குளோபல் ஸ்டார் ராம் சரண் கலக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு, டிசம்பர் 21, 2024 அன்று அமெரிக்காவில் நடைபெறவுள்ளது
பிரபல முன்னணி இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், குளோபல் ஸ்டார் ராம் சரண் நடித்துள்ள, “கேம் சேஞ்சர்” திரைப்படம், இந்தியாவெங்கும் மிகப்பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது. இப்படத்தினை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில் தில் ராஜு மற்றும் சிரிஷ் தயாரித்துள்ளனர். கேம் சேஞ்சர் படத்தின் தமிழ் பதிப்பினை, எஸ்விசி ஆதித்யராம் மூவீஸ் வழங்குகிறது. இரண்டு மெகா ஸ்டார் தயாரிப்பாளர்களான திரு.தில்ராஜு & திரு.ஆதித்யராம் இந்த மெகா பட்ஜெட் திரைப்படத்தில் இணைந்துள்ளனர். கேம் சேஞ்சர் திரைப்படம் ஏற்கனவே உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
ராம் சரண் மீதான அபிமானத்தால் ராஜேஷ் கல்லேபள்ளி இந்த மிகப்பெரிய பணியை மேற்கொண்டுள்ளார், இது திரைத்துறை எங்கும் பேசுபொருளாக மாறியுள்ளது. இது குறித்து ராஜேஷ் கூறுகையில்.., “இந்தியப் படமொன்றுக்கு அமெரிக்காவில் முதன்முறையாக இந்த அளவிலான ப்ரீ-ரிலீஸ் நிகழ்வை நடத்துவது பெருமையாக உள்ளது. இந்த வாய்ப்பினை வழங்கிய ராம் சரண், இயக்குநர் ஷங்கர், தயாரிப்பாளர் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் ஆகியோருக்கு நன்றி. இந்த நிகழ்வை மாபெரும் வெற்றியடையச் செய்ய திட்டமிட்டுள்ளோம்.
முன்னதாக வெளியான போஸ்டர்கள், ‘ஜருகண்டி ஜருகண்டி’ மற்றும் ‘ரா மச்சா ரா’ பாடல்கள் மற்றும் டீசர் அட்டகாசமான வரவேற்பை பெற்றுள்ளது. பிரம்மாண்ட படங்களுக்கு பெயர் பெற்ற ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமான புதுமையான சினிமா அனுபவத்தை, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.