• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சாய் வெங்கடேஸ்வரன் தயாரிப்பில், இயக்குநர் ஜெகதீசன் சுப்பு இயக்கத்தில், நடிகர்கள் காளி வெங்கட் – ரோஷ்னி பிரகாஷ் நடித்துள்ள படம் ’தோனிமா’!

by Tamil2daynews
June 12, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

சாய் வெங்கடேஸ்வரன் தயாரிப்பில், இயக்குநர் ஜெகதீசன் சுப்பு இயக்கத்தில், நடிகர்கள் காளி வெங்கட் – ரோஷ்னி பிரகாஷ் நடித்துள்ள படம் ’தோனிமா’!

 

சாதாரண ஆண், பெண்ணின் அன்றாட வாழ்க்கையின் உண்மையான மற்றும் உணர்ச்சிபூர்வமான சாரத்தை படம் பிடிக்கும் குறிப்பிடத்தக்க திரைப்படங்களை தமிழ் சினிமா உருவாக்கியுள்ளது. இந்த வரிசையில், சாய் வெங்கடேஸ்வரன் தயாரிப்பில் ஜெகதீசன் சுப்பு எழுதி இயக்கிய ’தோனிமா’ திரைப்படமும் இணைந்துள்ளது.  நடுத்தரக் குடும்பங்களின் யதார்த்த அனுபவங்களை இந்தப் படம் திரையில் காட்ட இருக்கிறது.  தற்போது இயக்குநர் பாலாவின் ’வணங்கான்’ படத்தில் நடித்து வரும் நடிகை ரோஷ்னி பிரகாஷ், இந்தப் படத்தில் தனது குடும்பத்தை விடாமுயற்சியுடன் போராடி முன்னெடுத்து செல்லும் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது கணவராக வரும் கோடி கதாபாத்திரம் குடும்பத்தின் மீது பொறுப்பற்ற ஒருவர். இதில் நடிகர் காளி வெங்கட் நடித்துள்ளார். இந்த தம்பதியின் மகன் கடுமையான உடல்நலப் பிரச்சினையை எதிர்கொள்வதால், குடும்பம் கடினமான தடைகளை எதிர்கொள்கிறது. இந்த சவால்களை கடப்பதற்கான அவர்களின் பயணம்தான் கதையின் மையம். இது நடுத்தரக் குடும்பங்களின் அன்றாட வாழ்க்கையை படம் பிடித்து, பார்வையாளர்களைக் கதையுடன் ஒன்ற வைக்கும்.

காளி வெங்கட் மற்றும் ரோஷ்னி பிரகாஷ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் விஷவ் ராஜ், விவேக் பிரசன்னா, கண்ணன் பொன்னையா, ராஜேஷ் சர்மா, பி.எல்.தேனப்பன், கல்கி ராஜன், ’ஆடுகளம்’ ராஜாமணி, ’சுப்ரமணியபுரம்’ விசித்திரன், ‘சிகை’ படத்தின் சசி, மொக்லி கே மோகன், பொன்னேரி சுஜாதா, மாயா முனீஸ்வரன் மற்றும் கார்த்திக் முனீஸ் உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர்.

Learn and teach நிறுவனத்தின் சார்பில் சாய் வெங்கடேஸ்வரன் தயாரித்து உள்ள ‘தோனிமா’ படத்தை ஜெகதீசன் சுப்பு எழுதி இயக்கியுள்ளார். பாக்யராஜ் மற்றும் சஜித் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளனர். இஜே ஜான்சன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் முழு வெளியீட்டு உரிமையையும் எஸ்பிஆர் ஸ்டுடியோஸ் எஸ்பி ராஜா சேதுபதி கைப்பற்றியுள்ளார்.
Previous Post

தயாரிப்பாளர் அஸ்வினி தத் அறிமுகப்படுத்திய பிரபாஸின் ‘கல்கி 2898 AD ‘ பட முன்னோட்டம்

Next Post

பத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 25வது நாளை நோக்கி வெற்றிநடை போடும் ‘சாமானியன்’

Next Post
பத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 25வது நாளை நோக்கி வெற்றிநடை போடும் ‘சாமானியன்’

பத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 25வது நாளை நோக்கி வெற்றிநடை போடும் ‘சாமானியன்’

Popular News

  • 418 – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பரத் – ராஜேஷ் மாதவன் இணையும் கலகலப்பான ஃபேமிலி என்டர்டெய்னர்! பூஜையுடன் கோலாகலமாகத் தொடங்கியது !

    0 shares
    Share 0 Tweet 0
  • ஹன்சா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் பிரம்மாண்டமான OTT சீரிஸ்கள்!

    0 shares
    Share 0 Tweet 0
  • முன்னணி தயாரிப்பாளர் ஆர். ரவீந்திரன், டிரைடென்ட் ஆர்ட்ஸின் 22வது படத்தை சுல்தான் ஜசானி மற்றும் சேத்தன் தியோலேகர் ஆகியோரோடு இணைந்து தயாரிக்கிறார்

    0 shares
    Share 0 Tweet 0
  • அர்ஜுன் தாஸ் நடிப்பில் சைக்கலாஜிக்கல் கிரைம் திரில்லராக தயாராகும் ‘ஜான் டோ- John Doe’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு’

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“‘ஹைக்கூ’ ரசிகர்களின் மனதைத் தொடும் ஃபீல் குட் என்டர்டெயினர் திரைப்படம்”- இயக்குநர் யுவராஜ் சின்னசாமி!

October 23, 2026

நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ திரைப்படம் டிசம்பர் 24 அன்று உலகெங்கும் வெளியாகிறது

October 23, 2026

சட்டமும் நீதியும்-2 – விமர்சனம்

October 23, 2026

418 – விமர்சனம்

October 23, 2026

“ஒரு மனிதனின் வாழ்க்கையில் இருவேறு காலக்கட்டங்களை பேசும் திரைப்படம் ‘ஹைக்கூ’” நடிகர் ஏகன்

October 23, 2026

யஷ் ராஜ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், கீர்த்தி சுரேஷ் – ராதிகா ஆப்தே மோதும் அதிரடி கேங்ஸ்டர் கதையான ‘அக்கா’ வெப் தொடரின் டிரெய்லரை வெளியிட்டது நெட்ஃபிளிக்ஸ்!

October 23, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.