• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

‘தி ரோடு’ – விமர்சனம்

by Tamil2daynews
October 7, 2023
in விமர்சனம்
0
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘தி ரோடு’ – விமர்சனம்

 

நடிகை த்ரிஷா, டான்சிங் ரோஸ் ஷபீர், எம்.எஸ்.பாஸ்கர், மியா ஜார்ஜ், சந்தோஷ் பிரதாப், வேல ராமமூர்த்தி , செம்மலர் அன்னம் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் தான் தி ரோடு.

அருண் வசீகரன் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு சாம் சி. எஸ்  இசையமைத்துள்ளார். ஹீரோயினை முன்னிலைப்படுத்திய கதையில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாகக் கலக்கி வரும் த்ரிஷா நடிப்பில் வெளியாகியுள்ள தி ரோடு படம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததா?

Trisha in The Road Movie Stills | Chennaionlineபாதிக்கப்பட்டவர்களின் அமைதி தான் அடுத்தடுத்த தவறுகளுக்கு காரணம், அவர்கள் அமைதியாக போகக் கூடாது எனும் படத்தின் வசனத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் ‘தி ரோடு’

அழகான குடும்பம், குழந்தைகள் என வாழ்ந்து வரும் த்ரிஷா, சாலை விபத்தில் தன் கணவர், குழந்தைகளை இழக்கிறார். ஆனால் தன் கணவர், குழந்தைகளை த்ரிஷா இழந்த NH 44 சாலையின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தொடர் சாலை விபத்துகள் நடப்பது த்ரிஷாவுக்கு தெரிய வருகிறது. மறுபுறம் கல்லூரி ப்ரொஃபசராக வரும் ‘டான்சிங் ரோஸ்’ ஷபீர் தன் கல்லூரி மாணவி ஒருவர் தன் மீது சுமத்தும் அபாண்டமான பழியால் நற்பெயர், மதிப்பு, உறவுகள் என எல்லாவற்றையும் இழக்கிறார்.

இழப்புகளுடன் நிர்கதியாக நிற்கும் இவர்கள் இருவரையும்  NH 44 எனும் சாலை எப்படி ஒன்றிணைக்கிறது, த்ரிஷா குடும்பத்தினருக்கு உண்மையில் நேர்ந்தது என்ன, தொடர் விபத்துகளுக்கு காரணம் என்ன என்பன போன்ற கேள்விகளுக்கான விடையை த்ரில்லர் கதைக்களத்தில் சுவாரஸ்யமாக தர முயற்சித்துள்ளது ‘தி ரோடு’.
Trisha in The Road Movie Stills | Chennaionlineஇனி இழப்பதற்கு ஒன்றுமில்லை எனும் மோடில் கணவர் குழந்தைகளின் மரணத்தின் பின்னணியை ஆராயும் த்ரிஷாவுக்கு கனமான பாத்திரம். ஆக்ரோஷம் தெறிக்க விபத்துகளுக்கான காரணம் தேடி  போராடும் த்ரிஷா, நம்மை படத்துடன் ஒன்ற வைத்து  இறுதிவரை கூட்டிச் செல்கிறார். இழப்பை வெளிப்படுத்தும் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் அழுத்தமாக நடித்திருக்கலாம்.

மறுபுறம் அனைத்தையும் இழந்து பணம் இல்லாமல் நிர்கதியாக நிற்கும் டான்சிங் ரோஸ் ஷபீருக்கு இது மற்றுமொரு சிறப்பான கதாபாத்திரம். ஆக்ரோஷம், கோபம், ஏமாற்றம் என அனைத்து உணர்ச்சிகளையும் தன் நடிப்பில் வெளிப்படுத்தி படத்துக்கு மற்றுமொரு தூணாக விளங்குகிறார்.

பிள்ளைக்காக தன் சக்திக்கு உள்பட்ட அனைத்தையும் செய்யும் வேலராமமூர்த்தி ஈர்க்கிறார். போலீஸ் கான்ஸ்டபிளாக வரும் எம்.எஸ்.பாஸ்கர், த்ரிஷாவின் தோழியாக வரும் மியா ஜார்ஜ் ஆகியோர் கதாபாத்திரத்துக்கு தேவையானதை செய்துள்ளனர். கோலிவுட் சினிமாவில் இறப்பதற்கென்றே வரும் கதாபாத்திரத்துக்கு சந்தோஷ் பிரதாப் புதுவரவு.

