• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஹாரர்-த்ரில்லர் வகைப் படங்களைத் தயாரிப்பதற்காகவே பிரத்யேகமாக தொடங்கப்பட்டுள்ள ‘நைட் ஷிஃப்ட் ஸ்டுடியோஸ்’ நிறுவனத்தின் முதல் தயாரிப்பில், மம்முட்டி நடிக்கும் ‘பிரமயுகம்’ படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது !

by Tamil2daynews
August 18, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஹாரர்-த்ரில்லர் வகைப் படங்களைத் தயாரிப்பதற்காகவே பிரத்யேகமாக தொடங்கப்பட்டுள்ள ‘நைட் ஷிஃப்ட் ஸ்டுடியோஸ்’ நிறுவனத்தின் முதல் தயாரிப்பில், மம்முட்டி நடிக்கும் ‘பிரமயுகம்’ படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது !

 

17 ஆகஸ்ட்2023 : ஹாரர்-த்ரில்லர் வகைப் படங்களை மட்டுமே தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனமாக ‘நைட் ஷிஃப்ட் ஸ்டுடியோஸ்’ சக்ரவர்த்தி ராமச்சந்திரா-வால் இன்று தொடங்கப்பட்டது.

மம்முட்டி நடிப்பில், ராகுல் சதாசிவன் எழுதி-இயக்கும் மலையாளத் திரைப்படமான ‘பிரமயுகம்’, நைட் ஷிஃப்ட் ஸ்டுடியோஸ் பேனரின் முதல் தயாரிப்பாகும்.
படத்தின் இயக்குநர் ராகுல் சதாசிவன் கூறும்போது, “மம்மூக்காவை இயக்க வேண்டும் என்ற எனது கனவு நிறைவேறி உள்ளதில் மகிழ்ச்சி அடைகிறேன். ‘பிரமயுகம்’ கேரளாவின் இருண்ட காலத்தை மையமாகக் கொண்ட கதை. மேலும், இதை ஒரு சிறந்த திரைப்பட அனுபவமாக மாற்றுவதற்காக தயாரிப்பாளர்களின் ஆதரவைப் பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். உலகம் முழுவதும் உள்ள மம்மூக்காவின் ரசிகர்களுக்கும் திரில்லர் வகை திரைப்பட ரசிகர்களுக்கும் இது ஒரு விருந்தாக இருக்கும் என்று நம்புகிறேன்”.
தயாரிப்பாளர்கள் சக்ரவர்த்தி ராமச்சந்திரா மற்றும் எஸ்.சஷிகாந்த் – “எங்கள் அறிமுகத் தயாரிப்பில் லெஜெண்ட் நடிகர் மம்மூக்கா நடிப்பதில் நாங்கள் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறோம். மம்மூக்காவின் இணையற்ற நடிப்பு இந்தப் படத்தை ஒரு அற்புதமான சினிமா அனுபவமாக கொடுக்கப் போகிறது என்பது உறுதி. ‘பிரமயுகம்’ படத்தில் இதற சில திறமையான நடிகர்கள் மற்றும் குழுவினருடன் இணைந்து எங்கள் இயக்குநர் ராகுல் ஒரு ஆத்மார்த்தமான படைப்பை தரவிருக்கிறார்”.
‘பிரமயுகம்’ படத்தின் படப்பிடிப்பு கொச்சி மற்றும் ஒட்டப்பாலத்தில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.இப்படத்தில் அர்ஜுன் அசோகன், சித்தார்த் பரதன் மற்றும் அமல்டா லிஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஷெஹ்னாத் ஜலால் ஒளிப்பதிவு செய்ய, ஜோதிஷ் சங்கர் கலை வடிவமைப்பாளராகவும், ஷஃபீக் முகமது அலி எடிட்டராகவும், கிறிஸ்டோ சேவியர் இசையமைப்பாளராகவும் உள்ளார். TD ராமகிருஷ்ணன்  வசனம் எழுத, மேக்கப் ரோனெக்ஸ் சேவியர் மற்றும் காஸ்ட்யூம்ஸ் – மெல்வி ஜே வடிவமைக்கின்றனர்.

நைட் ஷிஃப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் YNOT ஸ்டுடியோஸ் வழங்கும் ‘பிரமயுகம்’ திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் 2024-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படும்.

Night Shift Studios & YNOT Studios Present #Bramayugam

Starring Mammootty

Written & Directed by Rahul Sadasivan

Produced by Ramachandra Chakravarthy & S.Sashikanth

Also starring Arjun Ashokan, Sidharth Bharathan, Amalda Liz & others.

Crew

Cinematography – Shehnad Jalal

Production Designer – Jothish Shankar

Music Director – Christo Xavier

Editor – Shafique Mohamed Ali

Dialogue Writer – TD Ramakrishna

Costume Designer – Melwy J

Makeup Chief – Ronex Xavier

Character Designer – Preetisheel Singh Dsouza

Prosthetic Studio – Da Makeup Lab

Sound Designer – Jayadevan Chakkadath

Publicity Design – Aesthetic Kunjamma

Sound Mix – M R Rajakrishnan

Production Controller – Aroma Mohan

Executive Producer – Victor Prabaharan M

PRO

Suresh Chandra – Tamil Nadu

Sabari – For Kerala

L Venugopal – For AP & Telangana

Previous Post

விஜய் ஆண்டனியின் தயாரிப்பு நிறுவனமான ‘குட் டெவில்’ தனது முதல் படமாக பான்-இந்திய லவ் டிராமாவான ‘ரோமியோ’ படத்தை அறிவித்துள்ளது!

Next Post

ஜெயிலர் படக்குழுவினர் நன்றி தெரிவிக்கும் சந்திப்பு ; ஹைலைட்ஸ்

Next Post

ஜெயிலர் படக்குழுவினர் நன்றி தெரிவிக்கும் சந்திப்பு ; ஹைலைட்ஸ்

Popular News

  • மக்கள் தலைவா – விமர்சனம்

    மக்கள் தலைவா – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் சினிமாவின் முதல் வாலிபால் திரைப்படம் “அட்டாக்கர்” படபூஜையுடன் இனிதே துவங்கியது

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • சத்யஜோதி பிலிம்ஸ் – சீயான் 63 அடுத்த கட்டத்திற்கு நகர்வு! தொடங்கியது படப்பிடிப்பு !

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆஸ்திரேலியாவில் திருமணம் செய்து கொண்டார் தயாரிப்பாளர் தீபன் பூபதி; மணமகள் நிவேதிதா கிரி

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மக்கள் தலைவா – விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

June 20, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

June 20, 2026

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 20, 2026

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

June 20, 2026

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 20, 2026

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

June 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.