• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சூப்பர் சிங்கர் ஜூனியர்  நிகழ்ச்சியில் கலக்கும்,  இசையமைப்பாளர் தமன் !! 

by Tamil2daynews
August 29, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

சூப்பர் சிங்கர் ஜூனியர்  நிகழ்ச்சியில் கலக்கும்,  இசையமைப்பாளர் தமன் !! 

 

சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் நீதிபதியாக கலந்துகொண்டுள்ள இசையமைப்பாளர் தமன் பாடகர்களோடு இயல்பாக பழகுவதில் ஆரம்பித்து, அவர்களுக்கு பல சர்ப்ரைஸ் தந்து வருகிறார். பல பாடகர்களுக்கும் அவர்களின் வாழ்வில் மாற்றத்தை தரும் வாய்ப்பை வழங்கி வருகிறார்.  இசையமைப்பாளார்  தமனின் இந்த செயல்கள் அனைவரின் பாராட்டைப் பெற்று வருகிறது.

தமிழ்நாட்டு இளம் இசைத் திறமையாளர்களின் வாழ்வில் மாற்றத்தை தந்து வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. சிறுவர்களுக்காக தற்போது நடந்து வரும், சூப்பர் சிங்கர் ஜூனியர் 9 வது சீசனில் தான், நீதிபதியாக கலந்துகொண்டிருக்கிறார் இசையமைப்பாளர் தமன்.  பொதுவாக பாட்டுப்போட்டி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் நடுவர்கள் பாடகர்களிடம் இறுக்கமாகவும்,  கண்டிப்பாகவும் நடந்து கொள்வார்கள்.  ஆனால், இதற்கு முன்பு கலந்துகொண்ட நீதிபதிகள் போல் அல்லாமல்,  போட்டியாளர்களோடு மிக எளிமையாக பழகுவது, அவர்களுக்கு ஊக்கம் தருவது,  சர்ப்ரைஸ் தருவது, சுவாரஸ்யமான கமெண்ட்கள் தந்து உற்சாகப்படுத்துவது, என அசத்தி வருகிறார் தமன்.

இந்த சீசன் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில், பல நெகிழ்ச்சியான சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. அனைவரையும் தன் பாடலால் உருக வைத்த கண் பார்வையற்ற சிறுமி புரோகித ஶ்ரீக்கு பார்வை கிடைக்க அனைத்து உதவிகளையும் செயவதாக உறுதிளியத்த  இசையமைப்பாளர் தமன், கானா பாடலை பாடி அசத்திய சிறுவன் கலர்வெடி கோகுலுக்கு திரைப்படத்தில் பாடல் பாட வாய்ப்பளிப்பதாக உறுதியளித்தார்.

கடந்த வாரம் நடந்த நிகழ்ச்சியில், ஹரிணி, ரிச்சா  ஆகிய இரு பாடகர்கள் “ஊர்வசி ஊர்வசி” பாடலை மிக அற்புதமாக பாடினார்கள். அவர்கள் பாடிய வீடியோவை, கண்டிப்பாக  ஏ.ஆர்.ரஹ்மானிடம் பகிர்வதாக வாக்குறுதி தந்தார் தமன்.

கௌரவ் எனும் பாடகர் “ரஞ்சிதமே ரஞ்சிதமே” பாடலை பாடினார். அதில் இம்ப்ரெஸ் ஆன தமன், அனிருத் மற்றும் தளபதி விஜய்யிடம் கூட்டிப்போவதாக வாக்குறுதி தந்தார்.

இதுமட்டுமல்லாமல் பிரபல பாடகர் ஆண்டனி தாஸ், தமனிடம் வாய்ப்புக் கேட்க அவருக்கு  ஒரு புதிய தெலுங்குப் படத்தில் பாடல் வாய்ப்புத் தந்துள்ளார். அந்தப்பாடல் அடுத்த வாரம் வெளியாகவுள்ளது குறிப்பிடதக்கது.

தமன் நீதிபதியாக அல்லாமல், அனைவருடனும் மிக சகஜமாக பழகி,  எல்லோரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார்.

மேலும் ஒரு ஆச்சர்யமாக இசையமைப்பாளர் தமனின் மனைவி, அவருக்கே தெரியாமல் சர்ப்ரைஸாக நிகழ்ச்சியில் வந்து கலந்துகொண்டார். அப்போது யாரும் அறியாத, தமனின் பல பர்ஸனல் பக்கங்களைப் பகிர்ந்துகொண்டார். அப்போது தான், ஓய்வு நேரத்தில் தமன், நிகழ்ச்சித் தொகுப்பாளர் மா கா பாவுடன்  இணைந்து கிரிக்கெட் விளையாடும் செய்தியை பகிர்ந்தார்.

முன்னெப்போதும் இல்லாத வகையில், தற்போது நடந்து வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி, கலகலப்போடும் பல நெகிழ்ச்சி சம்பவங்கள் நிறைந்ததாகவும்,  அற்புதமானதாக நடந்து வருகிறது.
Previous Post

மில்லியன் ஸ்டுடியோ MS மன்சூர் வழங்கும் A குகன் சென்னியப்பன் இயக்கத்தில் சத்யராஜ் நடிக்கும் ’வெப்பன்’ படம் சார்பாக #WearHelmetRally நிகழ்ச்சி நடத்தப்பட்டது!

Next Post

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் ‘தனி ஒருவன் 2’

Next Post

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் 'தனி ஒருவன் 2'

Popular News

  • ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிட்டுக்குறிஞ்சி’ முதல் பாடல் குறிஞ்சி மலை மேல 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!

    0 shares
    Share 0 Tweet 0
  • சாய் அபயங்கர் – பாக்யஸ்ரீ போர்ஸ் கூட்டணியில் உருவான ‘ரதிமா’

    0 shares
    Share 0 Tweet 0
  • Romeo Pictures சார்பில் ராகுல் மற்றும் Aviate Pictures சார்பில் கோகுல் ஸ்ரீனிவாசன் இணைந்து தயாரிக்க, ‘ரைட்டர்’ பட இயக்குநரும் ‘DC’ படத்தின் எழுத்தாளருமான ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில், இளைய திலகம் பிரபு மற்றும் புது வரவான பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ்பெற்ற விஜய் வர்மா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை கோலாகலமாக நடைபெற்றது.

    0 shares
    Share 0 Tweet 0
  • முழு நீள சஸ்பென்ஸ் க்ரைம் ஹாரர் த்ரில்லராக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்க, சீன் ரோல்டன் இசையமைக்கும் கே.எஸ். சினிஷ் வழங்கும் ‘நிஞ்ஜா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 24 ஆம் தேதி பூஜையுடன் தொடக்கம்!

August 26, 2026

சாய் அபயங்கர் – பாக்யஸ்ரீ போர்ஸ் கூட்டணியில் உருவான ‘ரதிமா’

August 26, 2026

ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!

August 26, 2026

சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘டாக்ஸிக்’ முன்வெளியீட்டு விழா!

August 26, 2026

பிரசாந்த் வர்மாவின் ‘மகாகாளி’ படத்தின் வெளியீட்டு தேதி & பிரத்யேக கிளிம்ப்ஸ் வெளியீடு

August 26, 2026

‘சிட்டுக்குறிஞ்சி’ முதல் பாடல் குறிஞ்சி மலை மேல 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!

August 26, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.