• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Advertisement
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

இரண்டு காலக்கட்டங்களை இணைக்கும் உணர்வுபூர்வமான, சஸ்பென்ஸ் மற்றும் ஃபேண்டஸியான காதல் கதை! – விரைவில் படப்பிடிப்பு ஆரம்பம்

by Tamil2daynews
January 27, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

 இரண்டு காலக்கட்டங்களை இணைக்கும் உணர்வுபூர்வமான, சஸ்பென்ஸ் மற்றும் ஃபேண்டஸியான காதல் கதை! – விரைவில் படப்பிடிப்பு ஆரம்பம்

 

போஸ்ட் production மற்றும் கார்பரேட், விளம்பர பட சேவைகளை வழங்கி கொண்டு இருக்கும் நிறுவனம் பிளாக் அண்ட் ஒயிட் மீடியா Solutions Private Limited நிறுவனத்தின் முதல் தயாரிப்பு ‘புரொடக்‌ஷன்ஸ் நம்பர் 1’! – ஃபேண்டஸியான காதல் கதையாக உருவாகிறது!

அறிமுக இயக்குநர் வீஜெ மீனாட்சி சுந்தரம் இயக்கத்தில், ரஜித் மேனன் நடிப்பில் உருவாகும் ஃபேண்டஸி காதல் கதை!

பிளாக் அண்ட் ஒயிட் மீடியா சொல்யூசன்ஸ் பிரைவேட் லிமிடெட் (Black and White Media Solutions Private Limited) நிறுவனம் சார்பில் ஜூட் ஆனந்த்.டே (D Jude Anantth) தயாரிப்பில், உருவாகும் புதிய படத்தின் அறிவிப்பு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது.

விளம்பர படங்கள் மற்றும் கார்ப்பரேட் திரைப்படங்களை இயக்கிய அனுபவம் கொண்ட இயக்குநர் வீஜெ. மீனாட்சி சுந்தரம், இப்படத்தின் மூலம் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகிறார்.

1983 மற்றும் 2023 என இரண்டு காலக்கட்டங்களை இணைக்கும் கதையை காதல் மற்றும் ஃபேண்டஸியாக சுவாரஸ்யமாகவும், ஜனரஞ்சகமாகவும் சொல்ல இருப்பதாக தெரிவித்த இயக்குநர், தற்போது படத்தின் அறிவிப்பு மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. படம் பற்றி மற்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும், என்றார்.

இதில் கதாநாயகனாக தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வரும் ரஜித்.CR நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக முன்னணி நடிகையை நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

விருது பெற்ற கன்னட திரைப்படமான ‘கோழி எஸ்ரூ’ படத்தின் ஒளிப்பதிவாளர் பிரான்சீஸ் ராஜ்குமார்.ஏ (Francis Rajkumar A) ஒளிப்பதிவு, இசைத்துறையில் பல வருட அனுபவம் வாய்ந்த ஷீன் எல்.க்ளஃபோர்ட் (Shean L.Cleford) இசை, ‘யாத்திசை’ மற்றும் ‘ஞானசெருக்கு’ ஆகிய படங்களுக்கு படத்தொகுப்பு செய்த மகேந்திரன் கணேசன் படத்தொகுப்பு, என பலம் வாய்ந்த தொழில்நுட்ப கலைஞர்களைக் கொண்டு தரமான படமாகவும், கமர்ஷியல் ரீதியாக பிரமாண்டமாகவும் இப்படம் உருவாக உள்ளது.

கொடைக்கானலில் உள்ள கிராமம் ஒன்றில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ள படக்குழு பிப்ரவரி கடைசி அல்லது மார்ச் முதல் வாரத்தில் படப்பிடிப்பை தொடங்க முடிவு செய்துள்ளது.

Previous Post

இனிமே நாங்கதா ஹெட்லைன்ஸ் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !!

Next Post

காக்கா, கழுகு கதைக்கு முற்றுபுள்ளி வைத்தார் நடிகர் ரஜினி

Next Post

காக்கா, கழுகு கதைக்கு முற்றுபுள்ளி வைத்தார் நடிகர் ரஜினி

Popular News

  • சனி பகவானை எப்படி வணங்க வேண்டும்..!

    சனி பகவானை எப்படி வணங்க வேண்டும்..!

    0 shares
    Share 0 Tweet 0
  • லெவன் – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

    0 shares
    Share 0 Tweet 0
  • மாமன் – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜோரா கைய தட்டுங்க – விமர்சனம் ரேட்டிங் – 3 – 5

    0 shares
    Share 0 Tweet 0
  • பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0

Recent News

மாமன் – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

May 17, 2025

ஜோரா கைய தட்டுங்க – விமர்சனம் ரேட்டிங் – 3 – 5

May 17, 2025

டிடி நெக்ஸ்ட் லெவல் – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

May 17, 2025

லெவன் – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

May 17, 2025
விஜய் மில்டன் இயக்கும் தமிழ்-தெலுங்கு இருமொழிப் படத்தில் ராஜ் தருண் முக்கிய பாத்திரத்தில் நடிக்க, ரஃப் நோட் புரொடக்‌ஷன் அடுத்த தயாரிப்பை அறிவிக்கிறது.

விஜய் மில்டன் இயக்கும் தமிழ்-தெலுங்கு இருமொழிப் படத்தில் ராஜ் தருண் முக்கிய பாத்திரத்தில் நடிக்க, ரஃப் நோட் புரொடக்‌ஷன் அடுத்த தயாரிப்பை அறிவிக்கிறது.

May 13, 2025

தமிழ் திரையுலக முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து வெளியிட்ட ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ‘ ஏஸ் ‘ (ACE ) பட முன்னோட்டம்

May 13, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.