• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நடிகர் சூரி, இயக்குனர் விஜய் மில்டன் இணைந்து வெளியிட்ட “மகாசேனா” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்;

by Tamil2daynews
October 13, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நடிகர் சூரி, இயக்குனர் விஜய் மில்டன் இணைந்து வெளியிட்ட “மகாசேனா” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்;

 

மருதம் புரொடக்ஷன்ஸ் புதிய படைப்பு இயற்கை, ஆன்மீகம் மற்றும் காடு புராணத்தை மையமாகக் கொண்ட அதிரடி திரில்லர் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு;

2023ஆம் ஆண்டில் வெளியான க்ரைம் திரில்லர் “இராக்கதன்” படத்தின் வெற்றிக்கு பின், மருதம் புரொடக்ஷன்ஸ் தனது அடுத்த மிகப்பெரிய முயற்சியாக “மகாசேனா” என்ற புதிய படத்தை அறிவித்துள்ளது.

இந்த படத்தின் தலைப்பும் ஃபர்ஸ்ட் லுக்கும் நடிகர் சூரி மற்றும் இயக்குனர் விஜய் மில்டன் ஆகியோரால் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டன. காடு மற்றும் ஆன்மீக நிழல்களில் உருவான இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
படம் பற்றி,

இயக்குனர் தினேஷ் கலைசெல்வன் எழுதி இயக்கும் மகாசேனா படம், இயற்கை, ஆன்மீகம் மற்றும் புராணக் கூறுகளை இணைக்கும் ஒரு காடு சார்ந்த ஆக்சன்-திரில்லர் ஆகும்.

மனித பேராசைக்கும், தெய்வீக இயற்கை சக்திகளுக்கும் இடையிலான நிலையான மோதலை, குடலூர், வயநாடு, கொல்லிமலை, ஊட்டி ஆகிய இடங்களில் கதையாக அமைக்கப்பட்டுள்ளது.

படத்தின் 90% பகுதி உண்மையான காட்டு பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்ட காட்சியமைப்புடன் கூடிய இந்த படம், திருவிழா காட்சிகளை மையமாகக் கொண்ட கிளைமாக்ஸ், பழங்குடி இசையையும் பக்தி இசையையும் இணைக்கும் புது இசை அனுபவத்தையும் தருகிறது.

படத்திற்காக இசையமைத்துள்ளவர்கள் ஏ. பிரவீன் குமார் மற்றும் எஸ்.என். அருணகிரி.
பாடகர்கள் — வைகோம் விஜயலட்சுமி, வி.எம். மஹாலிங்கம், வி.வி. பிரசன்னா, பிரியங்கா என்.கே.
படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள் இடம்பெறுகின்றன. ஒவ்வொரு பாடலும் காடின் உயிரோட்டத்தையும், ஆன்மீக பிணைப்பையும் வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என படக்குழு தெரிவித்துள்ளது.

இந்த படத்தில் விமல், ஸ்ருஷ்டி டாங்கே, யோகி பாபு, மஹிமா குப்தா, ஜான் விஜய், கபீர் துஹான் சிங், ஆல்ஃப்ரெட் ஜோஸ், இளக்கியா, விஜய் சியோன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
மேலும், படத்தின் முக்கியமும் குறியீடாகவும் யானை சேனா முக்கியமான வேடத்தில் நடிக்கிறது.

இயக்குனர் தினேஷ் கலைசெல்வன் கூறுகையில்,
“மஹாசேனஹா ஒரு காடு பற்றிய கதை மட்டும் அல்ல — அது மனிதன், இயற்கை, தெய்வீகம் ஆகியவற்றின் இடையிலான நம்பிக்கையையும் ஒற்றுமையையும் பற்றி பேசும் படம். பேராசை இந்த தெய்வீக சமநிலையை குலைக்கிறது. ஆன்மீகம் அதைக் காப்பாற்றுகிறது. ஒவ்வொரு ஃப்ரேமும் இயற்கைக்கான மரியாதையையும், உயிரின் தெய்வீகத்தையும் பிரதிபலிக்கிறது. இந்தக் காடு தானே ஒரு கதாபாத்திரமாக உயிருடன், உணர்வுடன், ஆற்றலுடன் உள்ளது.

