• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Advertisement
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

லவ் மேரேஜ் – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 4

by Tamil2daynews
June 28, 2025
in விமர்சனம்
0
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
லவ் மேரேஜ் – விமர்சனம் 
நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் அறிமுக இயக்குநர் ஷண்முக பிரியன் இயக்கத்தில் உருவாகி இன்று திரையரங்கில் வெளிவந்துள்ள திரைப்படம் Love Marriage. கஜராஜ், அருள்தாஸ், ரமேஷ் திலக், சுஷ்மிதா பட் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
33 வயதாகும் ஹீரோ விக்ரம் பிரபுவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. சொந்தத்தில் கூட அவருக்கு பெண் கொடுக்க யோசிக்கிறார்கள். இதனால் 500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊரில் பெண் பார்த்து நிச்சயம் செய்யப்படுகிறது.
நிச்சயத்திற்காக மாப்பிள்ளை வீட்டில் இருந்து அனைவரும் கிளம்பி பெண் வீட்டிற்கு செல்கிறார். நிச்சயதார்த்தம் நன்றாக நடந்து முடிய, ஊருக்கு கிளம்பும் வேளையில், அவர்கள் வந்த வண்டியில் கோளாறு ஏற்படுகிறது. இதனால் இன்று ஒரு இரவு பெண் வீட்டில் தங்கிவிட்டு, நாளை காலை செல்லலாம் என முடிவு செய்கிறார்கள்.
ஆனால், அந்த சமயத்தில் கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இதனால் மாப்பிள்ளை வீட்டார் அனைவரும் பெண் வீட்டில் தங்கி விடும் சூழல் ஏற்படுகிறது. இந்த சமயத்தில், கட்டிக்கபோகும் பெண்ணிடம் பேசி பழகி நெருக்கமாக வேண்டும் என முயற்சி செய்கிறார் விக்ரம் பிரபு.
Love Marriage movie review: Vikram Prabhu's film is a pleasant rom-com that never achieves its full potential - India Today
ஆனால், கதாநாயகியோ வேறு ஒருவரை காதலித்து வருகிறார். அவர் வேறொரு சாதி என்பதால் இவர்கள் திருமணத்திற்கு கதாநாயகியின் பெற்றோர் சம்மதிக்கவில்லை. அதற்கு பதிலாக விக்ரம் பிரபுவை தங்கள் மகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு எடுத்துவிட்டனர்.
இப்படியிருக்க, ஒரு நாள் தான் காதலித்து வந்தவனுடன் கதாநாயகி ஓடிப்போய் விடுகிறார். இதனால் திருமணம் நின்று போக, கதாநாயகன் விக்ரம் பிரபு அதிர்ச்சியில் மயக்கம் போட்டு விழ, அதன்பின் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதி கதை..
கதாநாயகன் விக்ரம் பிரபு தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக ஏற்று நடித்துள்ளார். அதே போல் மற்ற அனைத்து நடிகர்கள், நடிகைகள் நடிப்பும் சிறப்பாக இருந்தது. குறிப்பாக டாக்சிக் மாமாவாக நடித்துள்ள அருள்தாஸ் நன்றாக ஸ்கோர் செய்துவிட்டார்.
மேலும் நகைச்சுவை காட்சிகள் ரசிக்கும் படியாக இருந்தது. ஆனால், ரமேஷ் திலக் கதாபாத்திரம் இன்னும் வலுவாக இருந்திருக்கலாம் என தோன்றியது.
படத்தின் ஆரம்பம் முதல் இடைவேளை காட்சி வரை திரைக்கதையை அழகாக அமைத்திருந்தார் இயக்குநர் ஷண்முக பிரியன். ஆனால், இடைவேளைக்கு பின் இரண்டாம் பாதியில் ஏற்பட்ட தொய்வு நமக்கு ஏமாற்றத்தை தருகிறது. அது இப்படத்தின் மிகப்பெரிய மைனஸ் பாயிண்டாகும்.
திருமணம் ஆகாமல் ஒரு ஆண் படும் வேதனை, இந்த சமூகத்தில் அவனுக்கு எற்படும் அவமானங்களை திரையில் காட்டிய விதம் அருமை. அதே போல் சாதியை காரணமாக வைத்து நடக்காமல் போகும் திருமணங்கள் குறித்து பேசியதற்கு பாராட்டுக்கள். சாதியா இல்லை பெற்ற மகளா என்கிற சூழலில், கதாநாயகியின் தந்தை எனக்கு என் மகள்தான் முக்கியம் என எடுத்த முடிவு நன்றாக இருந்தது.Love Marriage' Movie Review: Vikram Prabhu In A Loveless Marriage Of Comedy And COVID
இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் படத்திற்கு மிகப்பெரிய பலம். பாடல்கள் மற்றும் பின்னணி இசை என இரண்டிலும் பட்டையை கிளப்பியுள்ளார். ஆனால், இரண்டாம் பாதியில் காட்சிகள் பெரிதாக நம்மை ஈர்க்கவில்லை என்பதால், அங்கு ஷான் ரோல்டன் இசையும் நமக்கு பெரிதளவில் தெரியவில்லை.
ஒளிப்பதிவு படத்தை அழகாக காட்டியுள்ளது. எடிட்டிங் இன்னும் கூட நன்றாக இருந்திருக்கலாம் என தோன்றுகிறது.
இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் படத்திற்கு மிகப்பெரிய பலம். பாடல்கள் மற்றும் பின்னணி இசை என இரண்டிலும் பட்டையை கிளப்பியுள்ளார். ஆனால், இரண்டாம் பாதியில் காட்சிகள் பெரிதாக நம்மை ஈர்க்கவில்லை என்பதால், அங்கு ஷான் ரோல்டன் இசையும் நமக்கு பெரிதளவில் தெரியவில்லை.
ஒளிப்பதிவு படத்தை அழகாக காட்டியுள்ளது. எடிட்டிங் இன்னும் கூட நன்றாக இருந்திருக்கலாம் என தோன்றுகிறது.
மொத்தத்தில் வயதான நபர்களுக்கு திருமணத்தடை ஏற்படும் போது இந்த படத்தை பார்த்தால் மனதிற்கு சற்று ஆறுதலாக இருக்கும்.
மொத்தத்தில் இந்த லவ் மேரேஜ் படம் குடும்பத்துடன் காண ஏற்ற படம்.
Previous Post

