• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

இன்ஸ்டா இன்ஸ்டாகிராம் ஆல்பத்தில் கலக்கிய நக்ஷா சரண்..!

by Tamil2daynews
February 25, 2022
in சினிமா செய்திகள்
0
திரையுலகினரின் பாராட்டுகளைப் பெற்ற குறும்படம் ‘முதல் நீ முடிவும் நீ’
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
இளம் யூடியூப் பிரபலமும் கல்லூரி மாணவியுமான நக்ஷா சரண், பிரபல நடன இயக்குநர் சாண்டி ‘மாஸ்டர்’ உடன் இணைந்து ‘இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்…’ எனும் இன்றைய தலைமுறைக்கு பொருத்தமான செய்தியுடன் கூடிய இளமை ததும்பும் சுறுசுறுப்பான வீடியோ பாடலை உருவாக்கியுள்ளார். பிப்ரவரி 23-ம் தேதி சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் தமிழ்த் திரையுலகின் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்ற பிரமாண்டமான நிகழ்ச்சியில் சோனி மியூசிக் மூலம் வெளியிடப்பட்ட ‘இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்…’ மகளிர் சக்தியின் வண்ணமயமான கொண்டாட்டமாக அமைந்துள்ளது.
அதே நேரத்தில், வாழ்க்கையில் பெரிய உயரங்களை அடைந்த பிறகு வேர்களை மறந்துவிடக்கூடாது, தனிப்பட்ட ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை கவனித்துக்கொள்வது அவசியம், கல்வி மற்றும் தொழில் போன்றவற்றில் கவனம் செலுத்துவதன் முக்கியத்துவம் போன்ற அவசியமான செய்திகளை பெண்களிடையே கொண்டு சேர்ப்பதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது. நடிகையாக விரைவில் தனது திரைப்படப் பயணத்தை தொடங்கவுள்ள நக்ஷா சரண், சாண்டியின் நடன இயக்கத்தில் உருவாகியுள்ள இப்பாடலுக்காக அவருடன் இணைந்து நடனமாடி இருப்பதோடு, பாடலைப் பாடியும் உள்ளார். ‘இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்…’ வரிகளை எழுதியுள்ள பிரபல கன்னட இசையமைப்பாளர் லியோ இப்பாடலின் மூலம் இசையமைப்பாளராகவும் தமிழில் தடம் பதிக்கிறார்.
பெரிய பட்ஜெட் படங்களைப் போன்று அதிக பொருட்சலவில் இந்தப் பாடல் படமாக்கப்பட்டுள்ளது. கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்…’-க்கு ஹரிஷ் ஒளிப்பதிவு செய்ய, தினேஷ் கலை இயக்கத்தையும், ஸ்ரீதேவி ஆடை வடிவமைப்பையும், யாமினி சிகை அலங்காரம் மற்றும் ஒப்பனையையும் கையாண்டுள்ளனர். மாதவன் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். இந்த வீடியோவை முதலியார் பிரதர்ஸ் பிலிம் தயாரித்துள்ளது.கவர்ந்திருக்கும் மற்றும் கருத்தாழமிக்க வரிகள், உற்சாகமிக்க இசை மற்றும் விறுவிறுப்பான நடன அசைவுகளுடன் கூடிய ‘இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்…’ பாடலின் மூலம் பார்வையாளர்களின் இதயங்களில் இடம் பிடிப்பதை ஆஸ்கார்-கிராமி விருது பெற்ற இசை மேதை ஏ ஆர் ரஹ்மானின் இசைப் பள்ளியின் முன்னாள் மாணவியான நக்ஷா சரண் நோக்கமாகக் கொண்டுள்ளார்.
Previous Post

இன்ஸ்டா இன்ஸ்டாகிராம் ஆல்பம் வெளியீடு!

Next Post

வலிமையுடன் பவுடர் கிளிம்ப்ஸ் வெளீயீடு

Next Post
திரையுலகினரின் பாராட்டுகளைப் பெற்ற குறும்படம் ‘முதல் நீ முடிவும் நீ’

வலிமையுடன் பவுடர் கிளிம்ப்ஸ் வெளீயீடு

Popular News

  • மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் ஃபஹத் பாசில் நடிப்பில் கற்பனை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமான ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’ படத்தின் டீசர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆதிமூலம் கிரியேஷன்ஸ் முதல் தயாரிப்பில் KPY பாலா கதாநாயகனாக அறிமுகம்! இயக்குநர் ஷெரீஃபின் இயக்கத்தில் உணர்ச்சிமிகு ‘Feel Good’ திரைப்படம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • “வள்ளி மயில்” திரைப்பட டீசர் வெளியீட்டு விழா !

    0 shares
    Share 0 Tweet 0
  • 11 வில்லேஜர்ஸ் ஃபிலிம் புரொடக்‌ஷன் & யாதவ் ஃபிலிம் புரொடக்‌ஷன் வழங்கும், ஆறு பாலா இயக்கத்தில், ஆர்.எஸ்.கார்த்திக் நடித்த ‘போர்குடி’ படத்தை உலகளவில் திரையரங்குகளில் பிக்சர் பாக்ஸ் கம்பெனி வில்லியம் அலெக்சாண்டர் வெளியிடுகிறார்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் அடுத்த திரைப்படம் “மக்கள் காவலன்”

August 6, 2026

‘ஷம்பாலா’ வெற்றிக் கூட்டணியின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு… சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் ‘கரிகாலா’ – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

August 6, 2026

‘ஜி.டி.என்.’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!

August 6, 2026

ஆகஸ்ட் 28-ல் திரைக்கு வரும் ‘ஒன்ஸ் மோர்’ – அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

August 6, 2026
கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

August 4, 2026

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா!

August 4, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.