• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஏஜிஎஸ் என்டெர்டைன்மென்ட் தயாரிப்பில் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகும் நகைச்சுவை திகில் திரைப்படம் ‘கான்ஜூரிங் கண்ணப்பன்

by Tamil2daynews
September 18, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஏஜிஎஸ் என்டெர்டைன்மென்ட் தயாரிப்பில் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகும் நகைச்சுவை திகில் திரைப்படம் ‘கான்ஜூரிங் கண்ணப்பன்

 

ஏஜிஎஸ் என்டெர்டைன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிக்கும், அறிமுக இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கும் திரைப்படத்திற்கு ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நவீன தொழில்நுட்பத்துடன் உலகத்தர தயாரிப்பில் உருவாகும் நகைச்சுவை நிறைந்த திகில் திரைப்படமான இதில் ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. மாபெரும் வெற்றிப்பெற்ற ‘லவ் டுடே’ படத்திற்கு பிறகு ஏஜிஎஸ் என்டெர்டைன்மென்ட்டின் அடுத்த படைப்பாக வரவிருக்கும் ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’, இந்நிறுவனத்தின் 24வது தயாரிப்பு ஆகும். ஏஜிஎஸ்ஸின் 23வது திரைப்படமாக ‘லவ் டுடே’ இந்தி பதிப்பும், 25வது படமாக தளபதி விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் ‘தளபதி 68’-ம், 26வது தயாரிப்பாக ஜெயம் ரவி நடிப்பில் மோகன் ராஜா இயக்கும் ‘தனி ஒருவன் 2’‍‍‍‍-ம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் செல்வின் ராஜ் சேவியர், இயக்குந‌ர்கள் சிம்புதேவன், சுமந்த் ராதாகிருஷ்ணனிடம் உதவி இயக்குநராக‌ பணிபுரிந்துள்ளார். சென்னையில்  பெரும் பொருட்செலவில் பழங்கால அரங்குகள் அமைத்து இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.
Image

‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ திரைப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக அர்ச்சனா கல்பாத்தி பணியாற்ற, நிர்வாக தயாரிப்பை எஸ். எம். வெங்கட் மாணிக்கம் கவனிக்கிறார். சதீஷ், நாசர், சரண்யா பொன்வண்ணன், ஆனந்த்ராஜ், ரெஜினா கசன்ட்ரா, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லீ, நமோ நாராயணன் போன்ற நட்சத்திரங்களுடன், ‘நானே வருவேன்’ படத்தில் நடித்துள்ள எல்லி ஆவரம், ஜேஸன் ஷா, பிஎனேடிக்ட் காரெட் போன்ற வெளிநாட்டு நடிகர்களும் இதில் நடித்துள்ளனர்.

‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ பற்றி பேசிய இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர், “ரசிகர்களுக்கு வித்தியாசமான புதுவித அனுபவத்தை கொடுப்பதோடு நல்ல பொழுதுப்போக்காகவும் இப்படம் இருக்கும். முக்கியமாக குழந்தைகள் பார்த்து ரசிக்கும் வகையிலும் நகைச்சுவை, திகில், ஃபான்டசி கலந்த படமாக இதை உருவாக்கியுள்ளோம். இப்படம் அனைத்து வயதினரையும் நிச்சயம் கவரும்,” என்று கூறினார்.

ஒரு புறம் முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இயக்குநர்களுடன் இணைந்து பிரம்மாண்ட படைப்புகளை தயாரித்து வரும் ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட், மறு புறம் ‘லவ் டுடே’ போன்று வளர்ந்து வரும் மற்றும் புதிய திறமைகளுக்கும் தொடர்ந்து வாய்ப்பளித்து வருகிறது. அந்த வரிசையில் ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ அமையும் என்று படகுழுவினர் தெரிவிக்கின்றனர்.

ஏஜிஎஸ் என்டெர்டைன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிக்கும், அறிமுக இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் திரைப்படமான‌ ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ இந்த வருடம் திரையரங்குகளில் வெளியாகும்.
Previous Post

ஹனு மான் திரைப்பட குழுவினர் ஒரு புத்தம் புதிய போஸ்டருடன் அனைவருக்கும் விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்

Next Post

சலங்கைதுரை இயக்கியுள்ள ” கடத்தல் ” படத்திற்கு பிரம்மாண்டமான விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்

Next Post

சலங்கைதுரை இயக்கியுள்ள " கடத்தல் " படத்திற்கு பிரம்மாண்டமான விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்

Popular News

  • வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

    0 shares
    Share 0 Tweet 0
  • பீப் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • #Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

    0 shares
    Share 0 Tweet 0
  • பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026

வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

September 20, 2026

பீப் – விமர்சனம்

September 20, 2026

‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

September 20, 2026

‘மீசைய முறுக்கு 2’ இசைக் கலைஞர்களின் வாழ்க்கை, போராட்டம், கனவுகளைப் பேசும் உலகளாவிய கதை – ஹிப்ஹாப் தமிழா ஆதி

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.