• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

‘ரத்னம்’ – விமர்சனம்

by Tamil2daynews
April 27, 2024
in விமர்சனம்
0
‘ரத்னம்’ – விமர்சனம்
0
SHARES
15
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘ரத்னம்’ – விமர்சனம் 

 

ஸ்டோன் பெஞ்ச் புரொடெக்‌ஷன் தயாரிப்பில் இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர்கள் விஷால், சமுத்திரக்கனி, ப்ரியா பவானி சங்கர், யோகி பாபு, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பல்வேறு உச்சநட்சத்திரங்கள் நடிப்பில் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் திரைப்படமாக வெளியாகியுள்ளது ரத்னம்.

சிறுவயதில் தாயை இழந்த பின்னர், தன்னை அரவணைத்த சமுத்திரக்கனியை காப்பாற்றுவதற்காக கொலை செய்துவிட்டு சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்குச் செல்கின்றார் விஷால். இந்த இடைவெளியில் எம்.எல்.ஏ.,வாக சமுத்திரக்கனி ஆகிவிடுகின்றார். அதைத்தொடர்ந்தும்  சமுத்திரக்கனி அரவணைப்பால் வளரும் விஷால், சமுத்திரக்கனியின் அடியாளாக இருக்கின்றார். நற்குணம் கொண்ட அரசியல்வாதியிடம் அடியாளாக இருக்கும் விஷால், “ கொள்கைக்காக கொலையே செய்வேன்” என்ற மனநிலையில்தான் இருக்கின்றார்.
இப்படியான நிலையில் கதாநாயகி ப்ரியா பவானி சங்கரை விஷால், சந்திக்கின்றார். அப்போது வில்லன்கள் கதாநாயகியை தாக்குகின்றனர். அதிலிருந்து நாயகியைக் காப்பாற்றும் விஷால், வில்லன்களை எப்படி சமாளிக்கின்றார். கதாநாயகியை வில்லன்கள் தாக்குவதற்கு காரணம் என்ன? இறுதியில் என்ன நடந்தது என்பது மீதிக் கதை.
வேலூர் மற்றும் ஆந்திராவை மைய்யமாக கொண்டு கதை நகர்கின்றது. வேலூர் தமிழ் பேசி ரசிக்கவும் செய்கின்றது படக்குழு. பரபரப்பாக நகரும் ஹரியின் படத்திற்கு பலம் என்றால் அது படத்தின் திரைக்கதையாக இருக்கும், ஆனால் இந்த படத்தில் திரைக்கதையை விடவும் மிகவும் பலமானது என்றால் சுகுமாரின் ஒளிப்பதிவு. அதேபோல் படத்தொகுப்பும் கதைக்கு பெரும் தூணாக அமைந்துள்ளது. படம் முழுக்க வரும் கனல் கண்ணன், திலீப் சுப்புராயனின் சண்டைக்காட்சிகள் பில்டப் காட்சிகளாக இல்லாமல், படத்தின் கதையோட்டத்திற்கு ஏற்றவாறே, அமைந்துள்ளது. படத்திற்கு இன்னொரு பலம் என்றால் அது தேவிஸ்ரீ பிரசாந்தின் இசை. படத்தில் இரண்டு பாடல்கள் மட்டும் இருந்தாலும் பின்னணி இசையில் ஸ்கோர் செய்துள்ளார் தேவிஸ்ரீ பிரசாத்.
திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படம் எடுப்பதில் குறிக்கோளாக இருந்து, திரைக்கதையில் கோட்டைவிட்டுள்ளார் ஹரி. நாளுக்கு நாள் வளர்ந்து வரும், புது ட்ரெண்டை உருவாக்கும் பல படங்கள் தொடர்ந்து வெளியாகிவரும் காலகட்டத்திலும், வம்படியாக தனது திரைக்கதை பாணியை மாற்றிக்கொள்ளமாட்டேன் என ரத்னத்தை இயக்கியுள்ளார் ஹரி. ப்ரீ க்ளைமேக்ஸில் வரும் ஒரு சில காட்சிகள் வலிந்து திணத்துது போல் உள்ளது. படம் பார்க்கும் ரசிகர்களுக்கு வலிந்து திணித்த காட்சிகள் இல்லை என்றாலும் கதையோட்டம் புரிந்திருக்கும். ஆனால், ஹரி வம்படியாக காட்சிகளை திணித்துள்ளார். படம் முழுக்க வரும் வெட்டு, குத்து, ரத்தம் என ஒரு கட்டத்தில் சலிப்பையும் ஏற்படுத்துகின்றது. கதை நகர்வதற்கு காரணமாக நாயகி ப்ரியா பவானி சங்கர் இருந்தாலும், கதையில் அவரது கதாப்பாத்திரம் ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கும்படியாக இல்லை.

கதையைப் பார்த்தால் ஓகே,,ஆனால் திரைக்கதையில் இருக்கும் சிறு சிறு சொதப்பல்களை சரி செய்து இருந்தால் படம் இன்னும் பலம் பெற்று இருக்கும்.

மொத்தத்தில் இந்த ‘ரத்னம்’ ஒரு முறை பார்க்க ஓகேவான ரகம்.
Previous Post

இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் நடைபெற்ற வானம் கலை விழா – வேர்க்கோடுகள் விருது வழங்கும் நிகழ்வில் எம்.பி. கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டார்.

Next Post

இசை பெரிதா? மொழி பெரிதா?” – கவிப்பேரரசு வைரமுத்து விளக்கம்

Next Post

இசை பெரிதா? மொழி பெரிதா?” - கவிப்பேரரசு வைரமுத்து விளக்கம்

Popular News

  • பேசத் தயங்கும் விஷயங்களின் மவுனத்தை உடைக்கும் மலேசிய தமிழ் க்ரைம் த்ரில்லர் ‘இரும்புத் தோட்டம் ; விரைவில் தமிழகமெங்கும் ரிலீஸ்’!

    0 shares
    Share 0 Tweet 0
  • உலக மீனவர் தினத்தை முன்னிட்டு ‘தமிழினி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • “‘டெத் இரயில்வே பக்கா கமர்ஷியல் படம்”…’யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன்!

    0 shares
    Share 0 Tweet 0
  • காதல் மற்றும் உறவுகளின் உணர்வுப்பூர்வமான கொண்டாட்டமாக வெளியான ‘ஹைக்கூ’ திரைப்படம் நவம்பர் 20 அன்று நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • டி பி சி (TPC) ட்ரீம் ஹவுஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டத் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில், விமல் நடிக்கும் காமெடி-ஆக்‌ஷன் -ஃபேண்டஸி திரைப்படம் ‘நவோரியா’ டிசம்பர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“‘டெத் இரயில்வே பக்கா கமர்ஷியல் படம்”…’யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன்!

November 22, 2026

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் தன் மகள் அல்லு அர்ஹாவுக்கு சொன்ன நெகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்து!

November 22, 2026

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு ‘தமிழினி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

November 22, 2026

‘டெலிவரி பாய்’ திரைப்பட முன் வெளியீட்டு விழா !!

November 22, 2026

பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், Vi. ஆனந்தின் கற்பனையில், நடிகர் பஞ்ச வைஷ்ணவ் தேஜ் நடிக்கும் ‘ஹனுமேன் 2: தி ரைஸ் ஆஃப் வானராஸ்’ (HanuMan 2: The Rise of Vanaras) – டைட்டில் போஸ்டர் வெளியீடு!

November 22, 2026

ஆகாயத்தில் ஒரு தாரகை (AOT) – விமர்சனம்

November 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.