• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“கான் சிட்டி” இரண்டாவது சிங்கிள் வெளியீடு…, மாஸாக கவரும் “நான் தான் கிங்கு” பாடல்!

by Tamil2daynews
May 11, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
“கான் சிட்டி” இரண்டாவது சிங்கிள் வெளியீடு…, மாஸாக கவரும் “நான் தான் கிங்கு” பாடல்!

பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில், அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடித்திருக்கும் “கான் சிட்டி” திரைப்படம், வெளியீட்டுக்கு முன்பே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது. இப்படத்தின் முதல் சிங்கிள் “ரா ரா ரங்கையா” பாடல் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது சிங்கிள் “நான் தான் கிங்கு” பாடலும் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்து வருகிறது.

ஷான் ரோல்டன் இசையில், மோகன் ராஜன் எழுதியுள்ள இந்தப் பாடலை ஷான் ரோல்டன், கெலிதீ,  லலிதா சுதா ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். நாயகனின் குணாதிசயங்கள், புத்திசாலித்தனம் மற்றும் ஆளுமையை வெளிப்படுத்தும் வகையில் உருவாகியுள்ள இந்த லிரிக்கல் வீடியோ பாடல், முதல் முறை கேட்டவுடனேயே ரசிகர்களை ஈர்க்கும் தன்மையைக் கொண்டுள்ளது. மாஸ் மற்றும் ஸ்டைலிஷ் பாணியில் அமைந்துள்ள பாடலின் வரிகளும் இசையும், “கான் சிட்டி” படத்தின் உலகத்தை மேலும் சுவாரஸ்யமாகக் காட்டுகின்றன.

பாடலின் காட்சியமைப்பிலும் தனித்துவமான முயற்சிகள் இடம்பெற்றுள்ளன. அர்ஜூன் தாஸ் திரையில் காட்டும் ஸ்கிரீன் பிரசென்ஸ் மற்றும் பாடலின் அனல் பறக்கும் பீட்ஸ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. குறிப்பாக பாடலின் வரிகளும், இசை அமைப்பும் இளைஞர்களை கவரும் வகையில் அமைந்துள்ளதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
புதுமையான கதைக்களத்தில் உருவாகும் “கான் சிட்டி” படம், நகர வாழ்க்கையில் கடனில் சிக்கித் தவிக்கும் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் கதையை மையமாகக் கொண்டு, குடும்ப உணர்வுகள், நகைச்சுவை, பரபரப்பு ஆகிய அனைத்தும் கலந்த ஒரு முழுமையான ஃபேமிலி என்டர்டெயினராக உருவாகியுள்ளது.

இந்தப் படத்தில் அர்ஜூன் தாஸ் நாயகனாக நடிக்க, அன்னா பென் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, வடிவுக்கரசி, அகிலன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கியுள்ள இந்த படம், மங்களூர், சென்னை, மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் படமாக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை Netflix நிறுவனம் பெரும் தொகைக்குக் கைப்பற்றியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு அப்டேட்டிலும் ரசிகர்களுக்கு புதுமையான அனுபவத்தை கொடுத்து வரும் “கான் சிட்டி”, தற்போது “நான் தான் கிங்கு” பாடல் மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

LINK: https://www.youtube.com/watch?v=RMEyZXDQrCg
Previous Post

6 மொழிகளில் பிரமாண்டமாக உருவாகும் “சிலந்தி -2” !

Next Post

சென்சேஷனல் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் பிறந்தநாள் ஸ்பெஷல் போஸ்டர் ‘ரவுடி ஜனார்த்தனா’ படத்தில் இருந்து வெளியாகியுள்ளது!

Next Post

சென்சேஷனல் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் பிறந்தநாள் ஸ்பெஷல் போஸ்டர் 'ரவுடி ஜனார்த்தனா' படத்தில் இருந்து வெளியாகியுள்ளது!

Popular News

  • ஃபேண்டஸி உலகத்துக்குள் அழைத்துச் செல்லும் ‘டிரோன்ஸ்’ டிரெய்லர் வெளியானது!

    ஃபேண்டஸி உலகத்துக்குள் அழைத்துச் செல்லும் ‘டிரோன்ஸ்’ டிரெய்லர் வெளியானது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ZEE தமிழின் weekend-ஐ கலக்க வருது ‘சரிகமப’ & ‘மாஸ் பசங்க Vs கிளாஸ் பொண்ணுங்க’!

    0 shares
    Share 0 Tweet 0
  • சென்னையில் ‘தி புட்டு – Dhe Puttu’ உணவகத்தின் கிளையை தொடங்கிய நடிகர் திலீப் – காவ்யா மாதவன் தம்பதிகள்

    0 shares
    Share 0 Tweet 0
  • அனிருத்தின் அல்புகெர்க்கி ரெக்கார்ட்ஸ் வெளியிட்ட ஸ்மித் ஆஷர் இசையில் உருவான ‘அன்னக்கிளியே’ மியூசிக் வீடியோ ஆல்பம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ராவணனாக மிரட்டும் ராக்கிங் ஸ்டார் யஷ்! ராமாயணம் முதல் அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியானது

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

October 12, 2026

கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

October 12, 2026
‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

October 12, 2026

‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 5 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது!

October 12, 2026

ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

October 12, 2026

சிலம்பரசன் TR வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரைலர்… காதல், ஆக்ஷன், காமெடி என கமர்ஷியல் அம்சங்களுடன் கவனம் ஈர்க்கும் லியோ சிவக்குமாரின் புதிய படம்!

October 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.