• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நம் உணவினால் நமக்கு அபாயம்: நடிகர் கார்த்தியின் புதிய முயர்ச்சி! எனவே மக்கள் நலனைக் காக்க கையெழுத்து வேட்டை!!

by Tamil2daynews
January 9, 2022
in சினிமா செய்திகள்
0
நம் உணவினால் நமக்கு அபாயம்: நடிகர் கார்த்தியின் புதிய முயர்ச்சி! எனவே மக்கள் நலனைக் காக்க கையெழுத்து வேட்டை!!
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

Karthi begins shooting for 'Viruman', remembers 'Paruthiveeran' days!

தினமும் நாம் சாப்பிடும் உணவில் உள்ள நச்சுத்தன்மைகள் குறித்துப் பல்வேறு செய்திகளைப் படித்து தினசரி படித்து வருகிறோம். நடிகர் கார்த்தி படிப்பதோடு நின்றுவிடாமல், அதைத் தடுக்கும் வகையில் பல்வேறு முயற்ச்சிகளை எடுத்து வருகிறார்.தற்போது உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், மரபணு மாற்றப்பட்ட மற்றும் மரபணுவிலிருந்து உருவாக்கப்படும் உணவுகள் மீதான ஒழுங்குமுறைகளை மாற்றவுள்ளது. இதுகுறித்த இணைய வழிக் கையெழுத்து இயக்கத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.இந்தக் கையெழுத்து இயக்கத்தில் கார்த்தியும் கையெழுத்திட்டுள்ளார். மேலும், இதற்கு அனைவரது ஆதரவும் வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

உங்களை யாரோடும் ஒப்பிடாதீர்கள்: மாணவர்களுக்கு கார்த்தி அறிவுரை | karthi speech at agaram function - hindutamil.inஇதுகுறித்து கார்த்தி பகிர்ந்துள்ள செய்தி:

“உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், மரபணு மாற்றப்பட்ட மற்றும் மரபணுவிலிருந்து உருவாக்கப்படும் உணவுகள் மீதான ஒழுங்குமுறைகளை மாற்றவுள்ளது. இதனால் அத்தகைய உணவுகள் நம் வாழ்க்கைக்குள் நுழையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இப்படி மரபணு மாற்றப்பட்ட உணவுகள் ஒவ்வாமை, நோய் எதிர்ப்புக் குறைபாடு, வளர்ச்சிக் குறைபாடு, வளர்ச்சி தடைப்படுதல், உடலுறுப்பு சேதம், இனப்பெருக்க பாதிப்புகள் மற்றும் புற்றுநோய் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

Dear friends, an important online petition that should concern all of us. It is about @fssaiindia altering the regulations on GM & GE Foods which could open floodgates to GM foods coming into our lives. I am signing on. Pls sign, if you agree to this: https://t.co/6hekyMr1xU.

— Karthi (@Karthi_Offl) January 7, 2022

உலகெங்கிலும் உள்ள பெரும்பான்மையான நாடுகள் மரபணு மாற்றப்பட்ட பயிர் சாகுபடியை ஏற்பதில்லை. மேலும் பன்னாட்டு நிறுவனங்களின் அழுத்தம் இருந்தபோதிலும் இப்படியான உணவுப் பயிர்கள் சுற்றுச்சூழலுக்கும், ஆரோக்கியத்திற்கும் பாதுகாப்பானவை அல்ல என்பதால் இந்தியாவிலும் அவற்றைப் பயிரிட இதுவரை அனுமதிக்கப்படவில்லை.பொதுமக்கள் மற்றும் விஞ்ஞானிகளால் முன்வைக்கப்பட்ட வலுவான ஆதாரங்களின் காரணமாக Bt பிரிஞ்சால், GM கடுகு போன்றவை இதுவரை அனுமதிக்கப்படவில்லை. ஆனால், தற்போது விதிமுறைகளைத் தளர்த்துவதன் மூலம் மரபணு மாற்றப்பட்ட உணவுகளை நம் நாட்டுக்குள் அனுமதிப்பது ஏன் என்று புரியவில்லை.இப்படியான உணவுகள் பாதுகாப்பானதா, இல்லையா என்பதை அறிய எந்த மாதிரியான சோதனைகள் பின்பற்றப்படும் என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. யார், எப்படி இதுகுறித்து முடிவெடுப்பார்கள் என்பது குறித்தும் எந்தக் குறிப்பும் இல்லை.  எனவே மக்கள் நலனைக் காக்க, இதுகுறித்து விழிப்புணர்வு இல்லாதவர்களுக்காக, நாம் ஒன்றிணைவோம். இந்த மனுவில் கையெழுத்திடுவோம்”.

இவ்வாறு கார்த்தி தெரிவித்துள்ளார்.

கார்த்தியின் இந்தப் பகிர்வுக்கு இணையத்தில் அனேக பேர் ஆதரவு தெரிவித்து  கையெழுத்திட்டு வருகிறார்கள். தொடர்ந்து கையெழுத்திடுகிறார்கள்.நீங்களும் பங்கு கொள்ளலாம்..

Previous Post

நடிகர் சிலம்பரசன் டி.ஆர்-க்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கிய ‘வேல்ஸ் பல்கலைக்கழகம்.

Next Post

இயக்குநரின் விடா முயற்சியால் கிடைத்த பேருந்து தொழிற்சாலை! – வியக்க வைக்கும் ‘கம்பெனி’ பட தகவல்

Next Post

இயக்குநரின் விடா முயற்சியால் கிடைத்த பேருந்து தொழிற்சாலை! - வியக்க வைக்கும் ‘கம்பெனி’ பட தகவல்

Popular News

  • துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம் ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட் (Jackie – No Retakes Allowed) ’!!

    0 shares
    Share 0 Tweet 0
  • இந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கட்டா குஸ்தி 2’ வெற்றியை கொண்டாடிய படக்குழு… 50வது நாள் நன்றி அறிவிப்பு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • “எனது தயாரிப்பாளர்களை மகிழ்ச்சியடையச் செய்வதே எனது மிகப்பெரிய இலக்கு”…‘மொத ராத்திரி’ படத்தில் இயக்குநராக அறிமுகமாவது குறித்து ராஜா கருப்பசாமி!

    0 shares
    Share 0 Tweet 0
  • செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தி பாரடைஸ்’ – டிரெய்லர் இன்றி புதிய முயற்சி

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தி பாரடைஸ்’ – டிரெய்லர் இன்றி புதிய முயற்சி

September 14, 2026

‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

September 14, 2026

“ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் கிரைம் த்ரில்லர்…” ; ‘பீப்’ படம் குறித்து மனம் திறந்த நடிகர் ராகவ்!

September 14, 2026

அரசியலும், சமூக அக்கறையும் சேர்ந்து உருவாகியுள்ள படம் “ஆகாயம் ” தினந்தோறும் நாகராஜ் இயக்கியுள்ளார்.

September 14, 2026

துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் படம்

September 14, 2026

‘தி டார்க் ஹெவன்’ திரைப்பட வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா!

September 14, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.