• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

‘ஒரு நொடி’ – விமர்சனம்

by Tamil2daynews
April 26, 2024
in விமர்சனம்
0
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘ஒரு நொடி’ –  விமர்சனம் 

 

மணிவர்மன் இயக்கத்தில் உருவாகியுள்ள “ஒரு நொடி” படம் இன்று (ஏப்ரல் 26) தியேட்டரில் வெளியாகியுள்ளது. மதுரை அழகர் மூவிஸ் மற்றும் ஒயிட் லேம்ப் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் தமன் குமார், எம்.எஸ்.பாஸ்கர், வேல ராமமூர்த்தி, பழ.கருப்பையா, ஸ்ரீரஞ்சனி, கருப்பு நம்பியார், தீபா என பலரும் நடித்துள்ளனர். கே.ஜி.ரத்தீஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு சஞ்சய் மாணிக்கம் இசையமைத்துள்ளார்.

ஒரு நொடியில் நம் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகள் அல்லது நாம் எடுக்கும் முடிவுகள் வாழ்க்கையே புரட்டிப் போடும் என்ற அடிப்படை தத்துவத்தை கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

மகளின் திருமணத்தை விமரிசையாக நடத்துவதற்காக கடன் வாங்கி அதற்கு பதிலாக வேல ராமமூர்த்தியிடம் தன்னுடைய நிலத்தை அடமானம் வைக்கிறார் எம்.எஸ். பாஸ்கர். குறித்த காலத்திற்குள் பணத்தை தயார் செய்து அவர் திரும்ப கொடுக்கப் போகும் நேரத்தில் காணாமல் போகிறார். இதுதொடர்பாக எம்.எஸ். பாஸ்கர் மனைவி ஸ்ரீரஞ்சனி காவல்துறையில் புகார் அளிக்கிறார். இந்த வழக்கை இன்ஸ்பெக்டரான தமன்குமார் விசாரிக்கும் நிலையில், இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்.இந்த இரண்டு சம்பவங்களிலும் தமன்குமார் உண்மையை கண்டறியும் முயற்சியில் இறங்க, அடுத்தடுத்து எதிர்பாராத நிகழ்வுகள் நடக்கிறது. உண்மையில் இரண்டு சம்பவங்களிலும் நடந்தது என்ன?  என்பதை தொடக்கம் முதல் இறுதி வரை சஸ்பென்ஸ் திரில்லராக சொல்ல முயன்று வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர் மணிவர்மன்.

படம் முழுக்க தமன் குமாரின் போலீஸ் விசாரணையில் பயணிக்கும் நிலையில் அந்த கேரக்டருக்கு நியாயம் சேர்க்கும் வகையில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அவரின் குரல் நடிகர் அர்ஜூனை நியாகப்படுத்துவதோடு, மேனரிசங்கள் பல ஹீரோக்களின் போலீஸ் கேரக்டரை நினைவூட்டுகிறது. மேலும் வேல ராமமூர்த்தி, பழ. கருப்பையா, தீபா ஷங்கர், எம் எஸ் பாஸ்கர், டீக்கடைக்காரர், சலூன் கடைக்காரராக நடித்தவர்கள் என அத்தனை கேரக்டர்களும் கச்சிதமான நடிப்பை வழங்கி உள்ளார்கள்.
ஒரு நொடி படம் முழுக்க முழுக்க தியேட்டரில் ரசிகர்களை சீட்டை விட்டு எழ விடக்கூடாது என்ற எண்ணத்தில் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஆக எடுக்கப்பட்டுள்ளது. முகம் சுழிக்க வைக்கும் காட்சிகள் இல்லாமல் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை குடும்பத்துடன் தியேட்டரில் தாராளமாக பார்க்கலாம். அடுத்தடுத்து ட்விஸ்டுகள், சரியாக இடத்தில் ட்விஸ்ட்களை ஒன்றிணைப்பது என படம் ரசிக்க வைக்கிறது. குற்றம் செய்தவர்கள் யார் தான் என்ற சந்தேகத்தை படத்தில் நடித்த அனைத்து கேரக்டர்களிம் மீதும் கொண்டு சேர்த்து “ஒரு நிமிடம்” ரசிகர்களையே யோசிக்க வைத்து விடுகிறது.