மருதம் புரொடக்ஷன்ஸ் தனது முந்தய படைப்பு “இராக்கதன்” போலவே, மகாசேனாவிலும் வலிமையான, காட்சியளவில் பிரம்மாண்டமான ஒரு திரைப்படத்தை ரசிகர்களுக்கு வழங்க இருக்கிறது. ஆன்மீகம், அதிரடி, உணர்ச்சி என இந்த மூன்றையும் இணைத்து உருவாகும் மகாசேனா படம், மலைகளின் மணமும், காடுகளின் தாளமும், நம்பிக்கையின் துடிப்பும் கொண்ட ஒரு மறக்கமுடியாத திரைப்பட அனுபவமாக அமையும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறோம்.

தொழில்நுட்ப குழு விவரம்
கதை, திரைக்கதை & இயக்கம்: தினேஷ் கலைசெல்வன்
தயாரிப்பு: டாக்டர் செல்வராஜு
இணை தயாரிப்பு : ராணி ஹென்றி சாமுவேல்
இசை: ஏ. பிரவீன் குமார், எஸ்.என். அருணகிரி
பின்னணி இசை: உதய பிரகாஷ் (UPR)
ஒளிப்பதிவு: D.R. மனஸ் பாபு
எடிட்டிங்: நாகூரன் ராமசந்திரன்
ஸ்டண்ட்: ராம் குமார்
நடன அமைப்பு: தஸ்தா, அமீர்
பாடல் : தினேஷ் கலைசெல்வன்
கலை இயக்கம் : V.S. தினேஷ் குமார்
தயாரிப்பு மேலாண்மை: ராணி, ரமேஷ், தினேஷ் வெல்முருகன்
DI: ஜான் ஸ்ரீராம்
VFX: i-Mate மீடியா
ஆடியோகிராபி: பாலாஜி, ராஜு
போஸ்டர் வடிவமைப்பு: தினேஷ் அஷோக்
P.R.O. : ரேகா

Previous Post

உலக உணவு தினத்தை முன்னிட்டு, உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும் திட்டம் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் துவக்கி வைத்தார் !!

Next Post

டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !!

Next Post

டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !!

Popular News

  • பழநி தல வரலாறு

    பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • தடை அதை உடை – விமர்சனம் ரேட்டிங் – 3 / 5

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ‘சூர்யா’ஸ் சாட்டர்டே’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி – இயக்குநர் விவேக் ஆத்ரேயா – டி வி வி என்டர்டெய்ன்மென்ட் கூட்டணியில் உருவான ‘சூர்யா’ஸ் சாட்டர் டே’ எனும் பான் இந்திய திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படம் எதிர்வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

    0 shares
    Share 0 Tweet 0
  • Paramapatham Villaiyattu Movie Stills

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

கும்கி 2 படத்தின் முதல் சிங்கிள் “பொத்தி “பொத்தி உன்ன வச்சு” பாடல் வெளியானது !!

November 2, 2025

‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’ படத்தின் இசை & முன்னோட்ட வெளியீட்டு விழா !!

November 2, 2025

தேசிய தலைவர் – விமர்சனம்

November 2, 2025

Verus Productions வழங்கும் கெளதம் ராம் கார்த்திக் நடிப்பில் “ROOT” – படப்பிடிப்பு நிறைவு!

November 2, 2025

BR Talkies Corporation சார்பில் பாஸ்கரன் B, ராஜபாண்டியன் P, டேங்கி தயாரிப்பில், சுரேஷ் ரவி, யோகிபாபு நடிக்கும், புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, போஸ்ட் புரடக்சன் பணிகள் நடந்து வருகிறது.

November 2, 2025

தடை அதை உடை – விமர்சனம் ரேட்டிங் – 3 / 5

November 2, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.