• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

டங்கி டிராப் 4 டிரெய்லர், 24 மணிநேரத்தில் 103 மில்லியன் பார்வைகளைப் பெற்று இந்தியத் திரையுலகில் சாதனை படைத்துள்ளது !!

by Tamil2daynews
December 6, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

டங்கி டிராப் 4 டிரெய்லர், 24 மணிநேரத்தில் 103 மில்லியன் பார்வைகளைப் பெற்று  இந்தியத் திரையுலகில் சாதனை படைத்துள்ளது !!

 

SRK இந்த ஆண்டில் மீண்டுமொருமுறை சாதனை நிகழ்த்தியுள்ளார்! டங்கி டிராப் 4 (டிரெய்லர்) வெளியான வேகத்தில் பெரும் சாதனை படைத்து வருகிறது. இந்த டிரெய்லர் மனதின் உணர்ச்சிகளைத் தூண்டி, ராஜ்குமார் ஹிரானியின் படைப்பாக்கத்தின் திரை அழகை எடுத்துக்காட்டுகிறது. போமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர், மற்றும் ஷாருக்கானுடன் இணைந்து நடித்த, இன்னும் பல திறமையான நடிகர்களால் சித்தரிக்கப்பட்ட வண்ணமயமான கதாபாத்திரங்களுடன், பார்வையாளர்களை ஒரு ரோலர்-கோஸ்டர் சவாரிக்கு இந்த  வீடியோ நம்மை அழைத்துச் செல்கிறது.

ஷாருக்கின் வசீகரத்துடன் ராஜ்குமார் ஹிரானியின் மனதைக் கவரும் தருணங்களுடன் மாயாஜாலத்தை நிகழ்த்தும்  டங்கி டிரெய்லர் 24 மணி நேரத்திற்குள் அனைத்து தளங்களிலும் 103 மில்லியன் பார்வைகளை பெற்று, சாதனை படைத்துள்ளது, இது ஒரு இந்தி மொழிப் படம்  இதுவரை செய்யாத உச்சபட்ச சாதனை இதுவாகும்!

தனது சொந்த சாதனைகளை முறியடிப்பதில் திரையுலகின் வல்லவராக அறியப்படும் ஷாருக், சமீபத்தில் மெகா ஹிட்டான ஜவானிலும் இதையே செய்திருந்தார், தற்போது டங்கி மூலன் மீண்டுமொரு முறை அந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

டங்கி டிராப் 4 (டிரெய்லர்) வெளியானதிலிருந்தே பார்வையாளர்களின் அன்பைப் பெற்று, எட்டுதிக்கும் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்று வருகிறது.

இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியின் வசீகரமான படைப்புலகில்  நம்மை அழைத்துச் செல்வதுடன், நான்கு நண்பர்களின் இதயத்தைத் தூண்டும் கதையையும் வெளிநாட்டுக்கு செல்லும் கனவில் அவர்களின் தேடலையும் நமக்குச் சொல்கிறது.   நிஜ வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட டங்கி திரைப்படம் அன்பு மற்றும் நட்பின் பெருமையை விவரிக்கும் காவியமாகும், இது பெருமளவில் வேறுபட்ட மனிர்தர்களின் கதைகளை ஒன்றாக பின்னுகிறது, அந்த கதாபாத்திரங்கள் எதிர்கொள்ளும் சவால்களை அதன் நகைச்சுவை பக்கத்தையும், அதற்கான இதயம் அதிரும் பதில்களையும் வழங்குகிறது.

ஷாருக்கானுடன், பூமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட நட்சத்திரக் குழுவைக் கொண்ட ‘டங்கி’ திரைப்படத்தில் நகைச்சுவை, இதயம் வருடும் அழகான அனுபவம் என  மீண்டும் திரையில் ஒரு காவியத்தை காட்டவுள்ளது.

இத்திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் வழங்குகிறார்கள், ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் இணைந்து  தயாரித்துள்ளனர். அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் கனிகா தில்லான் இணைந்து எழுதியுள்ளனர். டங்கி 2023 டிசம்பரில் வெளியாகிறது.
Previous Post

பாசிட்டிவ் விமர்சனங்களுடன் வெற்றி நடைபோடும் ஆண்டனி! பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம்!

Next Post

தளபதி விஜய் அவர்களின் சொல்லுக்கிணங்க.”மிக்ஜாம்” புயலில் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு நிவாரண பணி

Next Post

தளபதி விஜய் அவர்களின் சொல்லுக்கிணங்க."மிக்ஜாம்" புயலில் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு நிவாரண பணி

Popular News

  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே காம்போவின் ‘ஸ்ரீ ஸ்ரீ’ அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி – ஆர்யா இணைந்து வெளியிட்ட நடிகை ப்ரியா பவானி சங்கரின் ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ படத்தின் முன்னோட்டம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மூன்வாக்’ மூலம் நடிகராக அறிமுகமாகும் ஏ.ஆர். ரஹ்மான்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ரெட்ரோ வெற்றி, மீடியா நண்பர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த சூர்யா!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

July 31, 2026

நடிகை சிம்ரனின் நெகிழ்ச்சியான மனிதநேய செயல் – மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய மறக்க முடியாத தருணம்!

July 31, 2026

ஏழு மாநிலங்களை சேர்ந்த 1000 ரசிகர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டு மகிழ்ந்த நடிகர் அல்லு அர்ஜுன்!

July 31, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

July 31, 2026
நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

July 31, 2026

பிரைம் வீடியோ, ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ சீரிஸிலிருந்து துள்ளலான புதிய ‘தெய்வா’ பாடலை வெளியிட்டது !

July 31, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.