• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

டிராகன் – விமர்சனம் ரேட்டிங் 3.5 / 5

by Tamil2daynews
February 22, 2025
in விமர்சனம்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
டிராகன் – விமர்சனம் ரேட்டிங் 3.5 / 5

லவ் டுடே என்ற மெகா ஹிட் படத்திற்கு பிறகு பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் படம் டிராகன்.

படிப்பு வராவிட்டாலும் கல்லூரியில் கெத்தாக சுற்றி வரும் மாணவன் ராகவன்(பிரதீப் ரங்கநாதன்). எந்த கவலையும் இல்லாமல் இருக்கும் ராகவனுக்கு பெற்றோர், நண்பர்கள் ஆதரவாக இருக்கிறார்கள். கல்லூரி முதல்வர் கூட சரியாக படிக்காத ராகவனுக்கு ஆதரவாக இருக்கிறார்.

குறுக்கு வழியில் வாழ்க்கையிலும், வேலையிலும் முன்னேறுகிறார். இதுவே வேறு ஏதாவது படத்தில் வந்திருந்தால் வழக்கமான சீன் தான் என சொல்லலாம். ஆனால் டிராகனில் அப்படி சொல்ல முடியாத அளவுக்கு அழகாக காட்டியிருக்கிறார் அஸ்வத் மாரிமுத்து. ராகவன், கீர்த்தி(அனுபமா பரமேஸ்வரன்) காதல் பிரேக்கப் ஆகும் நிலையில் இருக்கும் வரை அவர்களின் காதல் கதையை காட்டாதது.சோகப் பாடல் மூலம் அவர்களின் காதலை காட்டியது எல்லாம் படத்திற்கு பெரிய பலமாக அமைந்துவிட்டது.

ராகவனை சந்தோஷமாக வைத்துக் கொள்ள எதுவும் செய்யும் காதலியாக இருக்கிறார் கீர்த்தி. டிராகன் படத்தில் வரும் கல்லூரி நட்பு, கதாபாத்திரங்கள் எல்லாம் அஸ்வத் மாரிமுத்துவின் முதல் படமான ஓ மை கடவுளேவை நினைவூட்டுகிறது. அது டிராகனுக்கு கை கொடுக்கவும் செய்திருக்கிறது. மேலும் இது உங்களுக்கு சொன்னா புரியாது சார் வசனத்தையும் டிராகனில் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

தொடர்ந்து தவறான முடிவுகள் எடுத்தாலும் ராகவன் என்கிற டிராகனை நமக்கு பிடிக்க வைத்துவிட்டார். ராகவனாகவே மாறியிருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். கீர்த்தியாக நன்றாக நடித்திருக்கிறார் அனுபமா பரமேஸ்வரன். படம் ஜாலியாக சென்றாலும் வாழ்க்கை குறித்து நம்மை சீரியஸாக யோசிக்க வைக்கிறது. பாடல்களை படத்தில் திணிக்கவில்லை. அழகாக கதையோடு சேர்ந்தே வந்திருக்கிறது.

படம் ஆரம்பத்தில் கலகலப்பாக சென்றாலும் அரியர் வைத்து படிக்கும் மாணவர்களுக்கு இந்த படம் மனமாற்றத்தை உருவாக்கும்.

உவமை கடவுளே திரைப்படத்தின் மூலம் யார் இவர் என்று கேட்க வைத்த இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து

இதில் திறமையான இயக்குனர் என்று பெயர் எடுத்திருக்கிறார்.

மொத்தத்தில் இந்த டிராகன் படம் ஜாலியான நல்ல கருத்துள்ள படம்.
Previous Post

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் (NEEK) – விமர்சனம் ரேட்டிங் 4 / 5

Next Post

ராமம் ராகவம் – விமர்சனம் ரேட்டிங் 2.5 / 5

Next Post

ராமம் ராகவம் - விமர்சனம் ரேட்டிங் 2.5 / 5

Popular News

  • இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

    0 shares
    Share 0 Tweet 0
  • பீப் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

    0 shares
    Share 0 Tweet 0
  • விநாயகர் சதூர்த்தி தினத்தில், விகாஷ் நடித்த “துச்சாதனன்” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • நல்லபடம் -விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நல்லபடம் -விமர்சனம்

September 21, 2026

‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

September 21, 2026

இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

September 21, 2026

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

September 21, 2026

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.