ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சரும பராமரிப்பு அழகு சாதன பொருட்களின் உற்பத்தி துறையில் அடியெடுத்து வைக்கும் நயன்தாரா

by Tamil2daynews
September 14, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

சரும பராமரிப்பு அழகு சாதன பொருட்களின் உற்பத்தி துறையில் அடியெடுத்து வைக்கும் நயன்தாரா

 

சிங்கப்பூர் தொழிலதிபர் டெய்சி மோர்கன் -பிரபல நடிகை நயன்தாரா-  புகழ்பெற்ற இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகிய மூவரும் இணைந்து தோல் பராமரிப்பு தொடர்பான அழகு சாதன பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை பிரிவில் தங்களது புதிய தொழிலைத் தொடங்குகிறார்கள். ‘9 ஸ்கின்’ என பெயரிடப்பட்டிருக்கும் இவர்களது அழகு சாதன பொருட்களின் வணிக முத்திரையை, மலேசிய நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் செப்டம்பர் 29ஆம் தேதியன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிறார்கள்.
சரும பராமரிப்பு துறையில் நிபுணத்துவம் பெற்றிருக்கும் டெய்சி மோர்கன் –  தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகையாகவும், லேடி சூப்பர் ஸ்டாராகவும் வலம் வரும்  நயன்தாராவின் நட்சத்திர ஈர்ப்பு – முன்னணி இயக்குநரான விக்னேஷ் சிவனின் படைப்பாற்றல்.. என இந்த மூவரும் கூட்டணி அமைத்து, தோல் தொடர்பான பிரச்சனைகளுக்கும், சரும பராமரிப்பு தொடர்பான அழகு சாதன பொருட்களை உயர் தரத்துடன் வழங்குவதன் மூலம் தொழில் துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர். ஆசியா மற்றும் ஐரோப்பிய சந்தையில் நுழைவதன் மூலம்.. அவர்களுடைய பிராண்டான ‘9 ஸ்கின்’- இயற்கையான அழகை மேம்படுத்தும் புதுமையான தோல் பராமரிப்பு தொடர்பான அழகு சாதன பொருட்களை வழங்கவிருக்கிறார்கள்.

கோலாலம்பூரில் ‘9 ஸ்கின்’ எனும் வணிக முத்திரையுடன் கூடிய சரும பராமரிப்பு தொடர்பான அழகு சாதன பொருட்கள் கோலாகலமாக அறிமுகமாகிறது. டெய்சி மோர்கன்- நயன்தாரா -விக்னேஷ் சிவன் ஆகியோர் ஒன்றிணைந்து தங்களுடைய தனித்துவமான தோல் பராமரிப்பு பொருட்களை ஆசியா மற்றும் ஐரோப்பிய சந்தையில் அறிமுகப்படுத்துவதில் உற்சாகமாக உள்ளனர்‌. மேலும் உலகில் உள்ள தனி நபர்களின் தோல் பராமரிப்பு அனுபவங்களை மேம்படுத்துவதற்காக.. இந்த மூவரின் தனித்துவமான நிபுணத்துவத்தையும், பிரத்யேக அம்சத்தையும்.. அவர்களுடைய பொருட்கள் மூலம் கொண்டு வருகிறார்கள்.

தோல் பராமரிப்பு மற்றும் சரும பராமரிப்பு துறையில் முன்னணியில் உள்ள ‘9 ஸ்கின்’ எனும் வணிக முத்திரையின் நற்பெயரை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், செப்டம்பர் 29ஆம் தேதியன்று மலேசிய நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் இதன் அறிமுகம் நடைபெறுகிறது.
Previous Post

இயக்குநர் ராஜேஷ் M இயக்கத்தில் உருவாகியிருக்கும், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஒரிஜினல் சீரிஸான “மை3” வெப் சீரிஸ், செப்டம்பர் 15 முதல் ஸ்ட்ரீமாகவுள்ளது !!

Next Post

கெழப்பய – விமர்சனம்

Next Post

கெழப்பய - விமர்சனம்

Popular News

  • சித்தா – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • ’மால்’ – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • சமுத்திரக்கனி நடிக்கும் “திரு.மாணிக்கம்” ஃபர்ஸ்ட் லுக் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • 1000 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த ஷாருக்கானின் ‘ஜவான்’

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘சித்தா’ பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

September 27, 2023

“கிரிக்கெட் வீரர் மலிங்காவாக நடிக்க தயார்” ; ஆச்சர்யப்படுத்தும் லால் சலாம் பட ஆடை வடிவமைப்பாளர் சத்யா

September 27, 2023

இயக்குநர் பாலாவின் ‘வணங்கான்’ பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது

September 27, 2023

சித்தா – விமர்சனம்

September 27, 2023

இயக்குநர் அஜய் பூபதியின் ‘செவ்வாய்கிழமை’ திரைப்படம் பான் இந்திய வெளியீடாக நவம்பர் 17ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியாகிறது!

September 27, 2023

லைக்காவின் ‘சந்திரமுகி 2’ வெளியீட்டிற்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்துப் பெற்ற ராகவா லாரன்ஸ்

September 27, 2023
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2023 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2023 Tamil2daynews.com.

error: Content is protected !!