'

Popular News

  • மீண்டும் இணைந்த “பிளாக்” வெற்றிப்படக்கூட்டணி, “ஜீவா 46” கோலாகலத் துவக்கம்!!

    0 shares
    Share 0 Tweet 0
  • திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கும் கவின்- பிரியங்கா மோகன் ஜோடி

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஜென்ம நட்சத்திரம்’ வெளியீட்டுக்கு முன்பே ஹிட்! ஊடக விமர்சனங்களும் முன்னோட்டக் காட்சிகளும் வரவேற்பை பெற்றுள்ளன!

    0 shares
    Share 0 Tweet 0
  • பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வழங்க , Passion ஸ்டூடியோஸ், ஜி ஸ்க்வாட், தி ரூட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் யூட்யூப் சென்சேஷனல் ஐகான்கள் பாரத் & நிரஞ்சனின் “Mr. பாரத்” படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • *மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில், அமேசான் தயாரிப்பில் உருவாகியிருக்கும்  மாறா ட்ரெய்லர்,

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

சட்டமும் நீதியும் – விமர்சனம்

July 19, 2025
திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கும் கவின்- பிரியங்கா மோகன் ஜோடி

திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கும் கவின்- பிரியங்கா மோகன் ஜோடி

July 19, 2025

கெவி – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

July 19, 2025

ஜென்ம நட்சத்திரம் – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

July 19, 2025

நடிகர் உன்னி முகுந்தனின் UMF மற்றும் ஐன்ஸ்டீன் மீடியாவுடன் இணைந்து லெஜெண்ட்ரி இயக்குநர் ஜோஷி இயக்கும் அடுத்த பட அறிவிப்பு அவரது பிறந்தநாளன்று வெளியாகியுள்ளது!

July 19, 2025

திரையிலும், நிஜ வாழ்க்கையிலும் முத்திரை பதித்துவரும் நடிகை பவ்யா த்ரிகா

July 19, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.