நேசிப்பாயா – விமர்சனம்
பில்லா என்ற மெகா ஹிட் படம் எடுத்த இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி ,அதிதி ஷங்கர் இணைந்து நடித்திருக்கும் படம் நேசிப்பாயா.
பில்லா திரைப்படத்தின் மூலமாக பிரபலமான இயக்குனர் விஷ்ணுவரதன் இயக்கத்தில் மறைந்த நடிகர் முரளியின் மகன் ஆகாஷ் முரளி, அதிதி சங்கர் ஆகியோர் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் திரைப்படம் நேசிப்பாயா. இந்த திரைப்படத்தை XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பாக சேவியர் பிரிட்டோ தயாரித்திருக்கின்றார்.

அதன் பிறகு அதிதி சங்கர் வேலை கிடைக்க போர்ச்சுக்கல் நாட்டிற்கு செல்கின்றார். ஆனால் அங்கு தெரியாத்தனமாக ஒரு கொலை வழக்கில் சிக்கி சிறை சென்று விடுகின்றார். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு காதலி சிறைக்கு சென்றதை அறிந்த ஆகாஷ் போர்ச்சுக்கலுக்கு சென்று அதிதியை மீட்க முயற்சி செய்கின்றார். அப்படி அதிதிக்கு என்ன ஆனது, அவர் அந்த கொலையை செய்தாரா? ஆகாஷ் அவரை எப்படி சிறையில் இருந்து மீட்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை.

காதல் படமாக இருந்தாலும் பெரிய அளவு காதல் காட்சிகள் ஒர்க் அவுட் ஆகவில்லை. யுவனின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். எப்போதும் போல தனது ஸ்டைலில் மேக்கிங் செய்திருக்கின்றார் விஷ்ணு வரதன். பாடல்கள் அனைத்துமே ரசிக்கும் படியாக இருந்தது. படத்தின் கதை ஸ்லோவாக இருப்பது போல் அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்பதை நான் கணித்து விடலாம் என்பது போல் படத்தின் காட்சி இருந்தது.
மத்தபடி சொல்லும் அளவிற்கு ஆஹா ஓஹோ என எந்த ஒரு சிறப்பான காட்சிகளை இந்த திரைப்படத்தில் அமையவில்லை என்பது ரசிகர்களின் கருத்து. படம் இன்று வெளியாகி இருந்த நிலையில் ரசிகர்கள் படத்திற்கு 3 % ரேட்டிங் கொடுத்திருக்கிறார்கள். விஷ்ணுவர்தன் 10 வருடம் கழித்து இந்த திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்திருந்த நிலையில் படம் நிச்சயமாக மிக சிறப்பாக இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பை இந்த திரைப்படம் பூர்த்தி செய்யவில்லை என்பதை ரசிகர்களின் கருத்தாக இருக்கின்றது. படத்தின் பாடல் மற்றும் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட். யுவன் சங்கர் ராஜா தனது ஸ்டைலில் மிகச்சிறப்பாக பாடல்களை கொடுத்து இருக்கின்றார்.