முதல்பாதி விறுவிறுவென பயணித்து, பக்கா த்ரில்லர் கதை அனுபவத்தை தந்து எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது. ஆனால் இரண்டாம் பாதி அதற்கு நேர்மாறாக திக்கற்று செல்லும் வாகனமாக பயணிக்கிறது.
Trisha set out to solve a web of crimes behind unusual accidents: 'The Road' trailer! - Tamil News - IndiaGlitz.comதொடர் சாலை விபத்துகள் நிகழும் இடத்தை பொதுமக்கள் கவனித்த அளவுக்கு கூட போலீசார் கவனிக்கவில்லை. பல லாஜிக் மீறல்களுடன் இரண்டாம் பாதியின் நீளமும் வேகத்தடையாக மாறுகிறது.  இரண்டாம் பாதியில் பல ட்விஸ்ட்கள் நிறைந்திருந்தாலும் அவை சுவாரஸ்யத்தைக் கூட்டுவதற்கு பதிலாக படம் எப்போது முடியும் எனும் கேள்வியையுமே எழவைக்கிறது.

வில்லனின் பின்னணி, காரணங்கள் ஆகியவை அழுத்தமாக முன்வைக்கப்படுவதால், ஹீரோயினைக் காட்டிலும் அவருக்காக ஒருபுறம் மனம் பரிதாபப்படவே செய்வது மைனஸ். சாம் சி.எஸ்ஸின் பின்னணி இசை படத்துக்கு பெரும் ப்ளஸ்! அலுப்பு தட்டும் இடங்களிலும் நம்மை படத்துடன் ஒன்ற வைத்து சுவாரஸ்யம் கூட்டியிருக்கிறார் சாம் சி.எஸ்.

உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் எனக் கூறப்பட்ட்டாலும் கதையில் நம்பகத்தன்மை குறைவாகவும், மிகைப்படுத்தி எடுக்கப்பட்ட உணர்வையும் படம் தருகிறது.

மொத்தத்தில்  ‘தி ரோடு’ இன்னும் சிறப்பான சாலையாக அமைந்திருக்கலாம்.
Tags: 'தி ரோடு' - விமர்சனம்THE ROAD MOVIETHE ROAD MOVIE REVIEWTHE ROAD MOVIE STILLSTHE ROAD MOVIE TRISHA
Previous Post

“முனியாண்டியின் முனிப்பாய்ச்சல்” படம் காந்தாரா படம் போல பேசப்படும் என்கிறார்கள் படக்குழுவினர்.

Next Post

‘ரத்தம்’ – விமர்சனம்

Next Post

'ரத்தம்' - விமர்சனம்

Popular News

  • முன்னணி தயாரிப்பாளர் ஆர். ரவீந்திரன், டிரைடென்ட் ஆர்ட்ஸின் 22வது படத்தை சுல்தான் ஜசானி மற்றும் சேத்தன் தியோலேகர் ஆகியோரோடு இணைந்து தயாரிக்கிறார்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஹைக்கூ – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • “ஒரு மனிதனின் வாழ்க்கையில் இருவேறு காலக்கட்டங்களை பேசும் திரைப்படம் ‘ஹைக்கூ’” நடிகர் ஏகன்

    0 shares
    Share 0 Tweet 0
  • 418 – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • விஜய் சேதுபதி ஒரு ஜென்டில்மேன்.அவருடன் நடித்தது மறக்க முடியாதது: வியக்கிறார் நடிகை சாய் ரோகிணி!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“‘ஹைக்கூ’ ரசிகர்களின் மனதைத் தொடும் ஃபீல் குட் என்டர்டெயினர் திரைப்படம்”- இயக்குநர் யுவராஜ் சின்னசாமி!

October 23, 2026

நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ திரைப்படம் டிசம்பர் 24 அன்று உலகெங்கும் வெளியாகிறது

October 23, 2026

சட்டமும் நீதியும்-2 – விமர்சனம்

October 23, 2026

418 – விமர்சனம்

October 23, 2026

“ஒரு மனிதனின் வாழ்க்கையில் இருவேறு காலக்கட்டங்களை பேசும் திரைப்படம் ‘ஹைக்கூ’” நடிகர் ஏகன்

October 23, 2026

யஷ் ராஜ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், கீர்த்தி சுரேஷ் – ராதிகா ஆப்தே மோதும் அதிரடி கேங்ஸ்டர் கதையான ‘அக்கா’ வெப் தொடரின் டிரெய்லரை வெளியிட்டது நெட்ஃபிளிக்ஸ்!

October 23, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.