• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

பைக் ரேஸ் வீரராக வேண்டுமென்ற லட்சிய கனவுடன் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் “ரேசர்”

by Tamil2daynews
March 28, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

பைக் ரேஸ் வீரராக வேண்டுமென்ற லட்சிய கனவுடன் உருவாகி இருக்கும்  புதிய திரைப்படம் “ரேசர்”

 

நிஜ பைக் ரேஸ் வீரர்களுடன் அகில் சந்தோஷ் நடிக்க சதீஷ் (எ) Satz Rex இயக்கும் படம் “ரேசர்”
 ஹஸ்ட்லர்ஸ் என்டர்டெயின்மென்ட் (Hustlers Entertainment)  பட நிறுவனம் சார்பில் கார்த்திக் ஜெயாஸ் அதிக பொருட் செலவில் தயாரித்து இருக்கும் படம் “ரேசர்”.
சந்தோஷ் கிருஷ்ணமூர்த்தி ( ரெடால் மீடியா ஒர்க்ஸ்) இணை தயாரிப்பு செய்திருக்கிறார்.
இப்படத்தை   “ஆக்‌ஷன் ரியாக்‌ஷன்” வழியாக ஜெனீஷ் வெளியிடுகிறார்.
இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி  டைரக்ட் செய்து இருக்கிறார் சதீஷ் (எ) Satz Rex.
பிரபாகர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
பரத் இசை அமைத்திருக்கிறார்.
கனியமுதன் அரங்கம் நிர்மாணித்திருக்கிறார்.
சண்டை காட்சிகளை சீனு அமைத்திருக்கிறார்.
இப்படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார் அகில் சந்தோஷ்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை வேடத்தில் நடிக்கும் லாவண்யா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் ஆறுபாலா, ‘”திரௌபதி” சுப்ரமணியன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
தந்தை மகனுக்கு இடையேயான பிரச்சனையை மையமாக கொண்டு இதன் கதை அமைந்துள்ளது. நடுத்தர குடும்பத்தில் பிறந்தாலும் பெரிய பைக்  ரேசர் ஆகவேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கிறார் அகில் சந்தோஷ். ஆனால் அவர் கேட்கும் விலை உயர்ந்த  ரேஸ் பைக்கை தந்தையால் வாங்கி தர முடியவில்லை. ஆனாலும்  தனது லட்சியத்தில் பின்வாங்காத அகில் தானே  கஷ்டப்பட்டு பைக் வாங்கி ரேஸில் சாதிக்க முயல்கிறார். இதற்கிடையில் அவர் சந்திக்கும் போராட்டங்கள் அதை மீறி அவரால் சாதிக்க முடிந்ததா  என்பதை விறுவிறுப்புடன் படம் விளக்குகிறது. இதற்கிடையில் இளவட்ட காதல் கதையும் இழையோடுகிறது.
இப்படத்துக்காக பாண்டிச்சேரியில்  பெரும் பொருட் செலவில் பைக் ரேஸ் நடக்கும் பந்தய மைதானம் அமைக்கப்பட்டது.  இந்த போட்டியின் முக்கிய காட்சிகள் ஏற்காட்டில் படமாக்கப்பட்டது. மேலும் சில முக்கிய காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டிருக்கிறது.
மோட்டார் ரேஸ் காட்சிகளில் நிஜ ரேஸ் வீரர்களுடன் ஹீரோ அகில் போட்டிபோட்டு பைக் ஓட்டி அனைவரையும் ஆச்சரியத்தில்  ஆழ்த்தினார்.
*லட்சியத்துடன்  வாழும் ஒவ்வொரு    இளைஞனுக்கும் தன்னம்பிக்கை  தரும் படமாக உருவாகியிருக்கும்
“ரேசர்” வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது.
Previous Post

“செங்களம்” இணையத்தொடரின் வெற்றியை அரசியல் ஆளுமைகளின் நினைவிடங்களில் கொண்டாடிய படக்குழு !!!

Next Post

‘மாஸ் மகாராஜா’ ரவி தேஜா நடிக்கும் ‘டைகர் நாகேஸ்வரராவ்’ பட வெளியீட்டு தேதி அறிவிப்பு

Next Post

'மாஸ் மகாராஜா' ரவி தேஜா நடிக்கும் 'டைகர் நாகேஸ்வரராவ்' பட வெளியீட்டு தேதி அறிவிப்பு

Popular News

  • ‘கொலையாளி அல்ல..! நான் காதலன்..!’ என்ற அதிரடியான வாசகத்துடன் வெளியான நடிகர் ஷாருக்கானின் ‘கிங் – KING’ படத்தின் புதிய போஸ்டர்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆர்.பி. பாலா இயக்கத்தில் நவீன் சந்திரா நடிக்கும் ‘என் சி 51’ படப்பிடிப்பு நிறைவு

    0 shares
    Share 0 Tweet 0
  • ஏகன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஹைக்கூ’ திரைப்படத்திற்கு கிடைத்து வரும் நேர்மறையான வரவேற்பால் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • பரத் – ராஜேஷ் மாதவன் இணையும் கலகலப்பான ஃபேமிலி என்டர்டெய்னர்! பூஜையுடன் கோலாகலமாகத் தொடங்கியது !

    0 shares
    Share 0 Tweet 0
  • கரண் தயாநிதி மாறன் அறிமுகப்படுத்தும் கதைஷார்ட்ஸ் (KadhaiShorts) – மைக்ரோ டிராமாவுக்கென உருவாகும் தமிழ்நாட்டின் முதல் டிஜிட்டல் கதைத் தளம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

இசை கலைஞர் பால் டப்பாவின் புதிய மியூசிக் வீடியோ ஆல்பம் ‘ஏரோபிளேன்’ வெளியீடு

October 30, 2026

நடிகர்கள் ராஜ் அய்யப்பா, டெல்னா டேவிஸ் நடிப்பில் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும் ‘லவ் இங்க்’ திரைப்படத்தின் வில்லனாக சுனில் ரெட்டி!

October 30, 2026

“அக்கா’வில் நடிப்பதற்கு முன்பு என்னால் ஒரு கேங்க்ஸ்டராக நடிக்க முடியும் என நம்பவில்லை” கீர்த்தி சுரேஷ்!

October 30, 2026

ஜீவாவின் ‘தகப்பன்’ படத்திலிருந்து ‘தங்கப்புள்ள’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!

October 30, 2026

‘வேட்டுவம்’ – பொங்கல் 2027-ல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

October 30, 2026
அமல் அஜித் – பிரியங்கா ராஜகுமாரன் நடிக்கும் புதிய திரைப்படம்  ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’! பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது!

அமல் அஜித் – பிரியங்கா ராஜகுமாரன் நடிக்கும் புதிய திரைப்படம் ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’! பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது!

October 27, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.