’கண்ணப்பா’ திரைப்படத்தை குடும்பத்துடன் பார்த்த நடிகர் ரஜினிகாந்த்!
ஜூன் 15 ஆம் தேதி வெளியான ‘பெத்தராயுடு’ திரைப்படம் சக்திவாய்ந்த கதை சொல்லல், மறக்க முடியாத நடிப்பு மற்றும் இந்தியாவின் மிக முக்கியமான இரண்டு நட்சத்திரங்களின் திரை இருப்பு ஆகியவற்றால் தெலுங்கு திரையுலக வரலாற்றில் மிக முக்கியமான திரைப்படமாக உள்ளது.
படத்தை பார்த்துவிட்டு படத்தையும், விஷ்ணு மஞ்சு உள்ளிட்ட படக்குழுவினரை வெகுவாக பாராட்டிய ரஜினிகாந்த், விஷ்ணு மஞ்சுவின் நடிப்பு, படத்தின் ஆன்மீக ஆழம், காட்சி செழுமை மற்றும் உணர்ச்சிகரமான காட்சிகள் குறித்து பாராட்டி பேசியுள்ளார். மேலும், படம் அசாதாரணமானதாக இருக்கிறது, என்றும் அவர் தெரிவித்தார். ரஜினிகாந்தின் பாராட்டால் டாக்டர்.மோகன் பாபு மற்றும் விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சியடைந்தனர்.
ரஜினிகாந்த் ‘கண்ணப்பா’ படத்தை பாராட்டியது குறித்து கூறிய விஷ்ணு மஞ்சு, “ரஜினி சாரின் இந்த அரவணைப்புக்காக நான் 22 ஆண்டுகளாகக் காத்திருந்தேன். இன்று, நான் அச்சமின்றி உணர்கிறேன். தடுக்க முடியாததாக உணர்கிறேன். கண்ணப்பா வருகிறார்.” என்றார்.
நடிகர் ரஜினிகாந்தின் பாராட்டு ‘கண்ணப்பா’ படக்குழுவுக்கு மிகுந்த நம்பிக்கை அளித்திருப்பதோடு, பெரும் உற்சாகத்தையும் கொடுத்திருக்கிறது.
வரும் ஜூன் 27 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘கண்ணப்பா’ ஏற்கனவே ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வெளியீட்டு தேதி நெருங்க நெருங்க எதிர்பார்ப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.