இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் பலூன் பிக்சர்ஸ் அருண்பாலாஜி தயாரிப்பில் அறிமுக இயக்குனர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில் குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய், லொள்ளு சபா மாறன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’பாட்டல் ராதா’
சென்னையில் கட்டுமானத் தொழிலாளரான நாயகன் குரு சோமசுந்தரம் இவரது மனைவி சஞ்சனா இவர்களுக்கு ஒரு பெண், ஒரு ஆண் என இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.எந்நேரமும் மதுகுடிப்பதே வேலையாக வைத்திருக்கிறார்
இதனால், பொறுமை இழக்கும் அவரின் மனைவி சஞ்சனா குரு சோமசுந்தரத்தை போதை மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பி வைக்கிறார். அங்கே அவர் எதிர்பாராத துன்பங்கள் எல்லை மீறிப் போக, அங்கிருந்து தப்பித்து விடுகிறார்.

பாட்டல் ராதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் குரு சோமசுந்தரம் அந்த கதாபத்திரத்திற்கு பலம் சேர்க்கும் விதத்தில் இருந்தது நிஜ குடிகாரராகவே அந்த கதாபாத்த்திரத்தில் வாழ்ந்திருக்கிறார். குரு சோமசுந்தரத்தின் மனைவியாக நடித்திருக்கும் சஞ்சனா நடராஜன் எதார்த்த நடிப்பின் மூலம் கவனம் பெறுகிறார்.
மது போதை மறுவாழ்வு மையத்தின் உரிமையாளராக நடித்திருக்கும் ஜான் விஜய், அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார். ஆண்டனி, பாரி இளவழகன், ஆறுமுகவேல், அபி ராமையா, ஜே.பி.குமார், கே.எஸ்.கருணா பிரசாத், சுஹாசினி சஞ்சீவ், ஓவியர் சோவ்.செந்தில், நவீன் ஜார்ஜ் தாமஸ், காலா குமார், அன்பரசி என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்றவாறு பயணிக்கிறது.ரூபேஷ் ஷாஜியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்க்கிறது.
இன்றைய சமூகத்தில் மது பழக்கத்தால் குடும்பங்களை எந்த நிலைமைக்கு செல்கின்றன என்பதை மைய கருவாக வைத்து திரை படத்தை உருவாக்கியிருக்கிறார். இயக்குனர் தினகரன் சிவலிங்கம் தான் சொல்ல வந்த கருத்த அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
மொத்தத்தில் ’பாட்டல் ராதா’ – குடும்பங்கள் கொண்டாட வேண்டிய சிறந்த படைப்பு