• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘தளபதி’ விஜய் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘தளபதி 69’ படத்தின் படப்பிடிப்பு பிரமாண்டமான பூஜை நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

by Tamil2daynews
October 6, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘தளபதி’ விஜய் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘தளபதி 69’ படத்தின் படப்பிடிப்பு பிரமாண்டமான பூஜை நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

 

தலைசிறந்த மற்றும் வணிக ரீதியாக வெற்றிகரமான படங்களை வழங்குவதில் பெயர் பெற்ற கே. வி. என் புரொடக்ஷன்ஸ், ‘தளபதி’ விஜய்யின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான “தளபதி 69” துவங்குவதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது. விமர்சகர்களால் அதிகம் பாராட்டப்பட்ட எச். வினோத் இயக்கத்தில், ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் அனிருத் இசையில் இந்த படம் தமிழ் சினிமாவின் ஒரு மகத்தான திரைக் கூட்டணியாக அமைகிறது. படத்தின் நடிகர்கள்,தொழில்நுட்ப குழுவினர் மற்றும் திரைத்துறையின் முக்கிய உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்ற பிரமாண்டமான பூஜை விழாவுடன் படம் இன்று தொடங்கியது.
“தளபதி 69” படம் ஏற்கனவே ரசிகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து பிரம்மாண்ட வெற்றிப் படங்களை வழங்கிய ‘தளபதி’ விஜய், தனது அழுத்தமான மற்றும் யதார்த்தமான திரைப்பட உருவாக்கதிற்கு பெயர் பெற்ற எச். வினோத் இயக்கத்தில் ஒரு புதிய மற்றும் பிடிப்பான கதைக்களத்துடன் பார்வையாளர்களை மீண்டும் கவர்ந்திழுக்க உள்ளார். அதிரடியான, உணர்ச்சிகரமான மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்ததாக இந்த படம் இருக்கும் என்பது உறுதியாகிறது.
கே. வி. என் புரொடக்ஷன்ஸின் தயாரிப்பாளர் வெங்கட் கே நாராயணா தனது உற்சாகத்தை வெளிப்படுத்தி பேசியபோது, “தளபதி 69 படத்திற்காக இதுபோன்ற நம்பமுடியாத படக்குழுவை ஒன்றிணைப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். ‘தளபதி’ விஜய்யின் காந்தம் போன்ற அவரது ஈர்ப்பு, எச். வினோத்தின் தொலைநோக்கு பார்வை மற்றும் அனிருத்தின் மிரட்டலான இசை ஆகியவற்றுடன் சேர்ந்து, இந்த படம் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுக்கு ஒரு விருந்தாக அமையும் என்பது உறுதி”,என்றார். ஜெகதீஷ் பழனிச்சாமி மற்றும் லோஹித் என். கே. ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படம் பிரம்மாண்ட வசூல் சாதனைகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பூஜா ஹெக்டே, பாபி தியோல், நரேன், மமிதா பைஜு, மோனிஷா பிளஸ்ஸி, ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன், படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ ராகவ், கலை இயக்குனர் செல்வகுமார், ஆடைவடிவமைப்பாளர் பல்லவி சிங் மற்றும் இணை தயாரிப்பாளர்கள் ஜெகதீஷ் பழனிசாமி மற்றும் லோஹித் என். கே ஆகியோர் அடங்கிய நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் பூஜை விழாவில் கலந்து கொண்டு சுமூகமான மற்றும் வெற்றிகரமான படப்பிடிப்புக்காக வேண்டிக் கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு பாரம்பரிய வேட்டி சட்டையில் ‘தளபதி’ விஜய் வருகை புரிந்ததால் படக்குழுவினருக்கு உற்சாகம் அதிகரித்தது, பின்னர் அவர்களுடன் உரையாடியதுடன், படப்பிடிப்பு  தொடங்குவதனால் தனது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார்.
இசையமைப்பாளர் அனிருத் மற்றொரு தரமான, இசை நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலில் இடம் பிடிக்கும் பாடல்களை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது,இது மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த படத்திற்கு அவரது தனித் தன்மையான இசையை அளிப்பார் என்பது உறுதியாகிறது. படத்தின் கதையோட்டத்தை முழுமையாக பிரதிபலிக்கும் வகையில், அதிரடியான பாடல்கள் மற்றும் ஆத்மார்த்தமான மெல்லிசை பாடல்களையும் ரசிகர்கள் எதிர்நோக்கலாம்.

படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக துவங்கியுள்ளதால், ‘தளபதி’ விஜய்யின் புகழ்பெற்ற திரைவாழ்க்கையில் மற்றொரு மைல்கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கப்படும் இந்தப் படத்தை உருவாக்க படக்குழு உறுதி ஏற்று ஒரு சிறந்த பயணத்தை துவக்கியுள்ளது.

நடிகர்கள்:
‘தளபதி’ விஜய்
பூஜா ஹெக்டே
பிரகாஷ் ராஜ்
கௌதம் வாசுதேவ் மேனன்
பாபி தியோல்
பிரியாமணி
நரேன்
மமிதா பைஜு
மோனிஷா பிளஸ்ஸி

படக்குழு:
இயக்குனர்: எச் வினோத்
தயாரிப்பு: கே. வி. என் புரொடக்ஷன்ஸ்
தயாரிப்பாளர்: வெங்கட் கே. நாராயணா
இணை தயாரிப்பாளர்கள்: ஜெகதீஷ் பழனிசாமி, லோஹித் என். கே.
இசையமைப்பாளர்: அனிருத்
ஒளிப்பதிவாளர்: சத்யன் சூரியன்
படத்தொகுப்பாளர்: பிரதீப் E ராகவ்
கலை இயக்குனர்: செல்வகுமார்
சண்டைப் பயிற்சி இயக்குனர்: ‘அனல்’ அரசு
ஆடை வடிவமைப்பாளர்: பல்லவி சிங்
விளம்பர வடிவமைப்பாளர்: கோபி பிரசன்னா
மக்கள் தொடர்பு: ரியாஸ் K அஹ்மத் (V4U Media)

Previous Post

ஹம்சவிர்தன் நடிக்கும் அதிரடி சஸ்பென்ஸ் கமர்ஷியல் திரைப்படமான ‘மகேஸ்வரா’ படப்பிடிப்பில் சண்டைக் காட்சியின் போது விபத்து சிறு காயங்களுடன் ஹம்சவிர்தன் உள்ளிட்டோர் தப்பினர்

Next Post

“2K லவ்ஸ்டோரி” நாயகனை அறிமுகப்படுத்தும் விழா !!

Next Post

"2K லவ்ஸ்டோரி" நாயகனை அறிமுகப்படுத்தும் விழா !!

Popular News

  • மக்கள் தலைவா – விமர்சனம்

    மக்கள் தலைவா – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • விக்டரி வெங்கடேஷ், நந்தமூரி கல்யாண் ராம், அனில் ரவிபுடி, சாஹு கரபாட்டி, ஷைன் ஸ்கிரீன்ஸ் வழங்கும் #VenkyAnil5 #NkrAR2, சுரேஷ் புரொடக்ஷன்ஸ், ஜீ ஸ்டூடியோஸ், சுமதி. அர்ச்சனா வழங்கும் திரைப்படம் பிரம்மாண்டமாக துவக்கம்

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் சினிமாவின் முதல் வாலிபால் திரைப்படம் “அட்டாக்கர்” படபூஜையுடன் இனிதே துவங்கியது

    0 shares
    Share 0 Tweet 0
  • சத்யஜோதி பிலிம்ஸ் – சீயான் 63 அடுத்த கட்டத்திற்கு நகர்வு! தொடங்கியது படப்பிடிப்பு !

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆஸ்திரேலியாவில் திருமணம் செய்து கொண்டார் தயாரிப்பாளர் தீபன் பூபதி; மணமகள் நிவேதிதா கிரி

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மக்கள் தலைவா – விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

June 20, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

June 20, 2026

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 20, 2026

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

June 20, 2026

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 20, 2026

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

June 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.