• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

கைகோர்க்கும் நண்பர்கள்: உருவாகிறது  ஒரு திருமண காமெடி கலாட்டா

by Tamil2daynews
August 19, 2020
in சினிமா செய்திகள்
0
கைகோர்க்கும் நண்பர்கள்: உருவாகிறது  ஒரு திருமண காமெடி கலாட்டா
0
SHARES
16
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp


திரையுலகில் நெருங்கிய நண்பர்கள் என்பது மிகவும் குறைவு. இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்ற தகவல் வெளியாகும் போது பலரும் ஆச்சரியத்தை அளிக்கும். அப்படித்தான் சந்தீப் கிஷன் – இயக்குநர் சினிஷ் இருவரின் நட்பு. இருவருமே எந்தவொரு படத்திலும் இணைந்து பணிபுரியவில்லை என்றாலும் நெருங்கிய நண்பர்களாவே இருந்து வருகிறார்கள்.

அந்த நட்பு இப்போது திரையில் எதிரொலிக்கவுள்ளது. ஆம், இருவரது தயாரிப்பு நிறுவனமும் இணைந்து தெலுங்கு படமொன்றை தயாரிக்கவுள்ளனர். ‘வெங்கடாதிரி எக்ஸ்பிரஸ்’ என்ற பெயரில் சந்தீப் கிஷன் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இதன் மூலம் ‘கண்ணாடி’ படத்தின் தெலுங்கு பதிப்பை தயாரித்து வெளியிட்டார். அந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து ‘நட்பே துணை’ படத்தின் தெலுங்கு பதிப்பான ‘ஏ1 எக்ஸ்பிரஸ்’ படத்தை தயாரித்து வருகிறார்.

‘பலூன்’ படத்துக்குப் பிறகு ‘சோல்ஜ்சர்ஸ் ஃபேக்டரி’ என்ற நிறுவனத்தின் மூலம் தயாரிப்பாளராக மாறினார் இயக்குநர் சினிஷ். தொடர்ச்சியாக படங்கள் தயாரித்து வருகிறார். பெரும் எதிர்ப்பில் உள்ள ‘டிக்கிலோனா’ திரைப்படம் இவருடைய தயாரிப்பு தான். அதனை தொடர்ந்து அஞ்சலி நடிக்கும் படத்தை தயாரித்து வருகிறார். அதற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. தற்போது ஆனந்தி ஆர்ட் கிரியேஷன்ஸ் நிறுவனம் வழங்க வெங்கடாதிரி எக்ஸ்பிரஸ் – சோல்ஜ்சர்ஸ் ஃபேக்டரி இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ‘விவாஹ போஜனம்பு’ என்று தலைப்பிட்டுள்ளனர்.

இதன் டைட்டில் லுக் மட்டும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ராம் அப்பாராஜூ இயக்கவுள்ள இந்தப் படத்தில் நடிக்கவுள்ள நடிகர் யார் என்பது சஸ்பென்ஸ் என்கிறது படக்குழு. முழுக்க யதார்த்த வாழ்க்கையைச் சொல்லும் திருமண நகைச்சுவையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகவுள்ளது. கண்டிப்பாக ரசிகர்களுக்கு ஒரு திருமண காமெடி கலாட்டா தயார் என்பதை உறுதியாக நம்பலாம். இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் சினிஷ் தயாரிப்பாளராக தெலுங்கு திரையுலகிலும் அடியெடுத்து வைக்கிறார்.

Previous Post

“பத்துகாசு இல்லைனாலும் நான் பணக்காரன்டா!

Next Post

நயன்தாராவின் பெயரில் ஒரு மிரட்டலான பேய் படம்

Next Post
நயன்தாராவின் பெயரில் ஒரு மிரட்டலான பேய் படம்

நயன்தாராவின் பெயரில் ஒரு மிரட்டலான பேய் படம்

Popular News

  • “இதயம் முரளி” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!*

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் திரு வீர் – ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்திருக்கும் ‘ஓ ! சுகுமாரி’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா 2: தி ரூல்’ திரைப்படத்தை டிசம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் கொண்டாடத் தயாராகுங்கள்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ரசிகர்களை மகிழ்விக்க வரும் “லைகர்” நடிகர் விஷ் ..!

    0 shares
    Share 0 Tweet 0
  • நயன்தாராவின் பெயரில் ஒரு மிரட்டலான பேய் படம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நயன்தாரா- கவின் இணைந்து நடித்திருக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

July 20, 2026

ஜீவா லார்க் ஸ்டூடியோஸ் கூட்டணியில் – ‘தகப்பன்’ பூஜையுடன் இனிதே தொடக்கம்!

July 20, 2026

பிறந்தநாளில் 5 ஆண்டுகால கனவுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய நடிகை சாக்ஷி அகர்வால்!

July 20, 2026

இசைஞானி இளையராஜா இசையில் உருவாகும் ‘தட்டுவண்டி’

July 20, 2026

உலகளாவிய டிரெய்லர் வெளியீட்டிற்கு முன்னதாக, புது டெல்லியில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் முதல் அறிமுகம்

July 20, 2026

“இதயம் முரளி” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!*

July 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.