கண்ணப்பா – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

Next Post

வேரூஸ் புரொடக்‌ஷன்ஸ் வழங்கும் இயக்குநர் சூரியபிரதாப் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிகர் கவுதம் ராம் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்தார்!

Next Post

வேரூஸ் புரொடக்‌ஷன்ஸ் வழங்கும் இயக்குநர் சூரியபிரதாப் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிகர் கவுதம் ராம் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்தார்!

Popular News

  • பழநி தல வரலாறு

    பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • Mrs and Mr – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • கைமேரா பட இசை வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0
  • Freedom – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில், வெளியானது “மஹாவதார் நரசிம்மா” டிரெய்லர் !

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில், வெளியானது “மஹாவதார் நரசிம்மா” டிரெய்லர் !

July 12, 2025

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில், தனுஷ் நடிக்கும் D54 பிரம்மாண்ட திரைப்படம் – பூஜையுடன் ஷூட்டிங் ஆரம்பம்!

July 12, 2025

“டிரெண்டிங்” பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

July 12, 2025

சவுத் ஸ்டார்ஸ் x மார்வெல்: ‘ஃபென்டாஸ்டிக் ஃபோர்’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எந்தெந்த நடிகர்கள் நடிக்கலாம்?

July 12, 2025

“பறந்து போ” திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை கொண்டாடிய படக்குழுவினர்!

July 12, 2025

Freedom – விமர்சனம்

July 12, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.