• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

கிருஷ்ணா – ஈடன் நடிக்கும் முற்றிலும் மாறுபட்ட ஹாரர் படம் ” பல்லவபுரம் மனை எண் 666 ” ரிஷி இயக்குகியுள்ளார்.

by Tamil2daynews
August 13, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
21
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

கிருஷ்ணா – ஈடன் நடிக்கும் முற்றிலும் மாறுபட்ட ஹாரர் படம்  ” பல்லவபுரம் மனை எண் 666 ” ரிஷி இயக்குகியுள்ளார்.

 

அஷ்டலக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் என்ற புதிய பட நிறுவனம் தயாரித்துள்ள முற்றிலும் மாறுபட்ட ஹாரர் படம் ” பல்லவபுரம் மனை எண் 666 ”

திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ரிஷி.

ஈரம், அனந்தபுரத்து வீடு, அழகிய அசுரா போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த கிருஷ்ணா இந்த படத்தின் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
ஆண்டவ பெருமாள், இருக்கு ஆனா இல்ல, பனிவிழும் நிலவு, திரைக்கு வராத கதை, ழகரம், துரிதம் போன்ற படங்களில் நாயகியாக நடித்த ஈடன் இந்த படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார். மற்றும் ரேகா சுரேஷ், சுனில், மாலா, நேகா, ரக்ஷை, ஸ்ரீஜித், ராம்கி, சுதந்திரம், சோலை ஆகியோர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – வில்லாலன்
இசை  – மாருதி நம்பி
பாடல்கள் – முத்துபாரதி,  சிந்துநதி பூ செந்தமிழன்
எடிட்டிங் – R.T. அண்ணாதுரை
நடனம் – சம்பத்ராஜ்
மக்கள் தொடர்பு – மணவை புவன்.
தயாரிப்பு மேற்பார்வை – சாலைப்பட்டி N.P. மனோகரன்.
Vfx – ரக்ஷய்
தயாரிப்பு  – அஷ்டலக்ஷ்மி மூவி மேக்கர்ஸ்.

கதை – S.முத்துபழனியப்பன்

திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் இயக்குனர் K. பாலசந்தந்தரிடம் உதவி இயக்குனரா பணியாற்றிய ரிஷி.
படம் பற்றி இயக்குனர் ரிஷி பேசியதாவது…

வெளிநாட்டில் பணிபுரியும் தருண் (கிருஷ்ணா). அவனது மனைவி இறந்த பிறகு, தனது 6 வயது குழந்தை ஜனனியை (நேகா) கவனித்துக்கொள்ள, சினேகாவை (ஈடன்) திருமணம் செய்து கொண்டான். ஆனால் ஜனனி, சினேகாவை தன் தாயாக கருதாமல், சித்தியாகவே பாவிக்கிறாள். ஜனனி தன் தோட்டத்தில் இருந்த ரோஜா பூவுடன் உறவை வளர்த்து, அதை தன் தாயாக கருதி, அந்த ரோஜாவை அம்மா என்று அழைக்கிறாள். அந்த ரோஜா, ஓர் ஆன்மாவால் ஆட்கொள்ளப்பட்டிருந்தது. ஜனனி ரோஜாவின் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தாள், அந்த ரோஜாவும், ஜனனியை தன் மகளாகவே கருதியது. ஒரு தாயாக, அனைத்து இன்பங்களையும், அரவணைப்பையும் ஜனனிக்கு கொடுக்கிறது. தன் மகளை பார்க்க தருண் சென்னைக்கு வருகிறான். அவன் தனது வீட்டிற்கு வந்தது முதல், பல்வேறு அசாதாரண நிகழ்வுகளையும், துன்பங்களையும், அந்த ரோஜா பூவில் உள்ள ஆன்மாவால்  அனுபவிக்கிறான்.

ஏன் ஜனனி மீது அன்பு செலுத்தும் ஆன்மா, அவள் தந்தையை பழி வாங்க துடிக்கிறது? தருண் என்ன தவறு செய்தான்? தருண் அந்த ஆன்மாவிடமிருந்து தப்பிப்பிழைத்தானா?  இக்கேள்விகளுக்கான விடையே ‘பல்லவபுரம் மனை எண் 666’ திரைப்படம்.

இத்திரைப்படத்தை தமிழகமெங்கும் ‘ஶ்ரீ பஞ்சாட்சரம் ஃபிலிம் மேகர்ஸ்’ வெளியிடுகிறார்கள்.
Previous Post

ஜென்டில்மேன்-2’ ஆரம்ப விழா – ஆஸ்கர் நாயகன் எம்.எம்.கீரவாணிக்கு பாராட்டு விழா!

Next Post

முழுக்க முழுக்க மலேசியாவில் படமான வெற்றி நடிக்கும் ” லாக் டவுன் நைட்ஸ் ” ( Lock Down Nights ) S.S.ஸ்டான்லி இயக்யிருக்கிறார்.

Next Post

முழுக்க முழுக்க மலேசியாவில் படமான வெற்றி நடிக்கும் " லாக் டவுன் நைட்ஸ் " ( Lock Down Nights ) S.S.ஸ்டான்லி இயக்யிருக்கிறார்.

Popular News

  • பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • “மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

    0 shares
    Share 0 Tweet 0
  • அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கலர் யெல்லோ இணைந்து வழங்கும் இந்தியாவின் ஃபேன்டஸி குடும்பத் திரைப்படமான, யாமி கெளதம் கர் நடிப்பில் உருவாகியுள்ள ‘நய்யி நவெல்லி’!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடித்திருக்கும் ‘தி பாரடைஸ் – The Paradise ‘ படத்தின் டீசர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் டிராக் ‘தேடியே போறேன்…’ பாடல் ஹிப் ஹாப் ஆதி மற்றும் டி.இமான் ஆகியோரால் வெளியிடப்பட்டது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

August 22, 2026

பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

August 22, 2026

ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM)

August 22, 2026

இருமுடி கட்டு – விமர்சனம்

August 22, 2026

”நடிகர் கவுண்டமணிதான் இன்ஸ்பிரேஷன்”…நடிகர் அப்துல் லீ!

August 22, 2026

“மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

August 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.