• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘சீதாராமம்’ படத்திற்கு கிடைத்த சர்வதேச விருது

by Tamil2daynews
August 14, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘சீதாராமம்’ படத்திற்கு கிடைத்த சர்வதேச விருது

துல்கர் சல்மான்- மிருணாள் தாக்கூர்- ஹனுராகவ புடி – ஸ்வப்னா சினிமாஸ் கூட்டணியில் தயாரான ‘சீதா ராமம்’ படத்திற்கு, மெல்ஃபெர்னில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான விருது கிடைத்திருக்கிறது.

பிரபல முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களான வைஜெயந்தி மூவிஸ் மற்றும்  ஸ்வப்னா சினிமாஸ் இணைந்து அழகான காவிய காதல் கதையான ‘சீதா ராமம்’ எனும் திரைப்படத்தை தயாரித்தது. இந்த திரைப்படத்தில் நடிகர் துல்கர் சல்மான் கதையின் நாயகனாகவும், நடிகை மிருணாள் தாக்கூர் கதையின் நாயகியாகவும், நடிகை ரஷ்மிகா மந்தானா முக்கிய வேடத்திலும் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தை ஹனுராகவ புடி இயக்கியிருந்தார். பி. எஸ். வினோத் ஒளிப்பதிவு செய்த இந்த திரைப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்திருந்தார். இந்தத் திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பிரம்மாண்டமான வெற்றியை உலக அளவில் பெற்றது.

ஆண்டுதோறும் ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான மெல்ஃபெர்ன் நகரில் இந்திய திரைப்பட விழா சிறப்பாக நடைபெறுகிறது. 14 வது இந்திய திரைப்பட விழா மெல்ஃபெர்ன் நகரில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் சிறந்த திரைப்படம் எனும் பிரிவில் போட்டியிட்ட ‘சீதா ராமம்’ படத்திற்கு சிறந்த படத்திற்கான விருது கிடைத்தது. விருது வழங்கும் விழாவில் படக் குழுவினர் ‘சீதா ராமம்’ படத்திற்கு வழங்கப்பட்ட விருதினை பெற்றுக் கொண்டனர்.

இதனால் ‘சீதா ராமம்’ படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் அவர்களுக்கு இது மறக்க இயலாத படைப்பாகவும் அமைந்தது.
Previous Post

“ஜவான்” படத்தின் “ஹைய்யோடா” பாடல் ரொமான்ஸ் கிங் ஷாருக்கானை மீண்டும் திரையில் கொண்டு வந்திருக்கிறது

Next Post

கருமேகங்கள் கலைகின்றன” திரைப்படத்தின் டிரைலரை வெளியிட்ட நீதியரசர் சந்துரு

Next Post

கருமேகங்கள் கலைகின்றன" திரைப்படத்தின் டிரைலரை வெளியிட்ட நீதியரசர் சந்துரு

Popular News

  • பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • விஜய் விஷ்வாவின் புது அவதாரம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM)

    0 shares
    Share 0 Tweet 0
  • இருமுடி கட்டு – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • “மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

August 22, 2026

பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

August 22, 2026

ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM)

August 22, 2026

இருமுடி கட்டு – விமர்சனம்

August 22, 2026

”நடிகர் கவுண்டமணிதான் இன்ஸ்பிரேஷன்”…நடிகர் அப்துல் லீ!

August 22, 2026

“மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

August 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.