படத்தின் பின்னணி இசை, ஒளிப்பதிவு, திரைக்கதை நகர்வு என அனைத்தும் சிறப்பாக கையாளப்பட்டுள்ளது. பாடல்கள் பெரிய அளவில் கதையை பாதிக்காத வண்ணம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் ஒரு பிளாஷ்பேக் கதையை சொன்னாலும் அதை சரியாக மெயின் கதையோடு இணைத்துள்ளார்கள். கிளைமேக்ஸ் காட்சி எதிர்பாராத ஒன்று தான் என்றாலும், சற்று பயமாகவே இருக்கிறது.

சில நிமிட காட்சிகள் பொறுமையை சோதித்தாலும் ‘ஒரு நொடி’ படம் தியேட்டரில் பார்க்க ஒர்த் ஆன படம் தான்..!

மொத்தத்தில் இந்த ‘ஒரு நொடி’ படம் சொல்ல வருவது என்னவென்றால் எதிலும் கவனம் தேவை என்பதுதான்.
Tags: Oru Nodi 2024Oru Nodi ReviewOru Nodi Review in TamilTaman KumarVela.Ramamurthy
Previous Post

”ஹாஃப் பாட்டில்” ஆல்பம் பாடலின் பத்திரிகையாளர் சந்திப்பு!!

Next Post

அருண் விஜய் நடிப்பில், BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பு, “ரெட்ட தல” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு நிகழ்வு !!

Next Post

அருண் விஜய் நடிப்பில், BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பு, “ரெட்ட தல” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு நிகழ்வு !!

Popular News

  • அசோக் செல்வன் நடிக்கும் ‘அன்பில் அவன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • மாஸ் மகாராஜா ரவி தேஜா நடிப்பில், சிவா நிர்வாணா இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘இருமுடி’ திரைப்படத்தின் தெலுங்கு மற்றும் தமிழ் மொழி டிரெய்லர் வெளியானது!

    0 shares
    Share 0 Tweet 0
  • நூறு சாமி திரைப்படம் ZEE5-இல் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்தது; காதல், குடும்பம் மற்றும் இரண்டாவது வாய்ப்புகளைப் பேசும் அதன் உணர்வுபூர்வமான கதையால் ரசிகர்களின் இதயங்களை வென்றது

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆகஸ்ட் 7 முதல் தமிழிலும் கிடைக்கும் ZEE5-இல் பிரம்மாண்ட டிஜிட்டல் பிரீமியருக்கு தயாராகும் ‘லெனின்’

    0 shares
    Share 0 Tweet 0
  • விசாகப்பட்டினத்தில் பிரம்மாண்டமாக ‘AAA சினிமாஸ்’ தொடங்கி, தனது பொழுதுபோக்கு சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மாஸ் மகாராஜா ரவி தேஜா நடிப்பில், சிவா நிர்வாணா இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘இருமுடி’ திரைப்படத்தின் தெலுங்கு மற்றும் தமிழ் மொழி டிரெய்லர் வெளியானது!

August 13, 2026

நூறு சாமி திரைப்படம் ZEE5-இல் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்தது; காதல், குடும்பம் மற்றும் இரண்டாவது வாய்ப்புகளைப் பேசும் அதன் உணர்வுபூர்வமான கதையால் ரசிகர்களின் இதயங்களை வென்றது

August 13, 2026

அசோக் செல்வன் நடிக்கும் ‘அன்பில் அவன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

August 13, 2026

‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லரை வெளியிட்ட Netflix – வித்தியாசமான ட்விஸ்டுடன் வரும் முழுமையான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம்!

August 12, 2026

நடிகர் வைபவ்வின் ‘மாறுவேஷம்’ திரைப்படம் யூ/ஏ சான்றிதழுடன் அக்டோபர் 1 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

August 12, 2026

‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !

August 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.