• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் ’மகாராஜா’ திரைப்படம் நேற்று துபாய், புர்ஜ் கலிஃபாவில் கொண்டாடப்பட்டது!

by Tamil2daynews
June 7, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் ’மகாராஜா’ திரைப்படம் நேற்று துபாய், புர்ஜ் கலிஃபாவில் கொண்டாடப்பட்டது!

 

சிறப்பான கதைகளைத் தேர்தெடுத்து அதனை உயர்தரமான தயாரிப்பு மதிப்பீட்டுடன் தமிழ் சினிமாவுக்கு பேஷன் ஸ்டுடியோஸ் வழங்கி வருகிறது.  ’தி ரூட்’ நிறுவனத்துடன் பேஷன் ஸ்டுடியோஸ் கைக்கோத்து இன்னும் நல்ல திரைப்படங்களை வழங்க இருக்கிறது.  அந்த வகையில், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ஐம்பதாவது திரைப்படமான ’மகாராஜா’ வர்த்தக ரீதியாக எதிர்பார்க்கப்படும் ஒன்றாக உள்ளது. கவனம் ஈர்க்கும் காட்சிகளுடன் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்குள்ளாகி இருக்கு இந்தப் படம் ஜூன் 14, 2024 அன்று வெளியாகிறது. விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படம் என்பதால், இந்த சிறப்பு நிகழ்வைக் குறிக்கும் வகையில் துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபாவின் ‘மகாராஜா’ திரைப்படம் இடம்பெறும் நிகழ்வை பேஷன் ஸ்டுடியோஸ் நடத்தியது.
நடிகர் விஜய் சேதுபதி எப்போதுமே துபாய் மக்களிடம் இருந்து அபரிமிதமான அன்பையும் ஆதரவையும் பெற்று வருகிறார். விஜய் சேதுபதி தனது ஆரம்ப நாட்களை துபாயில் கழித்ததால், இந்த நாட்டு மக்களிடமிருந்து விருந்தோம்பல் மற்றும் பாசத்தைப் பெற ஒருபோதும் தவறவில்லை. நேற்று மாலை (ஜூன் 6), புர்ஜ் கலிஃபாவில் பிரமிக்க வைக்கும் ’மகாராஜா’ படம் இடம்பெற்றிருந்ததை அங்கிருந்த ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் அனுராக் கஷ்யப் கலந்து கொண்டார் மற்றும் நிகழ்வில் படக்குழுவினரும் இருந்தனர்.

’தி ரூட்’டின் ஜெகதீஷ் பழனிசாமியுடன் இணைந்து பேஷன் ஸ்டுடியோஸின் சுதன் சுந்தரம் தயாரித்துள்ள படம் ’மகாராஜா’. இப்படத்தை ‘குரங்கு பொம்மை’ புகழ் நித்திலன் சாமிநாதன் எழுதி இயக்கியுள்ளார். இப்படம் ஜூன் 14, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட தயாராக உள்ளது.

Previous Post

‘P T சார்’ திரைப்பட வெற்றி விழா !!

Next Post

’அஞ்சாமை’ படம் பார்த்துவிட்டு பத்திரிகையாளர்கள் பாராட்டு

Next Post

’அஞ்சாமை’ படம் பார்த்துவிட்டு பத்திரிகையாளர்கள் பாராட்டு

Popular News

  • இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

    0 shares
    Share 0 Tweet 0
  • வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பீப் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

    0 shares
    Share 0 Tweet 0
  • நல்லபடம் -விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நல்லபடம் -விமர்சனம்

September 21, 2026

‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

September 21, 2026

இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

September 21, 2026

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

September 21, 2026

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.