• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் பார்வையாளார்களால் கொண்டாடப்பட்ட இயக்குநர் ராமின் ‘பறந்து போ’ திரைப்படம்

by Tamil2daynews
February 7, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் பார்வையாளார்களால் கொண்டாடப்பட்ட இயக்குநர் ராமின் ‘பறந்து போ’ திரைப்படம்ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் பார்வையாளார்களால் கொண்டாடப்பட்ட இயக்குநர் ராமின் ‘பறந்து போ’ திரைப்படம்

 

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தயாரிப்பில் இயக்குநர் ராமின் அடுத்த படைப்பான ‘பறந்து போ’ திரைப்படத்தின் முதல் உலக ப்ரத்யேக காட்சி 54-வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் நேற்று திரையிடப்பட்டது.
‘பறந்து போ’ திரைப்படத்திற்கு இருக்கும் எதிர்ப்பார்ப்பை உறுதிப்படுத்தும் விதமாய் முதல் காட்சி இருந்தது. ரோட்டர்டாமின் உறையும் குளிரிலும் அரங்கம் நிரம்பியது, மேலும் திரைப்படத்தின் இறுதியில் எழுந்த அரங்கம் அதிர்ந்த கைதட்டல்கள் பார்வையாளர்களின் எதிர்ப்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்ததை உறுதிபடுத்தியது.
இத்திரையிடலை இயக்குநர் ராமுடன், நடிகர் சிவா, டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் தமிழ் தலைமை பொறுப்பாளர் ப்ரதீப் மில்ராய், குழந்தை நட்சத்திரம் மிதுல் ரியான் மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
நகைச்சுவையை மையமாக கொண்ட எளிமையான கதையமைப்புடன் உருவாகி இருக்கும் ‘பறந்து போ’ திரைப்படம், சர்வதேசப் பார்வையாளர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. படம் நெடுக கைதட்டியும் கரகோஷத்தை எழுப்பியும் உற்சாகத்துடன் பார்வையாளர்கள் இத்திரைப்படத்தை கண்டுகளித்தனர்.  திரையிடலின் முடிவில் நடைபெற்ற கலந்துரையாடலில் படக்குழுவினரை பார்வையாளர்கள் பாராட்டி மகிழ்ந்தனர்.

‘பறந்து போ’ திரைப்படம் கோடை விடுமறையில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படும் எனவும் இத்திரையிடலில் இருந்தது போல திரையரங்குகளில் பெரும் கொண்டாட்டமாக இருக்கும் எனவும் இயக்குநர் ராம் கலைந்துரையாடலின் போது தெரிவித்தார்.

ஒட்டுமொத்தத் திரைப்படக் குழுவினர் அனைவருக்கும் பெருமிதமும், மகிழ்ச்சியும் தந்த தருணமாக ‘பறந்து போ’ திரைப்படத்தின் சர்வதேசத் திரையிடல் நிகழ்ச்சி அமைந்தது.
Previous Post

தக்கது பிழைக்கும்: ‘ஜுராசிக் வேர்ல்ட்: ரீபர்த்’ டிரெய்லர் பல த்ரில் அனுபவங்களைத் தர இருக்கிறது!

Next Post

“’விடாமுயற்சி’ படத்தில் என்னுடைய கதாபாத்திரத்திற்கு பல லேயர்கள் உண்டு” நடிகை ரெஜினா காசண்ட்ரா!

Next Post

“’விடாமுயற்சி’ படத்தில் என்னுடைய கதாபாத்திரத்திற்கு பல லேயர்கள் உண்டு” நடிகை ரெஜினா காசண்ட்ரா!

Popular News

  • பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • விஜய் விஷ்வாவின் புது அவதாரம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • “மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

    0 shares
    Share 0 Tweet 0
  • விக்கல்ஸ் விக்ரம் மற்றும் ஆரத்தி கிருஷ்ணாவின் ‘லைட்வெயிட்,பேபி!’ படத்தின் கலகலப்பான ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • ’மொத ராத்திரி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

August 22, 2026

பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

August 22, 2026

ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM)

August 22, 2026

இருமுடி கட்டு – விமர்சனம்

August 22, 2026

”நடிகர் கவுண்டமணிதான் இன்ஸ்பிரேஷன்”…நடிகர் அப்துல் லீ!

August 22, 2026

“மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

August 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.