• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

’முஃபாசா: தி லயன் கிங்’ படத்தில் பணிபுரிவது ஒரு அரிய வாய்ப்பு!” நடிகர் நாசர்!

by Tamil2daynews
December 12, 2024
in சினிமா செய்திகள்
0
GPRK சினிமாஸ் வழங்கும் P. சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் டிசம்பர் 27 வெளியீடு
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

’முஃபாசா: தி லயன் கிங்’ படத்தில் பணிபுரிவது ஒரு அரிய வாய்ப்பு!” நடிகர் நாசர்!

 

கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ஆக்ஷன் பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘தி லயன் கிங்’ வெற்றியைத் தொடர்ந்து ’முஃபாசா: தி லயன் கிங்’ டிசம்பர் 20, 2024 அன்று வெளியாகிறது. தமிழில் முஃபாசா கதாபாத்திரத்திற்கு நடிகர்கள் அர்ஜுன் தாஸ், டாக்காவுக்கு அசோக் செல்வன், ரோபோ சங்கர் மற்றும் சிங்கம் புலி முறையே பும்பா மற்றும் டிமோன், ரஃபிக்கியின் இளைய பதிப்பிற்கு நடிகர் விடிவி கணேஷ் மற்றும் கிரோஸின் குரலாக நடிகர் எம். நாசர் ஆகியோர் குரல் கொடுத்திருக்கின்றனர்.
முஃபாசா: தி லயன் கிங் படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து நாசர் கூறுகையில், “”நடிகராக எனது பயணத்தைத் தொடங்கும் முன்பே, பல படங்களுக்கு டப்பிங் கலைஞராக பணியாற்றி உள்ளேன். லயன் கிங்கின் முதல் ரசிகன் நான். அந்தப் படத்திற்கான டப்பிங் வாய்ப்பு வரும்போது எப்படி நிராகரிக்க முடியும்? தனது தன்னம்பிக்கையால் ரசிகர்களைக் கவர்ந்த மறக்க முடியாத கதாபாத்திரம் கிரோஸ். டப்பிங்கின் போது அவரது திரை இருப்பை பொருத்த என்னால் முடிந்த முயற்சிகளை செய்திருக்கிறேன். கிரோஸிடம் எனக்குப் பிடித்தது என்னவென்றால், அவர் எதை நம்புகிறாரோ அதற்காக அவர் போராடுவார்.
இந்தப் படம் குழந்தைகளுக்கானது மட்டுமல்ல, பெரியவர்களுக்குமானது. ஒவ்வொரு பெரியவர்களிடமும் குழந்தை போன்ற குணம் இருக்கும். இந்தப் படம் அவர்களுக்கு ஒரு அற்புதமான அனுபவத்தை கொடுக்கும். முஃபாசா பாசிட்டிவிட்டியை பரப்பி, அனைவருக்கும் மகிழ்ச்சியான அனுபவத்தைக் கொடுக்கிறது. டிசம்பர் 20, 2024 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது” என்றார்.

’முஃபாசா: தி லயன் கிங்’ படத்தை பேரி ஜென்கின்ஸ் இயக்கியுள்ளார். இதற்கான பாடல்களை லின்-மானுவல் மிராண்டா எழுதியிருக்கிறார். ’முஃபாசா: தி லயன் கிங்’ திரைப்படம் டிசம்பர்  20, 2024 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்திய திரையரங்குகளில் வெளியாகும்.

Previous Post

பூஜையுடன் துவங்கிய புதிய படம் ‘சதுரங்க ஆட்டம் ஆரம்பம்

Next Post

இந்திய திரைப்பட கூட்டமைப்பின் துணைத் தலைவராக பிரபல திரைப்பட தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே கணேஷ் ஒருமனதாக தேர்வு.

Next Post
GPRK சினிமாஸ் வழங்கும் P. சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் டிசம்பர் 27 வெளியீடு

இந்திய திரைப்பட கூட்டமைப்பின் துணைத் தலைவராக பிரபல திரைப்பட தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே கணேஷ் ஒருமனதாக தேர்வு.

Popular News

  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆகஸ்ட் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது ‘ONE MAN’ திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஏஏஏ பிக்சர்ஸ் சார்பில், அனுராதா அன்பரசு தயாரிக்கும் படம் “கமாண்டோவின் லவ் ஸ்டோரி”

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜி.டி.நாயுடு(GDN) – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மிஷன்: பாசிபிள்’ மூலம் புதிய பரிமாணத்தில், 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வரும் கல்ட் கிளாசிக் திரைப்படம் ‘மூடர் கூடம் 2’!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ ராக்கிங் ஸ்டார்’ யாஷின் ‘டாக்ஸிக்’ டிரெய்லர் வெளியானது! ஆக்‌ஷன், மீட்சி, அழிவு என பிரம்மாண்ட உலகத்தை அறிமுகப்படுத்துகிறது!

August 10, 2026

நடிகர் மகேஷ்பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு, அப்டேட்டை வெளியிட்ட ‘வாரணாசி- #VARANASI’ படக் குழு

August 10, 2026

மன்னர் முத்து மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இணைந்து வழங்கும் “மன்னாரு”

August 10, 2026

ஆகஸ்ட் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது ‘ONE MAN’ திரைப்படம்

August 10, 2026

வரவேற்பைக் குவிக்கும் ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக் !!

August 10, 2026

டி சி (DC) – விமர்சனம்

August 10, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.