• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘மகாஅவதார் நரசிம்மா’ முதல் வாரத்தில் 53 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்திருக்கிறது

by Tamil2daynews
August 2, 2025
in சினிமா செய்திகள்
0
‘மகாஅவதார் நரசிம்மா’ முதல் வாரத்தில் 53 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்திருக்கிறது
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘மகாஅவதார் நரசிம்மா’ முதல் வாரத்தில் 53 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்திருக்கிறது

 

இதயங்களை தூண்டும் வகையிலும், கலாச்சாரத்தை எழுப்பும் வகையிலும் வெளியான ‘மகாஅவதார் நரசிம்மா’  முதல் வாரத்தில் இந்தியாவில் 53 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருக்கிறது.

க்ளீம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் அஸ்வின் குமார் இயக்கத்தில் ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் வழங்கிய ‘மகாஅவதார் நரசிம்மா’ இந்தியாவில் வெளியான ஒரே வாரத்தில் 53 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருக்கிறது. இது வணிக ரீதியிலான வெற்றியை மட்டுமல்ல.. நாடு முழுவதும் ஆழமாக எதிரொலிக்கும் பிரத்யேக கலாச்சார அலையையும் குறிப்பிடுகிறது.

இந்தப் படத்தை வித்தியாசப்படுத்துவது அதன் மன்னிப்பு கேட்காத சனாதனி எனும் மையமாகும். இந்து தத்துவம் – இந்து தர்மம் மற்றும் பண்டைய மதிப்பீடுகள் மீது ஒளியை போல் பிரகாசிக்கும் ஒரு கதை.. காட்சி ரீதியாக சக்தி வாய்ந்த கதை மூலம் உயிர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. இது தலைமுறைகள் முழுவதும் உரையாடல்களையும் ,விவாதங்களையும் தூண்டும் ஒரு ஆழமான கலாச்சார அனுபவம். மேலும் இது ஒரு திரைப்படத்தை விட அதிகமாக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பார்வையாளர்களும், விமர்சகர்களும் இந்த மகாஅவதார் நரசிம்மாவை ‘ குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என இருவரும் பார்க்க வேண்டிய படம் ‘ என்று குறிப்பிடுகிறார்கள். இது பாரம்பரியத்தில் வேரூன்றி இருக்கும் அதே தருணத்தில் கல்வி கற்பிக்கும் மற்றும் ஊக்கமளிக்கும் வகையில் குடும்பங்கள் திரையரங்குகளுக்கு திரண்டு வருகின்றன. மகாஅவதார் நரசிம்மா பொழுதுபோக்கிற்காக மட்டுமல்லாமல், நம் மதிப்புகள், வரலாறு மற்றும் ஆன்மீக பாடங்களை அடுத்த தலைமுறைக்கும் கடத்துவதற்காக உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்திய சினிமாவை அடித்தளமாகவும்,  பிரமாண்டமாகவும் கதை சொல்லல் மூலம் மறு வரையறை செய்வதில் புகழ்பெற்ற ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க பயணத்தில் மகாஅவதார் நரசிம்மா மற்றொரு மைல்கல். ‘காந்தாரா’, ‘கே ஜி எஃப் ‘மற்றும் ‘ சலார் ‘ஆகிய படைப்புகளின் மகத்தான வெற்றியை தொடர்ந்து.. இந்த நிறுவனத்தின் அண்மைய வெளியீடான ‘மகாஅவதார் நரசிம்மா’ எனும் படைப்பும் இந்திய அடையாளத்தில் வேரூன்றிய மற்றும் சினிமா பார்வையில் பலமான கதைகளை வடிவமைக்கும் அவர்களின் பாரம்பரியத்தை தொடர்கிறது.
Previous Post

வரலட்சுமி சரத்குமார் – இலங்கையில் எடுத்த புகைப்படங்களில் மென்மையும் மின்னலும்! அழகு, ஆற்றல் மற்றும் தனித்துவ திறமையின் சின்னமாக ஜொலிக்கிறார்!

Next Post

பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், ரசிகர்களுக்கு ‘அக்யூஸ்ட்’ தயாரிப்பாளர்கள் மற்றும் படக்குழுவினர் மனமார்ந்த நன்றி

Next Post

பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், ரசிகர்களுக்கு ‘அக்யூஸ்ட்’ தயாரிப்பாளர்கள் மற்றும் படக்குழுவினர் மனமார்ந்த நன்றி

Popular News

  • வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)

    0 shares
    Share 0 Tweet 0
  • ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட்’

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஆதி புருஷ்’ படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக சைஃப் அலி கான் ஒப்பந்தம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் உணர்ச்சிமிகு பயணத்தை வெளிப்படுத்தும் கவித்துவமான ‘வெள்ளிச்சுடரே’ பாடல்!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் சூர்யாவின் ‘கருப்பு ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)

May 2, 2026

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட்’

May 2, 2026

‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் உணர்ச்சிமிகு பயணத்தை வெளிப்படுத்தும் கவித்துவமான ‘வெள்ளிச்சுடரே’ பாடல்!

May 2, 2026

பிரைம் வீடியோ தனது தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் டிராமா சீரிஸான ‘எக்ஸாம்’ (Exam) சீரிஸின் உலகளாவிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது — மே 15 முதல் ஸ்ட்ரீமாகிறது

May 2, 2026

காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!

May 2, 2026

நடிகர் சூர்யாவின் ‘கருப்பு ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

May 2, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.