• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

‘அமீகோ கேரேஜ்’ – விமர்சனம்

by Tamil2daynews
March 17, 2024
in விமர்சனம்
0
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘அமீகோ கேரேஜ்’ – விமர்சனம்

 

இயக்குனர் பிரசாந்த் நாகராஜன் எழுதி இயக்கிய உள்ள படம் தான் அமிகோ கேரேஜ். கேங்ஸ்டர் கதையாக உருவாகி உள்ள இந்த படத்தில் அதிரா ராஜ், மகேந்திரன், தீபா பாலு, ஜி.எம். சுந்தர், தாசரதி நரசிம்மன், மதன கோபால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பாலமுரளி பாலு இசையமைக்க, விஜயகுமார் சோலைமுத்தி ஒளிப்பதிவில், சி.எஸ்.பிரேம்குமார் மற்றும் ஆண்டனி எல். ரூபன் ஆகியோர் எடிட்டிங் செய்துள்ளனர்.  வெறும் 152 நிமிடங்கள் மட்டுமே ஓடும் இப்படம் ஒரு இளைஞர் தவறான பாதையை தேர்வு செய்தால் அவரது வாழ்க்கை எப்படி மாறும் என்பதை எடுத்து காட்டுகிறது.

பள்ளிக்கூடத்தில் இருந்து கல்லூரி முடியும் வரை தினமும் அந்த கார் செட்டுக்கு சென்று பேசி வருவதை வழக்கமாக ஹீரோ வைத்திருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் ஒருநாள் ஹீரோவிற்கும் அந்த பகுதியில் இருக்கும் ரவுடிக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது. இந்த பிரச்சனையால் மகேந்திரனுடைய வாழ்க்கையே திசை மாறுகிறது. அதற்குப்பின் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதி கதை. படத்தில் எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் பில்டப்பும் இல்லாத சாதாரண மிடில் கிளாஸ் பையனாக மகேந்திரன் நடித்திருக்கிறார்.
கல்லூரி மாணவனாக இவருடைய நடிப்பு நன்றாக இருக்கிறது. ஆனால், பள்ளி பருவத்தில் இவருடைய காட்சிகள் கொஞ்சம் சிரிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், சண்டைக் காட்சிகளிலும் எமோஷனல் காட்சிகளிலும் மகேந்திரன் நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார். இவரை அடுத்து ஹீரோயினியாக வரும் அதிரா ராஜ் எனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். இவருடைய கதாபாத்திரத்திற்கு பெரிய அளவு முக்கியத்துவம் இல்லை என்றாலும் படம் முழுக்க வந்து செல்கிறார். இவர்களை அடுத்து படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜி எம் சுந்தர் நடித்திருக்கிறார்.
படம் தொடங்கியதிலிருந்து முடியும் வரை இயக்குனர் அவரை சரியாக பயன்படுத்தியிருக்கிறார் என்று சொல்லலாம். கேங்ஸ்டர் கதையை கொஞ்சம் வித்தியாசமாக இயக்குனர் கையாண்டு இருக்கிறார். ஒரு சாதாரண மனிதன் தன்னுடைய வாழ்க்கையில் இருந்து ஒரு கேங்ஸ்டர் ஆக எப்படி மாறுகிறார் என்பதை இந்த படத்தில் இயக்குனர் சுட்டிக் காட்டி இருக்கிறார். ஒருவர் செய்யும் தவறால் அவருடைய வாழ்க்கை எப்படி புரட்டிப் போடுகிறது என்ற ஒரு மெசேஜையும் இந்த படத்தில் காண்பித்து இருக்கிறார்.

படத்திற்கு பாடல்கள் பெரியளவு இல்லை. படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம். தேவையில்லாத காட்சிகளை வெட்டி இருக்கலாம். இருந்தாலும், படம் மெதுவாகவே நகர்கிறது. இது மிகப்பெரிய குறை என்று சொல்லலாம். சின்ன சின்ன விஷயங்களை இயக்குனர் கவனத்தில் இருந்தால் படம் நன்றாக இருந்திருக்கும். மொத்தத்தில் ரொம்ப ரொம்ப சுமாரான படம்.

 படம் பிடித்ததில் கவனம் செலுத்திய இயக்குனர் கதையிலும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் இன்னும்
 இப்படம் பிரம்மாண்டமாக ரசிகர்களை கவர்ந்திருக்கும்
Previous Post

ஏப்ரல் 4 அன்று ‘கள்வன்’ ரிலீஸ் ஆகிறான் உஷார்! இளம் நெஞ்சங்களைக் கொள்ளை கொள்ள தமிழகத்தில் ஊடுருவுகிறார்!!

Next Post

ஜெயம் ரவி, ‘அயலான்’ இயக்குநர் ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்ட ஏர் ஃபிளிக் தயாரிப்பில் மீரா மஹதி இயக்கத்தில் வித்யாசாகர் இசையில் தீரஜ், ஸ்முரிதி வெங்கட், கோவை சரளா, எம்.எஸ். பாஸ்கர் நடிக்கும் ‘டபுள் டக்கர்’ திரைப்படத்தின் இசை வெளியீடு

Next Post

ஜெயம் ரவி, 'அயலான்' இயக்குநர் ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்ட ஏர் ஃபிளிக் தயாரிப்பில் மீரா மஹதி இயக்கத்தில் வித்யாசாகர் இசையில் தீரஜ், ஸ்முரிதி வெங்கட், கோவை சரளா, எம்.எஸ். பாஸ்கர் நடிக்கும் 'டபுள் டக்கர்' திரைப்படத்தின் இசை வெளியீடு

Popular News

  • Romeo Pictures சார்பில் ராகுல் மற்றும் Aviate Pictures சார்பில் கோகுல் ஸ்ரீனிவாசன் இணைந்து தயாரிக்க, ‘ரைட்டர்’ பட இயக்குநரும் ‘DC’ படத்தின் எழுத்தாளருமான ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில், இளைய திலகம் பிரபு மற்றும் புது வரவான பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ்பெற்ற விஜய் வர்மா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை கோலாகலமாக நடைபெற்றது.

    0 shares
    Share 0 Tweet 0
  • முழு நீள சஸ்பென்ஸ் க்ரைம் ஹாரர் த்ரில்லராக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஒன்ஸ்மோர்’ – திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜெயராம் – சிம்ரன் நடிக்கும் புதிய ஃபேமிலி ரோம் காம் திரைப்படம் – கோலாகலமாக நடைபெற்ற பூஜை !

    0 shares
    Share 0 Tweet 0
  • ’இருமுடி கட்டு’ திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்க, சீன் ரோல்டன் இசையமைக்கும் கே.எஸ். சினிஷ் வழங்கும் ‘நிஞ்ஜா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 24 ஆம் தேதி பூஜையுடன் தொடக்கம்!

August 26, 2026

சாய் அபயங்கர் – பாக்யஸ்ரீ போர்ஸ் கூட்டணியில் உருவான ‘ரதிமா’

August 26, 2026

ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!

August 26, 2026

சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘டாக்ஸிக்’ முன்வெளியீட்டு விழா!

August 26, 2026

பிரசாந்த் வர்மாவின் ‘மகாகாளி’ படத்தின் வெளியீட்டு தேதி & பிரத்யேக கிளிம்ப்ஸ் வெளியீடு

August 26, 2026

‘சிட்டுக்குறிஞ்சி’ முதல் பாடல் குறிஞ்சி மலை மேல 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!

August 26, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.