• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் நடிகர் விக்ராந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘LBW- லவ் பியாண்ட் விக்கெட்’ இணையத்தொடர் ஜனவரி 1, 2026 முதல் ஜியோஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகிறது!

by Tamil2daynews
January 2, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் நடிகர் விக்ராந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘LBW- லவ் பியாண்ட் விக்கெட்’ இணையத்தொடர் ஜனவரி 1, 2026 முதல் ஜியோஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகிறது!

 

ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸாக உருவாகியுள்ள ‘LWB- லவ் பியாண்ட் விக்கெட்’ என்ற ஒரிஜினல் வெப் சீரிஸ் மூலமாக நடிகர் விக்ராந்த் ஓடிடியில் அறிமுகமாகிறார். இந்த இணையத்தொடர் ஜனவரி 1, 2026 முதல் பிரத்யேகமாக ஜியோஹாட்ஸ்டாரில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீம் ஆகிறது.

இதன் புரோமோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றதுடன் நடிகர் விக்ராந்த் கரியரில் திருப்புமுனை ஏற்படுத்தும் கிரிக்கெட் பயிற்சியாளர் கதாபாத்திரத்தில் அவரைக் காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

‘கனா காணும் காலங்கள்’,  ‘ஹார்ட்பீட்’ (சீசன் 1 & 2), ‘உப்பு புளி காரம்’, ‘ஆஃபிஸ்’ மற்றும் ‘போலீஸ் போலீஸ்’ ஆகிய நூற்றுக்கும் அதிகமான லாங் ரன் எபிசோட் கொண்ட இணையத்தொடர்கள் ஹாட்ஸ்டாரில் வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து அதே பாணியில் ஆழமான கதை சொல்லலுடன் ரசிகர்களை கட்டிப்போட வருகிறது ‘LBW’.
சமீபத்தில் நடைபெற்ற, ஜியோஹாட்ஸ்டார் சவுத் அன்பவுண்ட் நிகழ்வில் அறிவிக்கப்பட்டதன்படி ப்ரீமியர் ஆகும் முதல் அசல் தமிழ் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது. ’LBW – லவ் பியாண்ட் விக்கெட்’ கதைப்படி ஒரு காலத்தில் நம்பிக்கைக்குரிய கிரிக்கெட் வீரனாக இருந்த  ரங்கனின் கரியரில் பெரிய முன்னேற்றம் இல்லாமல் போகிறது. இப்போது பயிற்சியாளராக இருக்கும் ரங்கன், போராடும் கிரிக்கெட் அகாடமியில் ஒரு பின்தங்கிய அணியைப் பயிற்றுவித்து அதன் இழந்த பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் பணியை மேற்கொள்கிறார். கிரிக்கெட்டின் பின்னணியில் அமைக்கப்பட்ட இந்தத் தொடரில் விளையாட்டு, உணர்வுப்பூர்வமான தருணங்கள் மற்றும் லட்சியத்தோடு இரண்டாவது வாய்ப்புக்காகப் போராடுவதன் உண்மையான அர்த்தத்தை களத்திற்கு உள்ளேயும் வெளியேயும் படம்பிடித்து காட்ட இருக்கிறது இந்தத் தொடர்.

அருணா ராக்கி திரைக்கதை எழுதியிருக்க கணேஷ் கார்த்திகேயன் இயக்கியுள்ள இந்தத் தொடரில் சிந்து ஷியாம், நியதி, ஹரிஷ், அயாஸ் கான், அக்ஷதா, நவீன், நிகில் நாயர் மற்றும் விஸ்வ மித்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

வெற்றிகரமான ‘ஹார்ட்பீட்’  இணையத்தொடரை தயாரித்த அட்லீஃபேக்டரி ‘LBW’ தொடரையும் தயாரித்துள்ளது. வலுவான கதைசொல்லல் மற்றும் கதாபாத்திரங்களுடன், ’LBW – லவ் பியாண்ட் விக்கெட்’ தொடர் தலைமுறைகள் கடந்து பார்வையாளர்களை ஈர்க்கும் ஸ்போர்ட்ஸ் கதையாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஜனவரி 1, 2026 முதல் ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் தமிழில் ’LBW – லவ் பியாண்ட் விக்கெட்’ ப்ரீமியர் ஆகிறது.

ஜியோஹாட்ஸ்டார் பற்றி:
ஜியோஹாட்ஸ்டார் இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்று. இது ஜியோசினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆகியவற்றின் இணைப்பின் மூலம் உருவாக்கப்பட்டது. சிறப்பான கதைக்களங்கள், புதுமையான தொழில்நுட்பத்துடன் ஜியோஹாட்ஸ்டார் இந்தியா முழுவதும் உள்ள அனைவருக்கும் பொழுதுபோக்கை மறுவரையறை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Previous Post

டியர் ரதி – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

Next Post

பத்திரிகையாளர்களை செண்டை மேளத்துடன் வரவேற்று சிறப்புக்காட்சியை திரையிட்ட ‘ தி பெட்’ படக்குழு

Next Post

பத்திரிகையாளர்களை செண்டை மேளத்துடன் வரவேற்று சிறப்புக்காட்சியை திரையிட்ட ‘ தி பெட்’ படக்குழு

Popular News

  • பிரைம் வீடியோ, ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ சீரிஸிலிருந்து துள்ளலான புதிய ‘தெய்வா’ பாடலை வெளியிட்டது !

    0 shares
    Share 0 Tweet 0
  • இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பே டயானா’ நன்றி அறிவிப்பு விழா!!

    0 shares
    Share 0 Tweet 0
  • நயன்தாரா- கவின் இணைந்து நடித்திருக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • உன்னதமான காதல் திரைப்படமாக உருவாகியுள்ள “சரீரம்” செப்டம்பர் 26 திரைக்கு வருகிறது !!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் அடுத்த திரைப்படம் “மக்கள் காவலன்”

August 6, 2026

‘ஷம்பாலா’ வெற்றிக் கூட்டணியின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு… சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் ‘கரிகாலா’ – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

August 6, 2026

‘ஜி.டி.என்.’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!

August 6, 2026

ஆகஸ்ட் 28-ல் திரைக்கு வரும் ‘ஒன்ஸ் மோர்’ – அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

August 6, 2026
கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

August 4, 2026

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா!

August 4, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.