”குடும்பஸ்தன்” – விமர்சனம்

இந்நேரத்தில் தன்னுடன் வேலை செய்யும் நண்பனால் பிரச்சனை ஏற்பட்டு பாலாஜி சக்திவேலினால் வேலை பறி போகிறது . குடும்பத்தினர்களுக்கு தெரிந்தால் தேவையில்லாத சிக்கலாகிவிடும் என்பதால், வீட்டில் சொல்லாமலேயே குடும்ப செலவுகளை சமாளிக்க ஆயிரக்கணக்கில் வட்டிக்கு கடன் வாங்குகிறார் மணிகண்டன். ஒரு கட்டத்தில் தன் அக்காளின் கணவனான குரு சோம சுந்தரம் இவரது வேலை பறி போன விஷயத்தை குடும்பத்தினர் அனைவரது முன்னிலையில் அம்பலபடுத்துகிறார்.
மேலும் ஏதாவது ஒரு வகையில் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க சொந்தமாக மணிகண்டன் பேக்கரி கடையை திறக்க அதுவும் எதிர்பார்த்தது போல் அமையாமல் நஷ்டம் அடைகிறது.இக்கட்டான சூழ்நிலையில் பாலாஜி சக்திவேல் மீண்டும் வேலை கொடுக்க ,,குடும்பத்தாரின் நடவடிக்கையால் மேலும் பணம் சம்பாதிக்க வெளிநாட்டிற்கு செல்வதற்கான முயற்சியை மேற்கொள்கிறார் மணி கண்டன்.

கதைக்கேற்றபடி இயல்பான நடிப்பில் நாயகியாக நடித்திருக்கும் சான்வி மேகனா,தன் சகோதரியின் கணவனாக குரு சோமசுந்தரம் ,அப்பாவாக நடித்திருக்கும் ஆர்.சுந்தரராஜன், அம்மாவாக நடித்திருக்கும் குடசனத் கனகம், அக்காவாக நடித்திருக்கும் நிவேதிதா ராஜப்பன், இயக்குநர் பாலாஜி சக்திவேல், பிரசன்னா பாலச்சந்திரன், ஜென்சன் திவாகர், அனிருத் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் நடிப்பில் தங்கள பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர் .
இசையமைப்பாளர் வைசாக் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ,ஒளிப்பதிவாளர் சுஜித் என்.சுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் .
நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஒருவனது கதையை கொண்டு அன்றாடம் தன் குடும்பத்திற்காக தேவைப்படும் பணத்திற்காக ஒவ்வொரு ஆணும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை இயல்பு தன்மை மாறாமல் பிரசன்னா பாலச்சந்திரனுடன் இணைந்து கதை, திரைக்கதை எழுதியிருக்கும் ராஜேஷ்வர் காளிசாமி அனைவரும் ரசிக்கும்படி குடும்ப படமாக படத்தை இயக்கியுள்ளார்.