• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

மோகன்லால் நடிக்கும் ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

by Tamil2daynews
September 18, 2023
in சினிமா செய்திகள்
0
மோகன்லால் நடிக்கும் ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

மோகன்லால் நடிக்கும் ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

 

மோகன்லால் – லிஜோ ஜோஸ் பெல்லிசேரி கூட்டணியில் உருவாகியுள்ள ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான மோகன்லால் நடிப்பில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘மலைக்கோட்டை வாலிபன்’. இந்த திரைப்படத்தை பற்றிய புதிய தகவல்களுக்காக நாடு முழுவதும் உள்ள திரையுலக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் இப்படத்தின் இயக்குநரான லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் பிறந்த நாளன்று ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்தின் வெளியீட்டு தேதியை நட்சத்திர நடிகர் மோகன்லால் அறிவித்துள்ளார்.Image

இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இப்படத்தின் பிரத்யேக காணொளி, மோகன்லாலின் பிறந்தநாளன்று வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியாகி இணையத்தில் வைரலானது. இதைத் தொடர்ந்து படத்தின் வெளியீட்டு தேதிக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

மலைக்கோட்டை வாலிபன்’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் பாண்டிச்சேரி, சென்னை, ராஜஸ்தான் ஆகிய இடங்களில் 130 நாட்களில் நடைப்பெற்று நிறைவடைந்தது. இப்படத்தின் திரைக்கதையை பி. எஸ். ரஃபீக் எழுதியுள்ளார். மது நீலகண்டன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பிரசாந்த் பிள்ளை இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை தீபு ஜோசப் மேற்கொள்ள, கலை இயக்கத்தை ரோனக்ஸ் சேவியர் வடிவமைத்திருக்கிறார்.‌

இந்தத் திரைப்படத்தை மேக்ஸ் லேப், செஞ்சுரி பிலிம்ஸ், சரிகம இந்தியா லிமிடெட் மற்றும் ஜான் & மேரி கிரியேட்டிவ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகிறது.

Previous Post

கே.எஸ்.ரவிக்குமார் வெளியிட்ட “பூங்கா நகரம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

Next Post

நயன்தாரா நடிப்பில் உருவாகும் மண்ணாங்கட்டி சின்ஸ் 1960

Next Post

நயன்தாரா நடிப்பில் உருவாகும் மண்ணாங்கட்டி சின்ஸ் 1960

Popular News

  • “எல்லோரையும் நம்பாதே” என்பது ரவி மோகன் தனது இளம் பருவ ரவி மோகனுக்கு அளிக்கும் அறிவுரை.

    0 shares
    Share 0 Tweet 0
  • டபுள் ஆக்குபன்சி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • பிளாஸ்ட் – விமர்சனம் ரேட்டிங் – 4/5

    0 shares
    Share 0 Tweet 0
  • பிரபல கேமராமேனும் தயாரிப்பாளருமான ரவியாதவ் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய “ரஞ்சன்” படக்குழு.

    0 shares
    Share 0 Tweet 0
  • திரைப்பட இயக்குநராக இருந்து நடிகராக மாறிய பாலாஜி சக்திவேல், பைலட் திரைப்படமான ‘ஆஃப் தி ரெக்கார்ட்’டில் கதாநாயகனாக நடித்துள்ளார்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

திரைப்பட இயக்குநராக இருந்து நடிகராக மாறிய பாலாஜி சக்திவேல், பைலட் திரைப்படமான ‘ஆஃப் தி ரெக்கார்ட்’டில் கதாநாயகனாக நடித்துள்ளார்!

May 30, 2026

“எல்லோரையும் நம்பாதே” என்பது ரவி மோகன் தனது இளம் பருவ ரவி மோகனுக்கு அளிக்கும் அறிவுரை.

May 30, 2026

பிரபல கேமராமேனும் தயாரிப்பாளருமான ரவியாதவ் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய “ரஞ்சன்” படக்குழு.

May 30, 2026

பேட்மிண்டன் விளையாட்டு பின்னணியிலான தமிழ் சினிமாவின் முதல் காதல் திரைப்படம்

May 30, 2026

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் வழங்கும் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் உலகமெங்கும் ஜூலை 31ஆம் தேதி வெளியாகிறது!

May 30, 2026

கரண் தயாநிதி மாறன் அறிமுகப்படுத்தும் கதைஷார்ட்ஸ் (KadhaiShorts) – மைக்ரோ டிராமாவுக்கென உருவாகும் தமிழ்நாட்டின் முதல் டிஜிட்டல் கதைத் தளம்

May 30, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.