
“அதிக பொருட்செலவில் இந்தப் படத்தை நாங்கள் தயாரித்து உள்ளோம். வரலாற்று பின்னணி படம் என்றாலே பெரிய பட்ஜெட் படமாக இருக்கும். அந்த வகையில் இந்தப் படத்தை நாங்கள் பிரம்மாண்டமாக தயாரித்து உள்ளோம்.
பாலிவுட் ஸ்டார் சன்னி லியோன் ஒரு மிகப்பெரிய நடிகை. அவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. அதனால் வெளிப்புற படப்பிடிப்பு என்பது சாத்தியம் இல்லாத ஒரு விஷயமாக இருந்தது. படத்தின் பெரும்பாலான காட்சிகளை மும்பையில் பல அரங்குகளை அமைத்து படமாக்கினோம். தமிழ் சினிமாவில் ஏற்கனவே பல இயக்குநர்கள், தயாரிப்பு நிறுவனங்கள் அவரை நடிக்க அழைத்தபோது அவர் ஏன் ஆர்வம் காண்பிக்கவில்லை என்று அவரை நேரில் சந்தித்தபோது தெரிந்தது. இந்தப் படத்தின் கதையை கேட்கும்போது எங்களுடைய நன்கு வடிவமைக்கப்பட்ட திட்டங்கள் அவருக்கு பிடித்திருந்த காரணத்தினால் உடனே நடிக்க சம்மதித்தார். படப்பிடிப்புக்கு சிறந்த ஒத்துழைப்பு கொடுத்ததோடு படத்தின் எல்லா விதமான புரமோஷனுக்கும் வருவதாக சொல்லி இருக்கிறார். இந்தப் படத்துக்குப் பிறகு சன்னி லியோனை தமிழ் சினிமா கொண்டாடும்” என்றார்கள்.
படத்தைப் பற்றி இயக்குநர் R.யுவன் கூறியதாவது: “இது ரசிகர்களை முழுக்க முழுக்க மகிழ்விக்கும் படமாக இருக்கும். இதில் புதிய அம்சம் என்ன இருக்கிறது என்று கேட்டால், வரலாற்று பின்னணியில் உருவான திகில் கதைகள் தமிழில் ஏராளமாக வந்திருக்கிறது. ‘காஞ்சனா’ சீரிஸ் படங்களை அதற்கு உதாரணமாகச் சொல்லலாம். அந்த வகையில் இந்தப் படம் திகில் படமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உள்ள படமாக இருக்கும். அதற்காக திரைக்கதையில் அதிக முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறோம்.

சன்னி லியோனை மும்பையில் சந்தித்து கதை சொன்னேன். அப்போது அவர் சொன்ன முதல் நிபந்தனை ‘எனக்கு ஆங்கிலத்தில் கதை சொல்ல வேண்டும்’ என்றார். அதற்காக நான் ஆங்கிலம் கற்றுக் கொண்டேன். சுமார் ஒரு மணி நேரம் ஆங்கிலத்தில் கதை சொன்னேன். அவருக்கு புரிந்ததா, புரியவில்லையா என்று தெரியவில்லை. ஆனால் நான் கதை சொல்லும்போது ஆர்வத்தோடு ரசித்து கேட்டார்.அது மட்டுமல்ல, ‘நான் நடித்த படங்களில் இது வித்தியாசமான படமாக இருக்கும்’ என்று சொன்னார்.

ஒருமுறை கேராவேனை விட்டு வெளியே வந்து விட்டால் அன்றைய காட்சிகள் முழுவதையும் நடித்து கொடுத்த பிறகே மீண்டும் கேராவேனுக்குள் செல்வார். ஒரு நாளின் துவக்கத்தில் இருக்கும் அதே உற்சாகம் நாள் முழுவதும் அவரிடத்தில் இருப்பதை பார்க்க முடியும்.