“பேட்டரி” பட இசை விழா சுவாரஸ்யங்கள்..!
ஸ்ரீ அண்ணாமலையார் மூவிஸ் தயாரிப்பில் மணிபாரதி இயக்க, செங்குட்டுவன், அம்மு அபிராமி நடித்து, சித்தார்த் விபின் இசையில் பேட்டரி படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் நடிகை, தொழில் நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர்.


இயக்குனர் பன்னீர் செல்வம் பேசும்போது,
இயக்குனர் மணிபாரதி எப்பொழுதும் இயங்கிக் கொண்டே இருக்கும் மனிதர். பட வாய்ப்பு இல்லையென்றாலும், பாடல் எழுதுவது, கதை எழுதுவது என்று சதா இயங்கிக் கொண்டே இருப்பார் என்றார்.
நடிகர் ராஜ் தீபக் ஷெட்டி பேசும்போது,
பேட்டரி எனக்கு முதல் தமிழ் படம். முழுவதும் சார்ஜில் இருக்கிறது. மேட் இன் சைனா இல்லை. மேட் இன் சென்னை பேட்டரி என்றார்.
வசனகர்த்தா ரவி வர்மன் பச்சையப்பன் பேசும்போது,
எங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியிருக்கிறோம். இப்படம் 2020 மார்ச் மாதமே வெளியாக வேண்டியது. ஆனால், கொரோனா காரணமாக இவ்வளவு நாட்கள் தள்ளிப் போய் விட்டது. இப்படத்தில் வரும் சில காட்சிகள் ஒரு படத்தில் வந்திருக்கிறது. ஆனால், அது யதார்த்தமாக நடந்தது தான் என்றார்.

அனைத்து பெரிய இயக்குனர்களின் கதை டிஸ்கஷனிலும் இயக்குனர் மணிபாரதி இருப்பார். திரைப்படத்தைப் பொருத்தவரையில் சிறிய படம், பெரிய படம் என்று எதுவும் கிடையாது. பாகுபலி பிரமாண்டமாக ஓடியது போல, காக்கா முட்டையும் அமைதியாக வெற்றிபெற்றது. அதேபோல் இப்படமும் வெற்றி பெறும்.