தனித்துவமான, உள்ளடக்கம் சார்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து, பல அடுக்குகளுடன் கூடிய கதாநாயகன் கதாபாத்திரங்களில் திறமையை வெளிக்கொணர்ந்து வருகிற நடிகர் கவுதம் ராம் கார்த்திக், தற்போது வேரூஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் கமிட் ஆகியுள்ளார்.
இந்தப் பெயரிடப்படாத திரைப்படம் ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் கிரைம் த்ரில்லர் ஆக உருவாகவிருக்கிறது. இதில் கவுதம் ராம் கார்த்திக், ஒரு போலீஸ் அதிகாரியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.
“நாங்கள் வேரூஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவத்தை தொடங்கிய முக்கிய நோக்கம் — நம்முடைய ஆர்வத்தையும் அனுபவத்தையும் கொண்டு தரமான கற்பனைதிறன் கொண்ட உள்ளடக்கங்களை உருவாக்குவதே. படங்கள், டிஜிட்டல் மற்றும் இசை துறைகளில் நாங்கள் முன்னதாகவே வெற்றிகரமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம், குறிப்பாக அண்மையில் வெளியான நம்முடைய ‘We Call Him Dhoni’ பெரும் வரவேற்பைப் பெற்றது.
நகைச்சுவையிலிருந்து மிக ஆழமான கதாபாத்திரங்கள் வரை, பல்வேறு கதாபாத்திரங்களின் மூலம் தன்னை நிரூபித்தவர். இந்தப் படத்தில் அவர் ஒரு போலீசாக வரும் வகை, அவரது கேரியரில் ஒரு முக்கியமான அடையாளமாக மாறும் என்பதில் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்.”
இதற்கு முன் வேரூஸ் புரொடக்ஷன்ஸ், விமர்சன ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் வெற்றிபெற்ற “பேச்சி” எனும் ஹாரர் த்ரில்லர் படத்தை கோ-ப்ரொடூஸ் செய்திருந்தது.
•PRO – ரேகா
படப்பிடிப்பு விரைவில் துவங்குகிறது, மேலும் படத்தின் பெரும்பாலான பகுதி சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் நடைபெறும். இதில் பலர் அறிந்த முகங்கள் நடிக்கவிருக்க, முழுமையான நடிப்பு பட்டியலை அடுத்த கட்ட அறிவிப்புகளில் வெளியிடுவதாக தெரிவிக்கப்படுகிறது.