• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஒரே மேடையில் நாத்திகரும் ஆத்திகரும் “கபில் ரிட்டன்ஸ்” படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா

by Tamil2daynews
September 24, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
ஒரே மேடையில் நாத்திகரும் ஆத்திகரும் “கபில் ரிட்டன்ஸ்” படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா
தனலட்சுமி கிரியேஷன்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தை பேராசிரியர்.ஸ்ரீனி சௌந்தரராஜன் இயக்கி கதாநாயகனாக நடித்திருக்கிறார். இப்படத்தில் நிமிஷா ரியாஸ்கான், ‘பருத்திவீரன்’சரவணன், வையாபுரி, மாஸ்டர் பரத், மாஸ்டர் ஜான்,

பேபி ஷர்ஷா மற்றும் பலரும் நடித்திருக்கிறார்கள்.

இதன் பாடல்கள் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் பேராசிரியர் சுப வீரபாண்டியன், இயக்குனர்கள் ஆர்.வி. உதயகுமார், பேரரசு, கவிஞர் சினேகன், பட அதிபர் என்.விஜயமுரளி நடிகர் வையாபுரி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

 சுப வீரபாண்டியன் பேச்சு 

நான் இந்த விழாவில் கலந்து கொள்வதை பற்றி சமூக வலைதளத்தில் அழைப்பை பதிவிட்டிருந்தேன். இதில் கேள்விகள் எழுப்பப்பட்டது. திரைப்பட விழாவில் நீங்கள் எப்படி ?அதுவும் ஆத்திரான  இயக்குனர் பேரரசும்,நீங்களும் ஒரே மேடையில் எப்படி? என பல்வேறு விதமாக கேள்விகள் எழுப்பப்பட்டது.

வெவ்வேறு கட்சிகள் என்பது சினிமா மேடைக்கு அல்ல. எஜமான், சின்ன கவுண்டர் படத்தை நான்     உட்கார்ந்து பார்த்தவன். அந்த வாய்ப்பு இந்த மேடையில் எனக்கு கிடைத்துள்ளது.

திரைப்படம் நடிக்காமல் எம்ஜிஆர் அரசியலுக்கு வந்திருக்க முடியுமா? அதில் வெற்றி தான் பெற்றிருக்க முடியுமா? நாம் கலையை நேசிப்பதை விட கலைஞர்களின் நிலையை சிறப்பாக நேசிக்க கற்றுக் கொண்டிருக்கின்றோம். அதனால் ஆயிரம் மேடைகளில் பேசுவதை படத்தில் அரை மணி நேரத்தில் கூறிவிடுகிறார்கள். படத்தை ஒரு முறை  பார்த்தால் போதும் அது மனதில் நிற்கும்.

திரைப்படம் எடுப்பது நல்ல தொழில்தான். நல்ல படைப்புகளை கொண்டு சேர்த்தால் மக்களுக்கு போய் சேரும். இதை கருத்தில் கொண்டுதான நல்ல கதையை எடுத்திருக்கிறார் ஸ்ரீனி சௌந்தரராஜன்.அதுவே மிகச்சிறந்த தொண்டாக நான் பார்க்கிறேன். படத்தின் பாடல்களை ஒரு முறை கேட்டேன், நான்கு ஐந்து முறை கேட்கத் தோன்றியது இதுவே இந்த படத்திற்கு வெற்றி என்று சுப. வீரபாண்டியன் பேசினார் .

இயக்குனர் பேரரசு உரை

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர் ஐயா சுப.வீ தான்.அவருடைய வாழ்த்து படத்திற்கு முக்கியமானது.நான் கடவுள் ஏற்பாளர்,அவர் கடவுள் மறுப்பாளர்.

சுப.வீ ஐயா நல்லதையே நினைப்பவர்.அவரின் மனசு தான் கடவுள் போன்றது. எனவே கடவுளையும் வணங்குகிறேன்.

அவரையும் வணங்குகிறேன்.

படத்தை எடுத்துக் கொண்டால் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஏற்றாற்போல் படம் எடுத்திருக்கிறார் இயக்குனர் பேராசிரியர் ஸ்ரீனி.சௌந்தரராஜன். நான் படம் பார்க்க சென்றால என் மகளோடு தான் செல்வேன். ஆகவே பெண் குழந்தைகளும் பார்க்கும் படமாக இப்படம் உள்ளது. இது இளைஞர்களும் பெற்றோர்களும் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய ஒரு அற்புதமான படம். மனதார வாழ்த்துவதில் நான் பெருமை அடைகிறேன் என்றார் இயக்குனர் பேரரசு.

 கவிஞர் சினேகன் பேச்சு

 எல்லா கனவுகளும் நிறைவேற அனைவரின் ஒத்துழைப்பும் தேவை.  ஆனால் இவர் தன்னைத்தானே  செதுக்கிக்கொண்டு தன்னை உருவாக்கி இருக்கிறார் இந்த படத்தின் இயக்குனர் ஸ்ரீனி சௌந்தரராஜன்.

படத்தின் இயக்குனர் பேராசிரியர்.ஸ்ரீனி செளந்தரராஜன் பேச்சு

மூச்சிருக்கும் வரை முயற்சி செய்யுங்கள் உங்கள் கனவை நிறைவேற. ஆறிலிருந்து அறுபது வயதுவரை இந்த கதை பொருந்தும் என்பார்கள். ஆனால் ஆறிலிருந்து மூச்சு இருக்கும் அனைத்து நபர்களுக்கும் இந்த கதை பொருந்தும்.நமது கனவு நிறைவேற மூச்சிருக்கும் வரை முயற்சி செய்யுங்கள் என்றார்.

கிரிக்கெட் பவுலரை மையப்படுத்தி உருவாகியுள்ள கதை.

ஒளிப்பதிவு-

ஷியாம் ராஜ்

பாடல்கள் – 
கவிஞர் சினேகன்,
கவிஞர் பா.விஜய்

கவிஞர் அருண்பாரதி

இசை – 

ஆர்.எஸ்.பிரதாப் ராஜ்

மக்கள் தொடர்பு – வெங்கட்

நிர்வாகத் தயாரிப்பு-ஏ.ஆர்.சூரியன்

கதை திரைக்கதை வசனம் இயக்கம்-

பேராசிரியர்.ஸ்ரீனி சௌந்தரராஜன்

Previous Post

ஷாருக் கானின் மீர் அறக்கட்டளை- பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து ஜவானின் சிறப்புக் காட்சிகளை திரையிட்டது..!

Next Post

பிரபலங்கள் வெளியிட்ட தீ – இவன் இசை இன்று முதல்.

Next Post

பிரபலங்கள் வெளியிட்ட தீ - இவன் இசை இன்று முதல்.

Popular News

  • பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • “மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

    0 shares
    Share 0 Tweet 0
  • விஜய் விஷ்வாவின் புது அவதாரம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM)

    0 shares
    Share 0 Tweet 0
  • இருமுடி கட்டு – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

August 22, 2026

பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

August 22, 2026

ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM)

August 22, 2026

இருமுடி கட்டு – விமர்சனம்

August 22, 2026

”நடிகர் கவுண்டமணிதான் இன்ஸ்பிரேஷன்”…நடிகர் அப்துல் லீ!

August 22, 2026

“மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

August 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.