• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

பாகுபலி எழுத்தாளரின் கைவண்ணத்தில், ஸ்டைலிஷ் ஹீரோ கிச்சா சுதீப் நடிக்கும் பிரமாண்ட திரைப்படம் !!

by Tamil2daynews
September 2, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

பாகுபலி எழுத்தாளரின் கைவண்ணத்தில், ஸ்டைலிஷ் ஹீரோ  கிச்சா சுதீப் நடிக்கும் பிரமாண்ட திரைப்படம் !! 

 

மிஸ்டர் பெர்ஃபெக்ட், ஸ்டைலிஷ் ஹீரோ மற்றும் பான் இந்திய நட்சத்திர நடிகர் கிச்சா சுதீப்பின் பிறந்தநாளை முன்னிட்டு, இந்திய திரையுலக ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி.

மகதீரா, பாகுபலி, ஆர்ஆர்ஆர் போன்ற வெற்றிப் படங்களின் கதாசிரியர்,  திரைக்கதை வித்தகர், பான் இந்தியா என்ற கருத்தை முதன் முதலில் உருவாக்கியவர், பிரபல இயக்குநர்  எஸ்.எஸ்.ராஜமௌலி  படங்களின் கதாசிரியர், திரு வி விஜயேந்திர பிரசாத் அவர்கள், புகழ்பெற்ற கன்னட நிறுவனமான ஆர்.சி.ஸ்டுடியோவின் அறிமுகப் படத்திற்கான திரைக்கதையை மேற்பார்வையிடுகிறார். பிரமாண்டமாக உருவாகவுள்ள இந்த பான் இந்தியப் படத்தில் நாயகனாக ஸ்டைலீஷ் ஸ்டார் கிச்சா சுதீப் நடிக்கிறார். இப்படத்தினை இயக்குநர்  ஆர்.சந்துரு இயக்கவுள்ளார்.

இந்த மூன்று ஜாம்பவான்களும் இணைந்து உருவாக்கும் இந்தப் படத்திற்காக ஒட்டுமொத்த இந்தியாவே ஆவலுடன் காத்திருக்கிறது, இப்படம் இந்த வருடத்தின் மெகா ஹிட் படமாக அமையும். ஆர் சி ஸ்டுடியோஸ் கர்நாடகாவில் ஒரு புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமாகும். இந்நிறுவனத்தின்  தயாரிப்பில், இந்த ஆண்டு 5 பெரிய படங்கள் திரைக்கு வருகிறது. இயக்குநர் ஆர் சந்துரு இதுவரை பணியாற்றிய படங்கள் மிக ஸ்பெஷலானதாக  இருக்கும் அந்த வகையில்,  இந்தப் படமும் பல சிறப்புகளை கொண்டதாக இருக்கும். கிச்சா சுதீப்பின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில், ரசிகர்களுக்கு பிரத்யேக விருந்தாக  இப்படத்தின் டைட்டிலை வெளியிட ஆர் சி ஸ்டுடியோஸ்  நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

விஜயேந்திர பிரசாத் திரைக்கதை மேற்பார்வை, கிச்சா சுதீப் நடிப்பு மற்றும் இயக்குநர் ஆர் சந்துரு இயக்கம் என இந்த மூன்று ஜாம்பவான்கள் இணைந்து உருவாக்கவுள்ள திரைப்படத்திற்காக ஒட்டு மொத்தத் திரையுலகமும் வெகு ஆவலுடன்  எதிர்பார்த்துக்  காத்திருக்கிறது. திரைக்கதை ஆசிரியர் விஜயேந்திர பிரசாத் 25க்கும் மேற்பட்ட படங்களுக்கு கதை எழுதியுள்ளார், அவை அனைத்துமே  வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளன. மதிப்புமிக்க ஆந்திரா அரசின் நந்தி விருது மற்றும் ஃபிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளார். ஆர்சி ஸ்டுடியோஸ் இந்தப் படத்தில் பல கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளது, இப்படம் பான் இந்தியா கான்செப்ட்டை உடைத்து, உலகளாவிய திரைப்படத் தரத்தில், இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்திய படமாக இருக்கும். இதன் மூலம் ஆர்சி ஸ்டுடியோஸ் ஒரு உலகளாவிய தயாரிப்பு நிறுவனமாக மலரும்.

இதன் மூலம் உலகளாவிய வகையில் திறமையான மற்றும் வளர்ந்து வரும் இளம் திறமைகளுக்கு  ஆர்சி ஸ்டுடியோஸ் வாய்ப்புகளை வழங்கும்.

இந்த மூன்று ஜாம்பவான்களும் ஒன்றிணைவது திரைத்துறையின் எதிர்கால வளர்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் உதவும். கிச்சாவுடன் இணைந்து ஆர்சி ஸ்டுடியோஸ் நிறுவனம் ஒரு படத்தைத் தயாரிப்பது அவரது பிறந்தநாளில்  உறுதியாகியுள்ளது.
Previous Post

கவுண்டமணி பாராட்டில், நடிகர் முத்துக்காளை!

Next Post

‘பவர் ஸ்டார்’ பவன் கல்யாண் நடிக்கும் ‘உஸ்தாத் பகத்சிங்’ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

Next Post

'பவர் ஸ்டார்' பவன் கல்யாண் நடிக்கும் 'உஸ்தாத் பகத்சிங்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

Popular News

  • ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிட்டுக்குறிஞ்சி’ முதல் பாடல் குறிஞ்சி மலை மேல 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!

    0 shares
    Share 0 Tweet 0
  • சாய் அபயங்கர் – பாக்யஸ்ரீ போர்ஸ் கூட்டணியில் உருவான ‘ரதிமா’

    0 shares
    Share 0 Tweet 0
  • Romeo Pictures சார்பில் ராகுல் மற்றும் Aviate Pictures சார்பில் கோகுல் ஸ்ரீனிவாசன் இணைந்து தயாரிக்க, ‘ரைட்டர்’ பட இயக்குநரும் ‘DC’ படத்தின் எழுத்தாளருமான ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில், இளைய திலகம் பிரபு மற்றும் புது வரவான பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ்பெற்ற விஜய் வர்மா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை கோலாகலமாக நடைபெற்றது.

    0 shares
    Share 0 Tweet 0
  • முழு நீள சஸ்பென்ஸ் க்ரைம் ஹாரர் த்ரில்லராக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்க, சீன் ரோல்டன் இசையமைக்கும் கே.எஸ். சினிஷ் வழங்கும் ‘நிஞ்ஜா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 24 ஆம் தேதி பூஜையுடன் தொடக்கம்!

August 26, 2026

சாய் அபயங்கர் – பாக்யஸ்ரீ போர்ஸ் கூட்டணியில் உருவான ‘ரதிமா’

August 26, 2026

ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!

August 26, 2026

சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘டாக்ஸிக்’ முன்வெளியீட்டு விழா!

August 26, 2026

பிரசாந்த் வர்மாவின் ‘மகாகாளி’ படத்தின் வெளியீட்டு தேதி & பிரத்யேக கிளிம்ப்ஸ் வெளியீடு

August 26, 2026

‘சிட்டுக்குறிஞ்சி’ முதல் பாடல் குறிஞ்சி மலை மேல 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!

August 26, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.