மேடையில் நான் பேசும் முதல் நபர் என் அப்பா தான். நடிகர் செங்குட்டுவன் நெகிழ்ச்சி..!
ஸ்ரீ அண்ணாமலையார் மூவிஸ் தயாரிப்பில் மணிபாரதி இயக்க, செங்குட்டுவன், அம்மு அபிராமி நடித்து, சித்தார்த் விபின் இசையில் பேட்டரி படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் நடிகை, தொழில் நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர். 

நடிகர் செங்குட்டுவன் பேசும்போது,
எந்த மேடையாக இருந்தாலும், நான் பேசும் முதல் மனிதர் என் அப்பா தான். என்னை இந்தத் துறையில் வெற்றியாளனாக உருவாக்க வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறார்.

கொரோனாவிற்கு பிறகு இத்தனை நாள் நாங்கள் இழுத்துப் பிடித்ததற்கு காரணம் திரையரங்கில் வெளியிட வேண்டும் என்று தான்.
இங்கு சிறப்பு விருந்தினர்களாக வந்திருக்கும் அனைத்து இயக்குனர்களுக்கும் நன்றி என்றார்.