• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

பரபரப்பான இறுதிக்கட்ட படப்பிடிப்பில், வெற்றி நடிக்கும் “இரவு” திரைப்படம்!!!

by Tamil2daynews
September 13, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

பரபரப்பான இறுதிக்கட்ட படப்பிடிப்பில்,  வெற்றி நடிக்கும் “இரவு”  திரைப்படம்!!!

 

M10 Productions சார்பில், தயாரிப்பாளர் MS முருகராஜ் தயாரிப்பில் பக்ரீத் படப்புகழ் இயக்குநர் ஜெகதீசன் சுபு இயக்கத்தில், ‘எட்டு தோட்டக்கள், ஜீவி’  படப்புகழ் நாயகன் வெற்றி, பிக்பாஸ் புகழ் ஷிவானி நாராயணன் நடிக்கும், கோஸ்ட் திரில்லர் டிராமா திரைப்படமான “இரவு” படத்தின் படப்பிடிப்பு, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

வித்தியாசமான கதைகளங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர் வெற்றி, தரமான படங்களை தந்து பாரட்டுக்களை குவித்த இயக்குநர் ஜெகதீசன் சுபு இயக்கத்தில் நடிக்கும் திரைப்படம் “இரவு”. இப்படத்தில் பிக்பாஸ் புகழ் ஷிவானி நாராயணன் நாயகியாக நடிக்கிறார்.
வீடியோ கேம்ஸ் டிசைன் செய்யும் நாயகன் வாழ்வில், அவன் கற்பனையில் உருவாக்கிய பாத்திரங்கள், நேரில் வர ஆரம்பிக்கிறது. அதை தொடர்ந்து ஓர் இரவில் நடக்கும் பரபரப்பு சம்பவங்களே, இந்தத் திரைப்படம். பல பேய்க்கதைகள் வந்திருந்தாலும், இப்படம் உணர்வுகளை மையமாக கொண்டு, பரபரப்பான திரைக்கதையில், ஒரு திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ளது.
இப்படத்தில் வெற்றி, ஷிவானி நாராயணன் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, மன்சூர் அலிகான், சந்தான பாரதி, ராஜ்குமார், ஜார்ஜ், தீபா, பொன்னம்பலம், சேஷு, கல்கி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ள்னர்.

ஓர் இரவில் நடக்கும் இக்கதை, முழுக்க சென்னை ஈ சி ஆர் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. விரைவில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லர், இசை மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

தொழில் நுட்ப குழுவினர்
தயாரிப்பு நிறுவனம் – M10 Productions
தயாரிப்பாளர் – MS முருகராஜ்
இயக்குநர் –  ஜெகதீசன் சுபு
ஒளிப்பதிவு –  ஸ்ரீனிவாஸ் தயாநிதி
இசை – அரோல் கரோலி
எடிட்டிங் –  CS பிரேம் குமார்
கலை – K மதன் குமார்
வசனம் –  பாபு தமிழ்
பாடல் வரிகள் –  ஞானகரவேல், கார்த்திக் நேதா, கருணாகரன்
ஸ்டண்ட் – ஃபயர் கார்த்திக்
நடனம் – பாபா பாஸ்கர்

Previous Post

‘ஸ்டைலிஷ் தலைவி’ சன்னி லியோனின் தெறிக்கவிடும் ‘ ஓ மை கோஸ்ட்’ டீசர்..!

Next Post

‘மாமன்னன்’ படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் வடிவேலு

Next Post

'மாமன்னன்' படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் வடிவேலு

Popular News

  • பிரபல கேமராமேனும் தயாரிப்பாளருமான ரவியாதவ் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய “ரஞ்சன்” படக்குழு.

    0 shares
    Share 0 Tweet 0
  • மஞ்சு விரட்டு பின்னணியில் விமல் நடிப்பில் உருவாகும் “வடம்”!!

    0 shares
    Share 0 Tweet 0
  • “எல்லோரையும் நம்பாதே” என்பது ரவி மோகன் தனது இளம் பருவ ரவி மோகனுக்கு அளிக்கும் அறிவுரை.

    0 shares
    Share 0 Tweet 0
  • சோனி மியூசிக் வழங்கும் ராப்பர் கிட் சாந்தேவின் “நா வேற லெவல்” பாடல் பத்திரிக்கையாளர் சந்திப்பு !

    0 shares
    Share 0 Tweet 0
  • கியூப்ஸ் என்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில் ஷெரீப் முகம்மது வழங்கும் ‘காட்டாளன்’ திரைப்படத்தை ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் லெனின் மே 28ம் தேதி தமிழகமெங்கும் வெளியிடுகிறார்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

திரைப்பட இயக்குநராக இருந்து நடிகராக மாறிய பாலாஜி சக்திவேல், பைலட் திரைப்படமான ‘ஆஃப் தி ரெக்கார்ட்’டில் கதாநாயகனாக நடித்துள்ளார்!

May 30, 2026

“எல்லோரையும் நம்பாதே” என்பது ரவி மோகன் தனது இளம் பருவ ரவி மோகனுக்கு அளிக்கும் அறிவுரை.

May 30, 2026

பிரபல கேமராமேனும் தயாரிப்பாளருமான ரவியாதவ் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய “ரஞ்சன்” படக்குழு.

May 30, 2026

பேட்மிண்டன் விளையாட்டு பின்னணியிலான தமிழ் சினிமாவின் முதல் காதல் திரைப்படம்

May 30, 2026

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் வழங்கும் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் உலகமெங்கும் ஜூலை 31ஆம் தேதி வெளியாகிறது!

May 30, 2026

கரண் தயாநிதி மாறன் அறிமுகப்படுத்தும் கதைஷார்ட்ஸ் (KadhaiShorts) – மைக்ரோ டிராமாவுக்கென உருவாகும் தமிழ்நாட்டின் முதல் டிஜிட்டல் கதைத் தளம்

May 30, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.