• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

காதலிக்க நேரமில்லை – விமர்சனம் ரேட்டிங் 3.5/5

by Tamil2daynews
January 16, 2025
in விமர்சனம்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

காதலிக்க நேரமில்லை – விமர்சனம்

 

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ரவி மோகன், நித்யா மேனன், யோகி பாபு, மற்றும் பலர் நடித்திருக்கும் படம் காதலிக்க நேரமில்லை.

பெங்களூரில் வேலை செய்கிறார் சித்தார்த்(ரவி மோகன்). அவருக்கு நிச்சயதார்த்தம் நின்றுவிடுகிறது. காதலி செய்த துரோகத்தை நினைத்து வேதனையில் இருக்கிறார். இதையடுத்து திருமணம், குழந்தைகள் மீது ஈர்ப்பு இல்லாமல் போய்விடுகிறார்.

இந்நிலையில் சித்தார்த், அவரின் நண்பர்களான சேது(வினய்), கவுடா(யோகி பாபு) ஆகியோர் விந்தனுவை ஃப்ரீஸ் செய்வது குறித்து பேசுகிறார்கள். ஓரினச்சேர்க்கையாளரான சேதுவுக்கு தாயில்லாமல் குழந்தை பெற விருப்பம். தாயில்லாமல் குழந்தை எப்படி என கவுடா தயங்குகிறார். அவர்கள் மூன்று பேரும் பேசும் காட்சி முகம் சுளிக்கும்படி இல்லை. மிகவும் எதார்த்தமாக இருக்கிறது.

ஸ்ரேயாவோ(நித்யா மேனன்) தனக்கு துரோகம் செய்த கணவரை பிரிகிறார். அதன் பிறகு விந்தனு தானம் பெற்று தாயாக முடிவு செய்கிறார். அவர் செயற்கை முறையில் தாயாக முடிவு செய்து மருத்துவமனைக்கு செல்வதை மிகவும் லேசாக காட்டியிருக்கிறார் கிருத்திகா உதயநிதி. விந்தனு தானம் பெற்று கர்ப்பமாகிறார். இந்நிலையில் வேலை விஷயமாக பெங்களூர் செல்லும் இடத்தில் சித்தார்த்தை சந்திக்கும் ஸ்ரேயாவுக்கு அவர் மீது ஃபீலிங்ஸ் வருகிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே கதை.

சரியான ஆட்களை தேர்வு செய்து காதலிக்க நேரமில்லை படத்தை ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார் கிருத்திகா. காதல் காட்சிகளில் ரவி மோகன் அசத்துகிறார். வினய் கொடூர வில்லனாக இல்லாமல் நல்ல நண்பனாக வந்திருப்பது ரசிக்க வைக்கிறது. நித்யா மேனன் வழக்கம் போன்று அந்த கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார். ஸ்ரேயா என்பது வெறும் கதாபாத்திரம் என தெரிந்தும் கூட அவருக்காக நம்மை கவலைப்பட வைக்கிறார்.

நிச்சயதார்த்தம் அன்று திருமணத்தை நிறுத்தும் பெண், செயற்கை முறையில் கருத்தரிக்க விரும்பும் மற்றொரு பெண் என கதாபாத்திரங்கள் துணிச்சலை காட்டுகிறது.

ஏ ஆர் ரகுமான் கதைக்கு என்ன தேவையோ அதை கச்சிதமாக செய்திருக்கிறார் அவருக்கும் ஒரு பாராட்டுக்கள். குறிப்பாக படத்தின் இறுதியில் ஆங்கில பாடல் அருமை.

குறிப்பிட்ட ஒரு விஷயம் இந்த படத்தில் சொல்ல வேண்டுமென்றால் எந்த ஒரு விஷயத்தையும் படு விரசமாக காட்டாமல் நாகரீகமுறையில் காட்டி இருப்பது இயக்குனரின் தனித்திறமை.

அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை கணிக்க முடிந்தாலும் படம் முடியும் போது யாரும் எதிர்பார்க்காதது நடக்கிறது. திரைக்கதையில் மைனஸ் இருந்தாலும் அதை மறக்க வைத்திருக்கிறார் கிருத்திகா உதயநிதி.

மொத்தத்தில் இந்த காதலிக்க நேரமில்லை படத்தை நேரம் ஒதுக்கி பார்க்கலாம்.
Previous Post

நேசிப்பாயா – விமர்சனம் ரேட்டிங் – 3/5

Next Post

தருணம் – விமர்சனம் ரேட்டிங் – 2.5/5

Next Post

தருணம் - விமர்சனம் ரேட்டிங் - 2.5/5

Popular News

  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • விஸ்வநாத் அண்ட் சன்ஸ் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • கள்ள நோட்டு படத்திற்காக சிகரெட் பிடிக்கப் பழகிக் கொண்ட நடிகை சுமதி!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பில் அவன்’ படத்தின் ‘ஆசை வரமே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது !! –

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் மற்றும் கன்னடத்தில் டப்பிங் செய்து மனோரமாமேக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் ‘காட்டாளன்’ திரைப்படம்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘அன்பில் அவன்’ படத்தின் ‘ஆசை வரமே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது !! –

August 15, 2026

தமிழ் மற்றும் கன்னடத்தில் டப்பிங் செய்து மனோரமாமேக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் ‘காட்டாளன்’ திரைப்படம்!

August 15, 2026

டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் தயாரிப்பில் பிரியன் ராஜேந்திரன் இயக்கத்தில் ‘மேரிகோல்ட்’

August 15, 2026

’மொத ராத்திரி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

August 15, 2026

விறுவிறுப்பான இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் ரஜினியின் ‘தர்மன்’.

August 15, 2026

மகுடம் – விமர்சனம்

August 15, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.