இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில், நடிகர் ஆதி நடிக்கும் “சப்தம்” பட டிரெய்லர் வெளியீட்டு விழா !!
7G Films நிறுவனம் சார்பில் 7G சிவா தயாரிப்பில், ஈரம் படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப்பிறகு இயக்குநர் அறிவழகன், நடிகர் ஆதி வெற்றிக்கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் “சப்தம்”.
காமெடி ஹாரர் படங்களுக்கிடையில் ஒரு இனிமையான மாற்றமாக, ஒலியை மையமாக வைத்து, இதயத்தை அதிரவைக்கும் ஹாரர் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. வரும் 2025 பிப்ரவரி 28 ஆம் தேதி ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்துகொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வினில்….

இந்த மேடையில் நான் நிற்க காரணம், 15 வருடம் முன் ஈரம் படத்தின் டிரெய்லரை எடிட் செய்ய, இயக்குநர் அறிவழகன் தந்த வாய்ப்பு தான். அதன் பிறகு வல்லினம் அதிலிருந்து, வாழ்க்கை இங்கு வரை என்னைக் கொண்டு வந்துள்ளது. இப்போது சப்தம், இப்படத்தைப் பொறுத்தவரை ஹோம்கிரவுண்டில் கிரிக்கெட் விளையாடுவது போலத் தான். கிரியேட்டிவாக வேலை பார்க்க முழு சுதந்திரம் இருந்தது. சின்ன சின்ன விசயங்கள் இதில் நிறைய சேர்த்திருக்கிறார் அறிவழகன். சவுண்டுக்கு நிறைய முக்கியத்துவம் கொடுத்துள்ளோம், கண்டிப்பாக ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கும். ஹீரோ ஆதி எனக்கு நண்பர், அவரிடம் என்ன வேண்டுமானாலும் பேச முடியும், இப்படத்தில் மிக அற்புதமாக நடித்துள்ளார். தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் மிகக் கடினமாக உழைத்துள்ளனர். இப்படம் அனைவரையும் மகிழ்விக்கும்.
அறிவழகனின் ஈரம் தவிர அனைத்து படத்திலும் வேலை பார்த்துள்ளேன், ஈரம் வேலை பார்க்க வில்லை என்ற வருத்தம் இருந்தது, அது இந்தப் படத்தில் நீங்கி விட்டது. பொதுவாக இயக்குநர்கள் கதை சொல்லும் போது, சவுண்டுக்கு என்றே இரண்டு காட்சிகள் வைத்திருக்கிறேன் என்று சொல்வார்கள், ஆனால் இந்தப்படம் முழுவதுமே சவுண்டை வைத்துத் தான். எங்களுக்கு இந்த மாதிரி படம் கிடைப்பது அரிது. எனக்கு இப்படம் கிடைத்தது மிகப்பெரிய மகிழ்ச்சி. என் குருநாதர் தீபன் சக்கரவர்த்தி சார், ஊமை விழிகள் படங்கள் எல்லாம் செய்தவர், இந்தப்படம் ஊமை விழிகள் படம் போன்ற உணர்வைத் தரும். இந்த டிரெண்டில் அந்தப்படம் வந்தால் எப்படி இருக்குமோ? அது மாதிரி இருக்கும். தமிழில் ஒரு சில இயக்குநர்கள் தான் டெக்னிகலாக படம் செய்வார்கள், அதில் அறிவழகன் மிக முக்கியமானவர். தொழில் நுட்ப கலைஞர்கள் சவுண்டுக்கு முக்கியத்துவம் தந்து, பெரும் ஒத்துழைப்பு தந்தனர். தமனின் இசை மிகப்பெரிய பலமாக இருக்கும். ஆதி மிக அற்புதமாக நடித்துள்ளனர். இந்தப்படம் ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும்.

இந்த மேடை மிக முக்கியமானது. “சப்தம்” என் நண்பர்களிடம் இந்தப்படம் பற்றி சொல்லும் போது ஏன் ஹாரர் எனக் கேட்பார்கள், ஹாரர் என்றாலே கொஞ்சம் கீழாக பார்க்கும் பார்வை இருக்கிறது, அப்போ ஈரமும் ஹாரர் தானே என்பேன், ஈரம் சூப்பராக இருக்கும் என்று பாராட்டுவார்கள். அது ஹாரரில் வித்தியாசமாக இருக்கும் என்று பாராட்டுவார்கள், அது தான் அறிவழகன் சார், அவர் இயக்கத்தில் ஈரம் மாதிரி இன்னொரு படம் கிடைக்குமா? என நினைத்துள்ளேன், அதை மீண்டும் அறிவழகன் எனக்குத் தந்துள்ளார். இந்தப்படத்தில் பாராநார்மல் இன்வஸ்டிகேட்டராக நடித்துள்ளேன், இது முழுக்க முழுக்க இந்த டீமின் படம், அவர்கள் உழைப்பு தான் முழுப்படமும். ஹாலிவுட் படம் மாதிரி என அடிக்கடி சொல்வோம் ஆனால் இங்கு நம்ம சினிமாவை ஹாலிவுட்டை தாண்டிய தரத்தில் உருவாக்கியிருக்கும் படம் தான் சப்தம். கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
இப்படத்தில் ஆதி நாயகனாக நடிக்க லக்ஷ்மிமேனன் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் சிம்ரன், லைலா, கிங்ஸ்லி ஆகியோர் மிக முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார்.
225 க்கும் மேற்பட்ட படங்களை விநியோகம் செய்தும், திரௌபதி, ருத்ர தாண்டவம், படங்களை இணைத்தயாரிப்பு செய்த 7G Films நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சிவா, முதல் முழுமையான தயாரிப்பாக, இப்படத்தை மிகப்பெரும் பொருட்செலவில், பிரம்மாண்ட படைப்பாக தயாரித்துள்ளார். நடிகர் ஆதியின் திரை வாழ்க்கையில், இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரும் பட்ஜெட்டில் இப்படம் உருவாகியுள்ளது.
ஈரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் அறிவழகன், நடிகர் ஆதி, இசையமைப்பாளர் தமன் இப்படத்தில் இணைந்துள்ளனர். மிகச்சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பில், உலகத்தரத்தில் ஒரு அதிரடியான திரில்லர் படமாக இப்படம் உருவாகியுள்ளது. சத்தங்களையே மிக வித்தியாசமாக உருவாக்கி ஒரு புதுமையான ஹாரர் அனுபவத்தை இசையில் கொண்டு வந்துள்ளார் தமன்.
இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என நான்கு மொழிகளில் ஒரே நேரத்தில் வரும் 2025 பிப்ரவரி 28 ஆம் தேதி ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.