நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் (NEEK) – விமர்சனம் ரேட்டிங் 4 / 5
இயக்குனர் தனுஷ் என்ற பெயரில் அழகான, ரம்யமான, மெல்லிசையான காதல் கதையை இயக்கி இருக்கிறார்.
படம் துவங்கியதும் பெற்றோர் சரண்யா பொன்வண்ணன், நரேன் ஆகியோரின் வற்புறுத்தலால் பெண் பார்க்கச் செல்கிறார் பிரபு(பவிஷ்). அங்கு பார்த்தால் அந்த பெண் வேறு யாரும் அல்ல பிரபு உடன் சேர்ந்து பள்ளியில் படித்த ப்ரீத்தி(ப்ரியா பிரகாஷ் வாரியர்). திருமணம் குறித்து முடிவு எடுக்கும் முன்பு நாங்கள் பேசிப் பழகி ஒருவரையொருவர் புரிந்து கொள்ள நேரம் வேண்டும் என கேட்கிறார்கள் பிரபுவும், ப்ரீத்தியும்.
இந்த காட்சியை பல படங்களில் பார்த்திருந்தாலும் இந்த படத்தில் அதை புது விதமாக ஜாலியாக காட்டியிருக்கிறார் தனுஷ். பிரபுவும், ப்ரீத்தியும் திருமணம் செய்து கொள்ள ஒரு முடிவு எடுக்கப் போகும் நேரத்தில் பிரபுவுக்கு அவரின் முன்னாள் காதலியான நிலாவிடம்(அனிகா சுரேந்திரன்) இருந்து திருமண அழைப்பு வருகிறது. இதையடுத்து நிலாவை காதலித்த கதையை ப்ரீத்தியிடம் சொல்கிறார் பிரபு.
கதையை கேட்ட ப்ரீத்தியோ நீங்கள் நிஜமாகவே அந்த காதலை மறந்துவிட்டு அடுத்த கட்டத்திற்கு சென்றுவீட்டீர்களா என்பதை தெரிந்து கொள்ள நிலாவின் திருமணத்தில் கலந்து கொள்ளுங்கள் என ஐடியா கொடுக்கிறார். இதையடுத்து கோவாவில் நடக்கும் நிலாவின் திருமணத்திற்கு செல்கிறார் பிரபு.
திருமணம் நடக்குமா இல்லை நிலாவும், பிரபுவும் காதலை புதுப்பிப்பார்களா இல்லை ப்ரீத்தியை மணப்பாரா பிரபு? ஜென் Z கிட்ஸின் காதலை அழகாக திரையில் காட்டியிருக்கிறார் தனுஷ். படம் ரொம்ப ஜாலியாக செல்கிறது. வழக்கமான படம் என்று சொல்லி நம் எதிர்பார்ப்பை குறைத்துவிட்டு சிறப்பான படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர்.
ஒளிப்பதிவும், எடிட்டிங்கும் சொதப்பியிருக்கிறது. படம் ரொம்ப சீரியஸாக போய்விடாமல் அவ்வப்போது சிரிக்க வைக்கிறார்கள். ஆனால் கதாபாத்திரங்களுடன் நம்மால் ஒன்ற முடியவில்லை. இரண்டு பேர் காதலில் விழும்போதும், பிரேக்கப் ஆகும் போது அதை நம்மால் உணர முடியவில்லை. பவிஷை பார்த்தால் தனுஷ் தெரிகிறார். அக்கா மகன் என்பதால் மட்டும் அல்ல பார்க்கவும் தனுஷ் மாதிரி இருக்கிறார். மேலும் பவிஷ் நடிப்பில் தனுஷின் நடிப்பு தெரிகிறது. இயக்குநர் சொன்னபடியே நடித்திருக்கிறார் பவிஷ்.
அனிகாவை பார்த்தால் பெரிய பெண் போன்று தெரியவில்லை. சிறு பிள்ளையை வளர்ந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தது போன்று பொருந்தவில்லை. பவிஷ், அனிகாவை காதலர்களாக பார்க்க முடியவில்லை. அண்ணன், தங்கை போன்று தெரிகிறார்கள். அவர்களிடம் இருந்து லவ் வைஃப் வரவில்லை. ப்ரியா பிரகாஷ் நடிப்பு பரவாயில்லை. ஆனால் அவரின் கதாபாத்திரத்திற்கு பெரிய அளவில் முக்கியத்துவம் இல்லை. மேத்யூ தாமஸுக்கு டப்பிங் பிரச்சனையாகிவிட்டது. ஆரம்பத்தில் டைட்டிலில் வழக்கமான காதல் கதை என்று போடும் தனுஷ் வித்தியாசமான காதல் கதையை கையாண்டிருக்கிறார்.
இந்தப் படத்தை பார்க்கும் 40 வயதை கடந்தவர்கள் 1995 க்கு பிறகு பிறந்திருக்கலாம் என்ற ஏக்கம் வருவது நிச்சயம்.
மொத்தத்தில் இந்த நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் அனைவரையும் கைத்தட்டி ரசிக்க வைக்கும்.