• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘HIT: தி தேர்ட் கேஸ்’ திரைப்படம் உலகம் முழுவதும் முதல் நாளில் ரூ.43 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது!

by Tamil2daynews
May 3, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘HIT: தி தேர்ட் கேஸ்’  திரைப்படம் உலகம் முழுவதும் முதல் நாளில் ரூ.43 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது!

 

நேச்சுரல் ஸ்டார் நானி, தனது திரைப்பயணத்தில் அடுத்தகட்டமாக நட்சத்திர அந்தஸ்தின் உட்ச நிலையை எட்டியுள்ளார். தொடர்ச்சியான மெகா ஹிட் படங்களின் வெற்றியை கொடுத்து வந்த அவர், இப்போது தனது புதிய அதிரடித் திரில்லர் ‘HIT: தி தேர்ட் கேஸ்’ மூலம், பாக்ஸ் ஆபிஸில் அதிரவைக்கும் வசூலைத் தந்துள்ளார். இந்த படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

இப்படத்தின் முதல் காட்சி திரையில் ஓடத் தொடங்கிய தருணத்திலிருந்தே ‘HIT: தி தேர்ட் கேஸ்’ ஒரு பிளாக்பஸ்டராக மாறியது. இப்படத்திற்கான எதிர்பார்ப்புகளை தகர்த்து, முதல் நாள் வசூல் சாதனைகளை முற்றிலும் புதிய முறையில் மாற்றி அமைத்துள்ளது. சாதாரணமாக திரில்லர் படங்களுக்கு பெரிய ஓப்பனிங் கிடைப்பது அரிது. ஆனால் சைலேஷ் கொலானு இயக்கிய இந்த படம், தொடக்க நாளில் ரூ.43 கோடிக்கு மேல் வசூலித்து, நானியின் இதுவரை இருந்த அதிகபட்ச ஓப்பனிங் வசூலான ‘தசரா’வின் ரூ.38 கோடிகளை கடந்துள்ளது.
இந்த அதிரடி வசூல் வெறும் இந்தியாவில் மட்டும் இல்லை. வட அமெரிக்காவிலும் இந்த படம் $1 மில்லியனை கடந்து பெரும் சாதனையைப் படைத்துள்ளது. இரவு 10 மணி நிலவரப்படி, நானி நடித்த படங்களில் மிக உயர்ந்த வசூலையும், ஒரே நாளில் இந்திய படங்களின் வசூலில் முதலிடத்தையும் பிடித்து, $1.18 மில்லியன் வசூலுடன் சாதனை படைத்துள்ளது.

முக்கியமான ரிலீஸ்கள் இல்லாத ஒரு மாதத்தில், ‘HIT 3’ தமிழ்த் திரையுலகத்திற்கும் இந்திய சினிமாவிற்கும் ஒரு புத்துயிர் ஊட்டும் படமாக மாறியுள்ளது. இது நானியின் முந்தைய ஹிட் படங்களைவிட மட்டுமல்லாமல், நேற்று வெளியாகிய அனைத்து இந்திய படங்களையும் பின்னுக்கு தள்ளி, மொழி எல்லைகளைக் கடந்து, தலைசிறந்த முதல் நாள் வசூலைப் பெற்றுள்ளது.

மேலும், வரும் வாரங்களில் பெரிய படங்கள் இல்லாத சூழ்நிலையில், இப்படத்தின் வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தப் படத்தின் வசூல் இன்னும் பல மடங்கு அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாம் நாளுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே மிக அதிக அளவில் உள்ளன — இது ஒரு நாள் அதிசயமல்ல, இது ஒரு பாக்ஸ் ஆபிஸ் பிக்பாங் தொடக்கம்தான்!

Previous Post

உழைப்பாளர் தினத்தில் வெளியான ‘ஒர்க்கர்’ படத்தின் தலைப்பு!

Next Post

Srigreen Productions M S Saravanan தயாரிப்பில் உருவாகியுள்ள ‘அடங்காதே’ திரைப்படத்தை E5 Entertainment ஜெ.ஜெயகிருஷ்ணன் ஜூன் மாதம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகிறார்

Next Post

Srigreen Productions M S Saravanan தயாரிப்பில் உருவாகியுள்ள 'அடங்காதே' திரைப்படத்தை E5 Entertainment ஜெ.ஜெயகிருஷ்ணன் ஜூன் மாதம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகிறார்

Popular News

  • ஆகஸ்ட் 7 முதல் தமிழிலும் கிடைக்கும் ZEE5-இல் பிரம்மாண்ட டிஜிட்டல் பிரீமியருக்கு தயாராகும் ‘லெனின்’

    0 shares
    Share 0 Tweet 0
  • விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஸ்லம் டாக் : 33 டெம்பிள் ரோடு’ திரைப்படத்தில் நடிகை தபுவின் ‘கேரக்டர் கிளிம்ப்ஸ்’ வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • இந்த சுதந்திர தினத்தில், 26/11 பயங்கரவாத தாக்குதலின்போது தைரியமாக நின்று போராடிய பெயரிடப்படாத நாயகர்களின் சொல்லப்படாத கதையை கொண்டுவருகிறது இந்தி ZEE5-இன் பாரத் பாக்ய விதாதா

    0 shares
    Share 0 Tweet 0
  • துல்கர் சல்மானின் ‘ஐ ம் கேம்- I Am Game’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு: ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் !

    0 shares
    Share 0 Tweet 0
  • விசாகப்பட்டினத்தில் பிரம்மாண்டமாக ‘AAA சினிமாஸ்’ தொடங்கி, தனது பொழுதுபோக்கு சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லரை வெளியிட்ட Netflix – வித்தியாசமான ட்விஸ்டுடன் வரும் முழுமையான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம்!

August 12, 2026

நடிகர் வைபவ்வின் ‘மாறுவேஷம்’ திரைப்படம் யூ/ஏ சான்றிதழுடன் அக்டோபர் 1 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

August 12, 2026

‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !

August 12, 2026

‘அடடா’ பாடல் மூலம் தமிழ் சினிமா நினைவுகளை ராப் இசையில் கொண்டு வரும் கில்லா கே மற்றும் பால் டப்பா

August 12, 2026

அட்லி வழங்கும், விஜய் சேதுபதி நடிக்கும் ‘பத்தா’ – அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியீடு!

August 12, 2026

‘சேயோன்’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வருகிறது, அதன் இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு மதுரையில் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.

August 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.