ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

குடிமகான் – விமர்சனம்

by Tamil2daynews
March 18, 2023
in விமர்சனம்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

குடிமகான் – விமர்சனம்

 

வங்கி ஏ.டி.எம்.மில் பணம் நிரப்பும் வேலை செய்து வருகிறார் நாயகன் விஜய் சிவன். இவர் மனைவி சாந்தினி, தந்தை சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார். விஜய் சிவன் குளிர்பானம் குடித்தாலே போதை ஏறும் விநோத நோயில் சிக்குகிறார். ஒரு நாள் ஏ.டி.எம்.மில் பணம் நிரப்பும்போது தானாகவே போதை ஏறி மெஷினில் நூறு ரூபாய் வைப்பதற்கு பதிலாக ஐநூறு ரூபாய் நோட்டுகளை வைத்து விடுகிறார். அந்த பணம் வாடிக்கையாளர்கள் கைக்கு போய்விடுகிறது. இதனால் விஜய் சிவன் வேலை பறிபோகிறது. இழந்த வேலையில் மீண்டும் சேர பணத்தை எடுத்த வாடிக்கையாளர்களை தேடி அலைகிறார்.

Vijay Sivan's Kudi Mahaan Movie Directed by Prakash N

இறுதியில் விஜய் சிவனுக்கு பணம் கிடைத்ததா? மீண்டும் வேலையில் சேர்ந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை. விஜய்சிவன் அப்பாவியான குடும்பத்தலைவர் கதாபாத்திரத்தில் யதார்த்தம் மீறாமல் இயல்பாக நடித்து கவனம் பெறுகிறார். மது குடிக்காமலேயே போதை ஏறி அவர் செய்யும் அலப்பறைகள் ரகளை. மனைவியிடம் பம்முவது, குழந்தையிடம் பாசம் காட்டுவது. வாடிக்கையாளர்கள் வீடுகளில் ஏறி இறங்கி ஏ.டி.எம்.மில் எடுத்த பணத்தை திருப்பி தருமாறு கெஞ்சுவது என்று எல்லா இடத்திலும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சாந்தினி குடும்ப தலைவி வேடத்தில் உணர்ச்சிகளை மொத்தமாக கொட்டி கலக்கி இருக்கிறார். குடிகார தாத்தாவாக வரும் சுரேஷ் சக்கரவர்த்தி பேரக்குழந்தையுடன் டான்ஸ் ஆடுவதும், இரண்டாம் திருமணம் செய்வது என அமர்க்களம் பண்ணியிருக்கிறார்.

 

Vijay Sivan's Kudi Mahaan Movie Directed by Prakash N

குடிமகன்களுக்காக குரல் கொடுக்கும் கேரக்டரில் நாமோ நாராயணன் வழக்கம்போல் எகத்தாள நடிப்பில் அதக்களம் பண்ணும்போது தியேட்டரே சிரிப்பலையில் அதிர்கிறது. ஜி.ஆர்.கதிரவன், கே.பி.ஒய் ஆனஸ்ட்ராஜ் ஆகியோரும் தங்கள் பங்குக்கு சிரிக்க வைக்கிறார்கள். நாயகனின் விநோத நோயை மையமாக வைத்து குடும்பமாக பார்த்து ரசிக்கும் வகையில் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து கலகலப்பான படத்தைக் கொடுத்துள்ளார் இயக்குனர் பிரகாஷ். பல இடங்களில் சிரிக்க வைத்து சில இடங்களில் சிரிக்க வைக்காமல் திரைக்கதை அமைத்து இருக்கிறார். குடியால் ஏற்படும் பாதிப்புகளையும் அழுத்தமாக காட்சிப்படுத்தியிருக்கலாம். தனுஜ் மேனன் இசையில் ‘கொக்கு கொக்கு பற பற’ பாடல் துள்ளல் ரகம். மெய்யேந்திரனின் ஒளிப்பதிவு படத்தை சுவாரசியப்படுத்த உதவியிருக்கிறது.

Previous Post

கண்ணை நம்பாதே – விமர்சனம்

Next Post

ராஜாமகள் – விமர்சனம்

Next Post

ராஜாமகள் - விமர்சனம்

Popular News

  • நடிகர் நாசர் ன் தம்பி ஜவஹர் விஜய் நடிக்கும் லியோ படத்தில் முக்கிய வேடம் ஏற்று நடித்து உள்ளார்.

    0 shares
    Share 0 Tweet 0
  • செந்தில் ராஜலட்சுமி கதாநாயகியாக நடிக்கும் ‘லைசென்ஸ்’ பட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்

    0 shares
    Share 0 Tweet 0
  • வெளியானது தோனி என்டெர்டெய்ன்மென்ட் எல்.ஜி.எம். செகண்ட் லுக் போஸ்டர்

    0 shares
    Share 0 Tweet 0
  • பழந்தமிழர் மருத்துவ கண்டுபிடிப்புகள்‌ பற்றி பேசும்‌ “பெல்‌”

    0 shares
    Share 0 Tweet 0
  • பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0

Recent News

பழந்தமிழர் மருத்துவ கண்டுபிடிப்புகள்‌ பற்றி பேசும்‌ “பெல்‌”

May 31, 2023

டக்கர்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

May 31, 2023

‘சூப்பர் ஸ்டார்’ வெளியிட்ட ‘காவி ஆவி நடுவுல தேவி’..!

May 31, 2023

செந்தில் ராஜலட்சுமி கதாநாயகியாக நடிக்கும் ‘லைசென்ஸ்’ பட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்

May 30, 2023

வெளியானது தோனி என்டெர்டெய்ன்மென்ட் எல்.ஜி.எம். செகண்ட் லுக் போஸ்டர்

May 30, 2023

நடிகர் நாசர் ன் தம்பி ஜவஹர் விஜய் நடிக்கும் லியோ படத்தில் முக்கிய வேடம் ஏற்று நடித்து உள்ளார்.

May 30, 2023
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2023 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2023 Tamil2daynews.com.

error: Content is protected !!