ZEE5 இன் மலையாள ஆந்தாலஜி தொகுப்பான ‘மனோரதங்கள்’ வெளியீட்டு விழாவில், நட்சத்திர நடிகர் மோகன்லால் கலந்து கொண்டார்.
பத்ம விபூஷன், டாக்டர் கமல்ஹாசன் ஒன்பது அழுத்தமான கதைகளை உள்ளடக்கிய இந்த தொகுப்பை அறிமுகப்படுதுகிறார். : ‘ஒல்லவும் தீரவும்’ (சிற்றலைகள் மற்றும் நதிக்கரை), கதையில் புகழ்பெற்ற மோகன்லால் நடிக்க, இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கியுள்ளார். ‘கடுகண்ணவ ஒரு யாத்திரை குறிப்பு’ (கடுகண்ணவ: ஒரு பயணக் குறிப்பு) இயக்குநர் ரஞ்சித்தின் இயக்கத்தில் நட்சத்திர நடிகர் மம்முட்டி நடித்துள்ளார். ‘ஷிலாலிகிதம்’ (கல்வெட்டுகள்) கதையில் பிஜு மேனன், சாந்திகிருஷ்ணா மற்றும் ஜாய் மேத்யூ ஆகியோர் நடிக்க, பிரியதர்ஷன் இயக்கியுள்ளார். ‘காட்சி’ (பார்வை) கதையில் பார்வதி திருவோது மற்றும் ஹரிஷ் உத்தமன் நடிக்க, தொலைநோக்குப் படைப்பாளி ஷியாமபிரசாத் இயக்கியுள்ளார். ‘வில்பனா’ (தி சேல்) கதையில் அஸ்வதி நாயர் இயக்கத்தில் மது மற்றும் ஆசிப் அலி நடித்துள்ளனர். மகேஷ் நாராயணன் இயக்கிய ‘ஷெர்லாக்’ கதையில் பன்முக திறமையாளர் ஃபஹத் பாசில் மற்றும் ஜரீனா மொய்து ஆகியோர் நடித்துள்ளனர். ‘ஸ்வர்கம் துறக்குன்ற நேரம்’ (சொர்க்கத்தின் கதவுகள் திறக்கும் போது) கதையில் ஜெயராஜன் நாயரின் இயக்கத்தில் கைலாஷ், இந்திரன்ஸ், நெடுமுடி வேணு, என்ஜி பணிக்கர் மற்றும் சுரபி லட்சுமி உள்ளிட்ட குழுவினர் நடித்துள்ளனர். ‘அப்யம் தீடி வேண்டும்’ (மீண்டும் ஒருமுறை புகலிடம் தேடி) கதையில் புகழ் பெற்ற ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் சித்திக், இஷித் யாமினி மற்றும் நசீர் நடித்துள்ளனர். ‘காதல்க்காட்டு’ (கடல் தென்றல்) கதையினை இந்திரஜித் மற்றும் அபர்ணா பாலமுரளி நடிப்பில், ரதீஷ் அம்பாட் இயக்கியுள்ளார்.இந்நிகழ்வினில் மோகன்லால் கூறுகையில் , “எம்டி சார் எழுதிய இந்தக் கதைக்காக என்னை அணுகியபோது, அவருக்கு குரு தட்சிணையாக இதைச் செய்ய ஆசைப்பட்டேன். மனோரதங்கள் ஆகஸ்ட் 15 அன்று ZEE5 இல் திரையிடப்படுகிறது. இந்த தனித்துவமான திட்டமானது ஓடிடி ஊடகத்திற்காக வடிவமைக்கப்பட்ட ஒன்பது திரைக்கதைகளைக் கொண்டுள்ளது, அவை இப்போது இந்திய சினிமாவின் புகழ்பெற்ற இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களால் திரைப்படங்களாக மாற்றப்பட்டுள்ளன. பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்ட இந்த காலமற்ற கதைகளை, இந்த முயற்சியின் மூலம் உலகளாவிய பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கப் பங்களித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.