ஓ டி டி தளத்தில் Z5 என்றாலே தனி ரசிகர்கள் பட்டாளாம் உண்டு மிகவும் வித்தியாசமான கதைக்களம் உள்ள வெப் சீரியஸ் களை தயாரித்து ஓடிடி தளத்தில் வெளியிட்டு மிகப்பெரிய வெற்றி கண்டு உள்ளது இந்த Z5.அப்படி வித்தியாசமான கதை களத்தில் அக்டோபர் 10 அன்று வெளியாக உள்ள வெப் சீரிஸ் தான் வேடுவன்.இதன் கதைக்களமே வித்தியாசமானது. சூரஜ் என்கிற நடிகரின் படங்கள் தொடர்ந்து தோல்வியடைய அதற்கு காரணம் கதையில் அவர் தலையிடுவதுதான் என்று குற்றம் சாட்டப்படுகிறது. அதில் நொந்து போகும் அவர் அடுத்த படத்தை வெற்றி படமாக கொடுக்க ஆயத்தப்படுகிறார். அந்த நேரம் பார்த்து அவரிடம் ஒரு புதுமுக இயக்குனர் கதை சொல்ல வர, அது அவர் கனவில் கண்ட போலீஸ் ஸ்டோரி ஆக விரிகிறது.
அதற்காக அவர் அந்த வக்கீலை கண்காணிக்கும் வேளையில் அவரது முன்னாள் காதலியை சந்திக்க நேர்கிறது. அவளும் அவரை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து தன் வீட்டுக்கு அழைத்துப் போகிறாள். போன இடத்தில்தான் தெரிகிறது அவர் கொல்ல வந்த வக்கீல் அவளது கணவர் என்று. அன்பான அந்தக் குடும்பம் அவர் மீது அன்பை பொழிகிறது. இந்நிலையில் அவரால் கடமையாற்ற முடிந்ததா அல்லது அன்பு ஜெயித்ததா… அதன் விளைவுகள் என்ன என்பதைச் சொல்வதுதான் அந்தக் கதை.சூரஜ் கேட்கும் கதை அதுவாக இருக்க அந்தப் படத்தை சூரஜ் ஒத்துக்கொண்டாரா அதில் அவரது தலையீடு இருந்ததா என்பதெல்லாம் மெயின் கதையில் உள்ள சுவாரசியங்கள்.

கணவனை கொன்றவனின் தலையை வெட்டிக்கொண்டு வருவதுதான் தலையாய வேலை என்று கர்ஜிப்பவர் ஆனால் அதற்கு பின் ஒன்றுமே செய்யாதது பெரும் குறை.போலீஸ் கமிஷனராக வரும் ஜீவா ரவிக்கு சின்ன பாத்திரம்தான் என்றாலும் நிறைவாக செய்திருக்கிறார். பவன் எழுதி இயக்கியிருக்கும் இதன் திரைக்கதை மிகவும் நுட்பமானது. மூன்று நிலைகளில் நின்று கதை சொல்ல வேண்டிய அவசியத்தில் அதைக் குழப்பம் இல்லாமல் சொல்லி இருக்கிறார். அதிலும் காதலியின் கணவன்தான் கொல்ல வந்த நபர் என்று கண்ணா ரவி புரிந்து கொள்வதும் ஆனால் அவர் மீது அந்த குடும்பமே அன்பைப் பொழிவதுமாக வரும் எபிசோடுகள் அடுத்து என்ன நடக்கும் என்கிற பரபரப்பைக் கூட்டுகிறது.
அதற்குப் பின் நடக்கும் சம்பவங்கள் எல்லாமே அதிரடி.
நேரிலேயே பார்ப்பது போன்ற உணர்வை ஒளிப்பதிவாளரும், தேவையான உணர்ச்சிகளைக் கடத்துவதில் இசையமைப்பாளரும், பரபரப்பை பக்குவமாக தந்திருப்பதில் படத்தொகுப்பாளரும் நிறைய வேலை பார்த்திருக்கிறார்கள்.நாம் செய்தித்தாள்களில் பார்க்கும் நிஜ சம்பவங்களின் அடிப்படையில் இந்தக் கதை அமைக்கப்பட்டு இருப்பதுடன், அந்த கதை எப்படி சொல்லப்படுகிறதோ அதுவே உண்மையாக இருக்க சாத்தியமில்லை என்கிற உண்மையைப் போட்டு உடைத்திருக்கிறார் இயக்குனர். இதைப் பார்க்கும்போது தமிழ்நாட்டில் தினசரி நாளிதழ்களில் நாம் படித்த பழைய வழக்குகள் இதுபோல இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது கடைசியாக உண்மையை அவிழ்க்க மறுக்கிறார் இயக்குனர்.தொடர்ந்து ஓடிடி தளத்தில் வெற்றியை மட்டுமே தக்க வைத்துக்கொண்ட ஜி5வுக்கு இந்த வேடுவன் மாபெரும் வெற்றி வெப் சீரிஸ்.